தமிழ்ப் பழமொழிகள் 4/ம

விக்கிமூலம் இலிருந்து

பெள


பெள வந்து எழில் கொள்.

பெளவப் பெருமை தெய்வச் செயலே.

பெளவம் உற்றது ஆக்கை செவ்வை அற்றது ஆக்கை.


மக்கப் பிறப்பு மகிமைப் பிறப்பு.

மக்கட் பேறும் மழை பெய்கிறதும் மகாதேவனுக்குக் கூடத் தெரியாது. 17650


மக்கத்துக்குப் போயும் நொன்டிப் பக்கிரி காலில் விழுந்தது போல.

மக்கள் உடம்பு பெறற்கு அரிது.

மக்கள் களவும் வரகு பதரும் சரி.

மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும்.

மக்கள் பொன்னாக இருந்தாலும் மாப்பொன் குறையாமல் இருக்குமா? 17655


மக்கள் வயிறும் வாடக் கூடாது; ஆனை அரிசியும் குறையக் கூடாது.

(யானை அரிசியும்.)

மக்களுக்குச் சத்துரு மாதா பிதா.

மக்களைக் காக்கும் மணத்தக்காளி.

மக்காவுக்குப் போய்க் கொக்குப் பிடித்தது போல.

(போயா கொக்குப் பிடிக்க வேணும்?)

மக்குப் பிளாஸ்திரி. 17660


மகத்தில் பிள்ளை ஜகத்தில் இல்லை.

மகத்தில் மங்கை, பூரத்தில் புருஷன்.

மகத்துச் சனி,

மகத்துத் தகப்பன் முகத்தில் விழியான்.

மகத்துப் பெண் வசத்திலே கிடையாது. 17665

(கிடைக்காது.)


மகத்துப் பெண் சகத்துக்கு அதிசயம்.

மகத்துப் பென் முகத்துக்கு ஆகாது.

மகதீசுவரத்தை எண்ணி மனப்பால் குடிக்கிறது.

மகம் மன்னன் ஆவான்.

மகமாயிக்கு மடிப்பிச்சை. 17670


மகமேருவைச் சேர்ந்த காகமும் பொன்னிறமாம்.

(யாப்பருங்கலக் காரிகை.)

மகராஜனுக்கு இடம்விடக் கூடாது; ஏழைக்கு ஆசை சொல்லக் கூடாது.

மகராஜனுக்கு வாழ்க்கைப்பட்டு மஞ்சளுக்குத் தரித்திரமா?

மகள் செத்தால் பிணம்; மகன் செத்தால் சவம்.

மகள் செத்தாள்; தாய் திக்கு அற்றாள். 17675


மகள் பிள்ளையை இடுக்கியும், மகன் பிள்ளையை நடத்தியும்.

மகளுக்கு எட்டோடே எட்டு எண்ணெய், மருமகளுக்குத் தீவிளிக்குத் தீவிளி :எண்ணெய்.

மகளுக்குக் குட்ல் பாக்கியம் தவிர மற்றப் பாக்கியம் எல்லாம் இருக்கிறது.

மகளுக்குப் புத்தி சொல்லித் தாய் அவிசாரி போனாளாம்.

(அதர்மவழி நடந்தாளாம்.)

மகளே, உன் சமர்த்து. 17680

மகளே வல்லாண்மை.

மகம் அறிவு தந்தை அறிவு.

(பழமொழி நானுாறு.)

மகன் பிள்ளையை இடுக்கியும், மகன் பிள்ளையை நடத்தியும்.

(யாழ்ப்பாண வழக்கு.)

மகன் செத்தாலும் சாகட்டும்; மருமகள் கொழுப்பு அடங்கினால் போதும்

(கொட்டம்.)

மகன் செத்தாலும் சாகட்டும்; மருமகன் தாலி அறுக்க வேணும். 17685


மகாதேவசி ஆடிடித்துப் பேயும் ஆடுகிறது.

மகா பட்டாதார்ச் செல்லாம் மானமாம்; மாட்டுக்காரப் பிள்ளைக்குச் சரணமாம்.

மகா புருஷர் மகிமை பிறவிக் குருடனுக்குத் தெரியுமா?

மகா பெரியவர் மண்டையிலே புழுத்தவர்.

(பழுத்தவர்)

மகாமகம் ஆனால் பார்க்கக் கூடாது. 17690


மகாமகம் பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு விசை வரும்.

மகாராஜன் கல்யாணத்தில் நீராகாரம் நெய் பட்ட பாடு.

மகாராஜன் பெண்சாதி மர்மச்சாரி, யாருடன் சொன்னாலும் திறமைக்காரி.

(மாநிலத்தில் சென்றாலும் இல்லாத திறமைக்காரி.)

மகாராஜன் மண்ணைத் தின்றால் மருந்துக்குத் தின்றாள் என்பார்கள்; பிச்சைக்காரன் மண்ணைத் தின்றால் வயிற்றுக்கு இல்லாமல் தின்றான் என்பார்கள். 17695


மகாராஜனோடு சொக்கட்டான் போடலாமோ

(ஆடலாமோ?)

மகாராஜா சத்ரபதி, அன்னசத்திரம் இராப்பட்டினி.

மகாலஷிமி பரதேசம் போனாற்போல.

(என்றானாம்.)

மகிமைக்கார மாப்பிள்ளை வந்திருக்கிறான் தேசப்பிலே.

மகிமைக்கு அஞ்சிய மருமகனே. எருமைக் கன்றைக் கொல்லாதே. 17700


மகிமை சுந்தரி, கதவை ஒஞ்சரி.

மகிகைப் பட்டவனுக்கு மரணம்; மாட்டுக்காரப் பையனுக்குசி சரணம்.

மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழ்கிறாள்; அதிலும் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்.

(குவளையிலே சாகிறாள்.)

மங்கம்மா காலத்துப் பேச்சு; எங்கம்மா காலத்தில் போச்சு.

மங்கம்மா சாலை மலைமேலே சோலை. 17705


மங்கம்மா வந்தாள்; தங்கமழை பெய்தது.

மங்கலம் முந்தியா? மண் முந்தியா?

(மங்கலம்-மண்கலம்)

மங்கலம் முதல் மணக்குடி வரை.

(கன்யாகுமரி வழக்கு.)

மங்கலமும் திருநாள்; மகள் வீடும் கல்யாணம்; அங்கேதான்

போவானா? இங்கேதான் வருவானா?

மங்கும் காலத்தில் மாப் பூக்கும்; பொங்கும் காலத்தில் புளி பூக்கும். 17710


மங்கும் காலம் மாங்காய்; பொங்கும் காலம் புளி.

மங்குலைக் கண்டி மயிலைப் போல ஆடுகிறாள்.

மங்கை தீட்டானால் கங்கையில் மூழ்குவாள்; கங்கை தீட்டானா எங்கே மூழ்குவாள்?

மங்கை நல்லாள் பெண் பெருமாள் வாழ்த்தெல்லாம்

எத்தனை நாள்? திங்கள் ஒரு பொழுதும் செவ்வாய் பகல் அறுதி, மங்கை முந்தியா. 17715

(மங்கை-உத்தரகோச மங்கை.)


மங்கையர் கண் பெருவிரலைப் பார்க்கும் போதே கடைக்கண் உலகிெல்லாம் சுற்றும்.

மங்கையரில் மீனாட்சி; மாப்பிள்ளைகளில் சொக்கலிங்கம்.

மச்சக் காசில் மிச்சம் இருக்காது.

மச்சத்தின் குஞ்சுக்கு இப்படி என்றால் மாதாவுக்கு எப்படியோ?

மச்சம் விற்ற காசு மன்னனுக்கு ஆகாதா? 17720


மச்சான் அடித்தது உறைக்கவில்லை; மதனி சிரித்தது உறைத்ததாம்.

மச்சான் உறவு மலை மீதும் உண்டு.

மச்சான் செத்தால் மயிர் போச்சு: கம்பளி நமக்காச்சு.

மச்சானை நம்பினால் உச்சாணியில் இருக்கலாம்.

(கிருஷ்ணார்ஜூனர்.)

மச்சானைப் பார்கக உறவும் இல்லை; மயிரைப் பார்க்கக் கறுப்பும் இல்லை. 17725

மச்சில் ஏற்றி ஏணியை வாங்கி விட்டால்.

மச்சினன் உண்டானால் மலை ஏறிப் பிழைக்கலாம்.

மச்சினன், தயவு உண்டானால் மலை மீதும் ஏறலாம்.

மச்சு ஏற்றி ஏணி களைவு.

(பழமொழி நானூறு. )

மச்சு விட்டில் குச்சு வீடு மேல். 17780


மச்சை அழித்தால் குச்சுக்கும் ஆகாது.

(ஆம்)

மச்சைப் பிரித்தால் குச்சும் ஆகாது.

மச நாய்க்குச் சாராயம் உற்றினாற்போல,

மச நாய் சாவது எப்போது? ஊர் சுத்தம் ஆவது எப்போது?

மசான வைராக்கியம். 17785


மசிர் விழுங்கினாற்போல் இருக்கிறது.

மஞ்சள் குளித்து மலைமேலே இருக்கும்போது மாட்டேன் என்றீரே;

பிள்ளை பெற்று நொந்திருக்கச்சே வேண்ட வந்தீரே.

(தோண்ட)

மஞ்சள் வைபபது மதவை நிலத்தில்.

மஞ்சளும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சில் நினைப்பதே போதும்.

மஞ்சனமும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சத்தில்

நினைப்பதே போதகம், 17740


மஞ்சு சுறுத்தால் மண்ணச்ச நல்லுருக்கு வேட்டிை.

(அரிசி விலையை ஏற்றுவார்கள்.)

மட்கி மண்ணாயிருக்கிறான்.

மட்டற்ற சேனை கிட்டிே இருந்தாலும் கட்டக் கயிறுடன் அட்டி

காசத்துடன் வருவான்.

மட்டாய் இருந்தது மதனி குடி வாழ்க்கை.

மட்டான போஜனம் மனசுக்கு மகிழ்ச்சி. 17745


மட்டி எருக்கிலை. மடல் மடலாய் பூத்தாலும் மருக்கொழுந்து வாசனை ஆகுமா?

(மானப் பூத்தாலும்.)

மட்டித் துலுககனும முட்டாவி நாயக்கனும் பட்டாளத்துக்குத் தான் லாயக்கு.

மட்டிப் பயலுக்குத் துட்டக் குருக்கள்.

மட்டியிலும் மட்டி மகா மட்டி.

மட்டு இல்லாமல் கொடுத்தாலும் திட்டுக் கேட்கலாகாது. 17750

(திட்டிக் கொடுத்தல் தகாது.)

மட்டை இடம், குட்டி வலம்.

மட்டைக் கரியையும் மடைப்பள்ளியாரையும் நம்பப்படாது.

(மடைப் பள்ளியையும்.)

மட்டைக்கு இரண்டு கீற்று.

மட்டைக்கு ஏற்ற குட்டை,

மட்டைக்கு ஏற்ற கொட்டாப்புளி. 17755


மடக் கிழவியிலும் புத்தியுள்ள வாலியன் அதிகம்.

(கிழவனிலும்.)

மடக்குக் கீரையை வழித்துப் போடடி, மதிகெட்ட பெண்டிாட்டி

மடக் கேள்விக்கு மாறு உத்தரம் இல்லை.

(மாற்று உத்தரம்.)

மடக் கொடி இல்லாத மனை பாழ்.

மடங்காக் குதிரைக்குச் சவுக்கடி. 17760


மட சாம்பிராணி.

மடத்து நாயைச் சாத்துவது போலச் சாத்த வேணும்.

மடத்தையும் கட்டி மடநாயையும் காவல் வைத்தது போல.

மடநாய்க்குத் தடியடி மிச்சம்.

மடப் பெருமையே தவிர நீராகாரத்துக்கும் வழியில்லை.

மடம் பிடுங்கிக் கொண்டு நந்தவனத்துக்கு வழி எங்கே என்றானாம். 17765


மடம் புகுந்த நாய் தடியடிக்குத் தப்பாது.

மடம் விட்டவனுக்கு நந்தவனத்தின்மேல் சபலம்.

(ஆசை ஏன்?)

மடிச் சீலையும் குறையாமல் மக்கள் முகமும் வாடாமல்.

மடிப் பழத்தை விட்டுத் துறட்டுப்பழத்துக்கு நின்றாளாம்.

மடிப்பிச்சை மங்கிலியப் பிச்சை, 17770


மடி மாங்காய் போட்டுத் தலை வெட்டலாமா?

மடியில் இருக்கிற அவல் கொடாதவர் மச்சில் ஏறிக்கொடுப்பார்களா?

மடியில் இருந்த பணம் போய் வழியில் இருந்த சண்டையை வலுவில் இழுத்ததாம்.

மடியில் குழந்தையைக் கிடத்தி ஊர் முழுதும் தேடினாளாம்.

மடியில் கொட்டினால் எடுக்கலாம்: வாயால் கொட்டினால் எடுக்க முடியாது. 17775

மடியில் நெருப்பைக் கட்டிக் கொள்வார்களா?

மடியில் பணம் போய் வழியில் சண்டையை இழுத்ததாம்.

மடியிலே கனம் இருந்தால்தானே வழியிலே பயம்?

மடியிலே பிள்ளைப் பூச்சியைக் கட்டிக் கொண்ட மாதிரி.

மடியிலே பூனைக் குட்டியைக் கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பது போல. 17780

மடியிலே மாங்காய் போட்டுத் தலையை வெட்டலாமா?

மடியை அறுத்துப் பால் குடித்தது போல.

(மடுவை.)

மடியைப் பிடித்துக் கல்லைக் கட்டி மயிரைப் பிடித்துக் காசு வாங்கினான்.

(கள்ளை ஊற்றி கள்ளைக் கொடுத்து விட்டு. முடியைப் பிடித்து.)

மடியைப் பிடித்துக் கள் வார்த்து மயிரைப் பிடித்துக் காசு வாங்குகிறதா?

மடியைப் பிடித்து மாங்காய் போட்டு முடியைப் பிடித்துப் பணம் வாங்கு. 17785


மடி விதை முந்து முன்னே பிடி விதை முந்தும்.

மடை ஏறப் பாய்ச்சினால் தடை ஏற விளையும்.

மடையன் வரகு விதை.

மடையனுக்கு மறுமொழி இல்லை.

மடைவாய்க் கொக்குப் போல. 17790


மண் ஆயினும் மனை ஆயினும் காப்பாற்றினவர்களுக்கு உண்டு,

மண் இட மண் இட வீட்டுக்கு அழகு: பொன் இடப் பொன் இடப் பெண்ணுக்கு அழகு.

மண் உருகப் பெய்யும் புண்ணியப் புரட்டாசி.

மண் ஒரம் நின்று வழக்கு ஒரம் பேசுவது போல.

மண் கட்டிப் பிள்ளைக்கு எரு மூட்டை பணியாரம். 17795


மண் காசுக்குச் சாம்பற் கொழுக்கட்டை.

மண் குதிரை ஆற்றில் இறங்குமா?

மண் குதிரையை நம்பி ஆற்றிலே இறங்கலாமா?

மண் சோறு புண் படுத்தும்.

மண்டுக்குப் புளி; மனைக்கு வேம்பு. 17800

(மண்ணுக்குப் புளி.)


மண்டை உள்ள மட்டும் சளி போகாது.

(உள்ளவரையில். சனி இருக்கும்.)

மண்டைக்குத் தக்க கொண்டை, வாய்க்குத் தக்க பேச்சு.

(ஏற்ற கொண்டை.)

 மண்டைக்குத் தகுந்த கொண்டை போட வேணும்.

மண்டையில் எழுதி மயிரால் மறைத்தது போல.

மண்டையில் துணியைக் கட்டிக்கொண்டுச் சண்டைக்கு மார் தட்டுகிறது. 17805


மண்டையை உடைத்து மாவிளக்குப் போட்டிடுவேன்.

மண்ணாங்கட்டி, தெருப்புழுதி.

மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எரு முட்டை பணியாரம்.

மண்ணாங்கட்டியின் குரல் மலைக்குக் கேட்குமா?

மண்ணாய்ப் போவான் காலன், கண்ணா மண்ணா தெரியவில்லை. 17810


மண்ணால் ஆனாய்; மண்ணாய் இருக்கிறாய்.

மண்ணில் இருந்து பெண் ஓரம் சொல்லாதே.

மண்ணில் இருந்து வழக்கு ஓரம் சொல்லாதே.

மண்ணில் பிறந்து மண்ணில் வளர்ந்து.

மண்ணில் முளைத்த பூண்டு மண்ணுக்கு இரையாகும். 17815


மண்ணிலே கிடந்த பொன்னுக்கு மதிப்புக் கொடுத்தது ஆசாரி.

மண்ணிலே பிறந்தது மண்ணில் மறையும்.

மண்ணின்மேல் நின்று பெண் ஓரம் சொல்லாதே.

(இருந்து)

மண்ணை ஆண்டவர் மணலினும் கோடிப் பேர்.

மண்ணுக்குத் தீட்டிப் பார்; பெண்ணுக்குப் பூட்டிப் பார். 17820

(மண்ணுக்குப் பூசிப் பார்.)


மண்ணுக்குள் இருக்கும் மாயாண்டி உரிக்க, உரிக்கத் தோலான்டி,

(வெங்காயம்.)

மண்ணுக்குள் இருப்பது மகிமை; அதை எண்ணிப் பார்ப்பது கடுமை,

மண்ணை ஆண்ட மன்னவர் எத்தனையோ?

(எத்தனை பேர்.)

மண்ணைக் கவ்வுகிற பயில்வானுக்கு மசாலாக் கறி வேறேயா?

மண்ணைக் கீறி மண்ணிலே படுக்கிறார்கள். 17825


மண்ணை தின்றாலும் மறையத் தின்னு.

(மறைவில் தின்னு.)

மண்ணை நம்பினோரும் மன்னனை நம்பினோரும் வீண் போகார்.

மண் தின்னி தைமாசப் பிறப்பு; மாத்தின்னி கார்த்திகை.

மண் தின்னும் குழந்தைக்கு மருந்தூட்டத் தின்பண்டம் காட்டிச்

செல்லத்தாய் அழைப்பது போல.

 மண்ணோடே பிறக்கலாம், உன்னோடே பிறந்ததில்

மண் திண்ணும் பாம்பு போல. 17830


மன்பான்டத்தில் இருப்பதைத் தோல் பாண்டத்தில் போடு.

மண் பானை பொங்கல் மணக்குதாம்; மாணிக்கத் தொந்திக்குப் பசிக்குதாம்.

மண் பிள்ளையாரை நம்பி ஆற்றில் இறங்காதே தம்பி.

மண் பிள்ளையானாலும் தன் பிள்ளையாய் இருக்க வேணும்.

மண் பூனை ஆனாலும் எலி பிடிக்கிறதென்று. 17835


மண் பூனை ஆனாலும் எலி பிடித்தால் சரி.

மண் பூனை எலியைப் பிடிக்குமா.

( + மதிகெட்ட ராசாவே.)

மண் மண்ணோடு; விண் விண்ணோடே.

மண் மாமியார் பண்ணினதும் மறைந்தாளாம் கிழவி.

மண் மாரி பெய்தால் மணல் வாரி விளையும். 17840


மண்மேல் இருந்து வழக்கு ஓரம் சொல்லுகிறதா?

மண் வாயும் இல்லை; மர வாயும் இல்லை.

மண் விற்ற காசும் பெண் விற்ற காசும் மண்.

மண் வெட்டிக் காம்புக்கு மரத்தைச் செதுக்கினால் அரிவாள் பிடிக்காவது ஆகாதா?

மண் வேலையோ புண் வேலையோ. 17845


மணக்க மணக்கச் சாப்பிட்டாலும் கிழக்கு வெளுக்க மலந்தான்.

மணக் கோலம் போய்ப் பிணக்கோலம் ஆச்சுது.

மணப்பறையே பிணப்பறை ஆவதும் உண்டு.

மணம் இல்லாத மலரும் மனைவி இல்லாத வீடும் பாழ்.

மணமகன் பிணமகன் ஆனான். 17850


மணமும் பிணமும் போகிற வீதியில் நின்று போகிறது.

மணல் காட்டுக் கிழங்கு என்றால் மேலாகவா கிடக்கும்?

மணல் வெட்டி ஊதல் அறியுமோ?

மணல் உழுது வாழ்ந்தவனும் இல்லை: மண் உழுது கெட்டவனும் இல்லை.

மணல் சோற்றில் கல் ஆராய்ந்தாற்போல். 17855


மணல் நிலம் தாரார்; கனி நிலம் வேண்டாம்; களர் நிலம் தந்தால் கைப்பாடு படலாம்.

(உத்தமம். அதமம். மத்திமமான நிலங்கள். செங்கல்பட்டு ஜில்லா வழக்கு)

மணலில் பிடுங்கின வள்ளிக்கிழக்கு போல இருக்கிறான்.

மணலில் புரளும் நாயைப் போல.

மணலின் மேல் விழுந்த மழைத்துளி உடனே மறையும்.

மணலும் கல்லும் மலிந்த பண்டம் புலவர்க்கு. 17860


மணலை அளவிட்டாலும் மனசை அளவிடக்கூடாது.

மணலைக் கயிறாகத் திரிப்பான்; வசனத்தை வில்லாய் வளைப்பான்.

மணலையும் தேசி வடமாக்கலாம்; மணிமுடிச் சிரத்தில் வாழ்ந்திடும் துன்பம்,

மணி அடித்தால் சோறு; மயிர் முளைத்தால் மொட்டை.

மணி என்ன. அறுந்து விழுந்தால் இரண்டு. 17865


மணி நா அசையாமல் ராஜ்ய பாரம் பன்னுகிறது.

மணி மந்திர ஒளவுதம்.

மணியக்காரன் வீடு போல வயிறு பற்றிக் கொண்டு எரிகிறது.

மணியக்காரனுக்கு அரை நாழிகை வேலை: தணியக்காரனுக்குத் தண்டால் அடி.

மணியம் பார்த்த ஊரில் கூலிக்கு அறுப்பதா? 17870


மணியும் ஒளியும் போல்.

மணியாம் பருக்கை போட மகிழ்ந்த கடனைப் போல.

மணையில் பெண்ணை மாற்றி வைக்கிறது; திண்ணையில் பெண்ணைத் திருப்பி வைக்கிறது.

மத்தகத்தில் யானை மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போல.

மத்தகஜத்துக்கு முன் சிற்றெறும்பு நடந்தது போல. 17875


மத்த கஜம் போல் நடக்கிறான்.

மத்தளத்துக்கு இரு பக்கம் அடி.

மத்து இட்ட தயிர் போல் புத்தி குழம்புகிறது.

மதகு அடி சாவியானாலும் மலை அடி சாவி ஆகாது.

மதகு அடி நன்செயும் மலை அடிப் புன்செயும். 17880


மதம் பிடித்த யானைக்கு மாவுத்தனைத் தெரியுமா?

மதம் பிடித்த யானை போல.

மதம் விரதம் கேட்குது; மத்தியான்னம் பழையது கேட்குது.

மதயானை ஏறியும் திட்பு வாசலில் நுழைந்தாற் போல.

மதயானைக்குப் போனது மார்க்கம். 17885


மதயானை கண்பட்ட மாவுத்தனும் மாற்றாந்தாய் கண்பட்ட குழவியும்.

மதயானையை அடக்கக் கோணி ஊசியைத் தேடினானாம்.

மதயானையை அடக்குவார் உண்டா?

மதலைக்கு இல்லை கீதமும் அறிவும்.

மதனிக்கு வெள்ளைச் சாதமா? 17890


மதனும் ரதியும் போல் வாழ்ந்திருக்க வேண்டும்.

மதாபிமானம், ஜாதி அபிமானம், தேசாபிமானம்.

மதி இருக்க விதி இழுக்கும்.

மதி இல்லாத விண் ஆனேன்: மருந்து இல்லாத புண் ஆனேன்.

மதி கெட்ட வேளாளன் சோற்றை இழந்தான். 17895


மதி பாதி மருந்து பாதி.

மதி புதன் மயிர் களை.

மதி மோசமோ விதி மோசமோ?

மதியாத வாசலில் மிதியாதிருப்பதே உத்தமம்.

மதியாதார் தலைவாசல் மிதியாதே 17900


மதியாதான் வாசலிலே வல்லிருளே ஆனாலும் மிதியாமல் இருப்பதே கோடி பெறும்.

மதியும் உமது; விதியும் உமது.

மதியை மீன் சூழ்ந்தது போல.

(மீன் - நட்சத்திரம்.)

மதியை விதி மறைக்கும்.

மதியை வெல்ல வேதனாலும் முடியாது. 17905


மதில்மேல் இருக்கிற பூனை போல் இருக்கிறான்.

மதில்மேல் ஏறிய பூனை எந்தப் பக்கமும் குதிக்குமாம்.

மது பிந்து கலகம் போல் இருக்கிறது.

மதுரம் இல்லாக் கவி போல.

மதுரைக்கு தெற்கே மரியாதை இல்லை. 17910

(கொங்கு தாட்டு வழக்கு.)


மதுரைக்கு வழி எங்கே? வாயிலே.

மதுரை பாராதவன் கழுதை.

மதுரையில் அடிபட்டு மானாமதுரையில் மீசை துடித்ததாம்.

மதுரையில் பூசணிக்காய் மாட்டு விலை.

மதுரையில் மூட்டை தூக்கச் செங்கல்பட்டில் சும்மாடா? 17915


மதுரையைப் பார்த்தவனும் கழுதை, மதுரையைப் பார்க்காதவனும் கழுதை,

மதுவும் மாதரும் தீமையின் அஸ்திவாரம்.

 மந்தரகிரியால் குழம்பும் கடல் வானோர்க்கு அமுதம் ஈந்தாற் போல்.

மந்தாரப் போது பெண்களுக்குக் கேடு.

மந்தாரப் போது மதிகெட்ட பையன்களுக்குக் கேடு. 17920


மந்தாரப் போது மதி கெட்டுப் போகும்; மதிகெட்ட பெண்ணுக்கு அடி வாங்கி வைக்கும்.

மந்தி மயிரை மருந்துக்குக் கேட்டால் மரத்துக்கு மரம் தாவும்.

மந்திரத்தால் மாங்காய் விழுமா?

மந்திரத்தில் கட்டுண்ட நாகம் போல.

மந்திரம் இல்லாக் குருக்களுக்கு மணியே துணை. 17925

(தெரியாதே.)


மந்திரம் இல்லாப் பூசை அந்திபடுமளவும்.

மத்திரம் கால், மதி முக்கால்.

மந்திரம் பாதி, தந்திரம் பாதி,

மந்திரி இல்லா யோசனையும் ஆயுதம் இல்லச் சேனையும் கெடும்.

மந்திரிக்கும் உண்டு மதி கேடு. 17930


மந்திரி புத்திக்கு மதி மோசம் வந்தது.

மந்திரி வீட்டிலே முந்திரி பூத்தது; வாய்க்கு எட்டினது கைக்கு எட்டவில்லை.

(முந்திரி காய்த்தது.)

மந்தையிலும் பால், வீட்டிலும் தயிரா?

மந்தைவெளி நாய்க்குச் சந்தையில் என்ன வேலை?

மப்புக்காரன் தப்புக் கொட்டுவானா? 17935

(தட்டுவானா?)


மப்புக்காரன் போலத் தப்புத் தப்பாய்ப் பேசுகிறது.

மப்புத் தாளம் தட்டுகிறாய்.

மயானத்தில் வீட்டைக் கட்டிப் பேய்க்கு அஞ்சலாமா?

மயான வைராக்கியமும் பிரசவ வைராக்கியமும்.

மயிர் உள்ள சீமாட்டி இடக்கையாலும் முடிவாள்; வலக்கையாலும் முடிவாள். 17940


மயிர் உள்ள சீமாட்டி எப்படி முடிந்தாலும் அழகுதான்.

(எப்படி முடிந்தால் என்ன?)

மயிர் உள்ள சீமாட்டி வலக்கொண்டையும் போடுவான்;

இடக்கொண்டையும் போடுவாள்.

மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்.

மயிர் ஊடாடாத நட்புப் பொருள் ஊடாடக் கெடும்.

மயிர்க் கம்பளி இடையன் தலை மேலே. 17945


மயிர் சிக்கினால் உயிர் வைக்குமா கவரிமான்.

மயிர் சுட்டுக் கரியாகுமா?

மயிர்பிடிச் சண்டை.

மயிர் பிடி, மண் பிடி.

மயிர் பிளக்க வழி தேடினாற் போல. 17950


மயிர் பிளந்தென்ன விவகாரம்.

மயிர் மயிர் என்ற குழந்தை மசிர் மசிர் என்கிறது.

மயிர் விலகினால் மலை விலகும்.

மயிரிலே சவ்வாது வாங்கினாற் போல.

மயிருக்கும் நகத்துக்கும் மதிப்பு இருந்த இடத்தில். 17955


மயிரைக் கொண்டு மாங்காய் எறிந்தால் மாங்காய் விழட்டும்; அல்லது மயிர் விழட்டும்.

மயிரைப் போட்டு மலையை இழுத்தால் வந்தால் மலை; போனால் மயிர்தானே?

மயிரைப் போலக் கறுப்பு இல்லை; மைத்துனனைப் போல உறவு இல்லை.

மயில் ஆடுகிறது என்று வான்கோழி ஆடினாற் போல.

மயில் இரவில் கத்தினால் தப்பாமல் வரும் மகிமை மழை. 17960


மயில் ஒத்திக்கு வலியக் கண்ணைக் கொடுத்தது போல்.

மயில் கண்ணிக்கு மசக்கை வந்தால் மாப்பிள்ளைக்கு அவஸ்தை.

மயில் பப்படாம்; மசால் வடை.

மயில் போலும் கன்னி

மயில் வாகனத்தின்மேல் சுப்பிரமணிய சுவாமி போல. 17965


மயிலாப்பூர் ஏரி உடைந்து கொண்டு போகிறது என்றால், வருகிற கமிட்டிக்கு

ஆகட்டும் என்றாற் போல.

மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா? இழுத்து வைத்துப்

பிடுங்கினால் கொடுக்கும்.

மயிலைக் கண்டு வான்கோழி ஆடினாற் போல.

மர்க்கட சீடனும் மார்ஜால குருவும்.

மர்க்கட நியாயத் தீர்ப்பு. 17970

மர்க்கட முஷ்டி,

மரக்கட்டையைச் சார்ந்த புல் கலப்பைக்கு அஞ்சாது.

மரக் கோனல் வாய்ச்சியால் நிமிரும்.

மரணத்திலும் கெட்ட மார்க்கத்துக்குப் பயப்படு.

மரணத்துக்கு நாலு பக்கமும் வழி. 17975


மரணத்துக்கு நாள் நட்சத்திரம் இல்லை.

மரணத்துக்கு வழி மட்டு இல்லை.

மரத்தால் கட்டி அடிக்கிறது.

மரத்தில் அணில் ஏற விட்ட நாய் போல.

மரத்தில் அறைந்த முளையை மர்க்கடம் பிடுங்கினாற் போல. 17980


மரத்தில் இருந்து விழுந்தவன்மேல் தேர் ஓடினது போல.

மரத்தில் இருந்து விழுந்தவனைப் பாம்பு கடித்தது போல.

மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போல.

(முட்டியது போல.)

மரத்தின் கீழ் ஆகா மரம் .

(பழமொழி நானுாறு.)

மத்து அடியில் விழுந்த விதை முளைக்காது. 17985


மரத்துப் பழம் மரத்தடியிலே விழும்.

(மரத்தண்டை.)

மரத்தை இலை காக்கும்; மானத்தைப் பணம் காக்கும்.

மரத்தை மறைத்தது மாமத யானை.

(திருமந்திரம்.)

மரத்தை வெட்டி மரத்தின் மேலே சாய்க்கிறது போல்.

மரத்தை வைத்துக் கொண்டு பழத்தைக் கோர வேண்டும். 17990


மர நாயிலே புனுகு வழிக்கலாமா?

மர நிழலில் மரம் வளராது.

மரம் இல்லாத ஊருக்குக் கொட்டைச் செடி மரம்.

மரம் ஏறிக் கை விட்ட கதை.

மரம் ஏறிக் கைவிட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டார்கள். 17995


மரம் ஏறுகிறவன் பிட்டத்தை எத்தனை தூரம் தாண்டுகிறது?

மரம் குறைக்கும் ஈர் வாள் மயிர்களைய மாட்டாது.

(பழமொழி நானுாறு.)

மரம் சுட்டால் கரி ஆம்; மயிர் சுட்டால் கரி ஆமா? மரம் சுட்டுக் கரியாக வேணுமேயல்லாமல் மயிர் சுட்டுக் கரி ஆகுமா?

மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் நிழல் கொடுக்கும். 18000


மரம் நட்டவன் தண்ணீர் வார்ப்பான்.

(விடுவான்.)

மரம் நட்டவனுக்குத் தண்ணீர் வார்க்கக் கடன்.

மரம் நல்லது; முசுடு கெட்டது.

(பொல்லாதது.)

மரம் பழுத்தால் வெளவாலை அழைக்க வேண்டியதில்லை.

மரம் போக்கிக் கூலி கொள்பவர் இல்லை. 18005

(மரம்-ஒடம், பழமொழி நானூறு.)


மரம் மழுங்கினால் மத்துக்கு ஆகும்; மனிதன் மழுங்கினால் ஏதுக்கு ஆவான்?

மரம் முற்றினால் சேகு; மனிதன் முற்றினால் குரங்கு.

மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும் மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.

மரம் வைத்த நாயன் தண்ணீர் ஊற்ற மாட்டானா?

மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான். 18010


மரம் வைத்தவனுக்குத் தண்ணீர் ஊற்றத் தெரியாதா?

மரமரப்புக் காரனுக்கு மூன்று இடத்திலே மலம்.

மரியாதை இல்லாதவன் மகிமை அற்றான்.

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு.

மரியாதை தப்பினால் மாலவாடு. 18015

(கெட்டால்.)


மரியாதை ராமன் வழக்குத் தீர்த்தாற் போல.

மரியாள் குடித்தனம் சரியrய்ப் போச்சு.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

(அருண்ட தெல்லாம்.)

மருத்துமாவுக்குச் செய்க்கிளை; மடங்காக் குதிரைக்குச் சவுக்கடி.

மருத்துவம் பார்க்கப் போனால் வந்ததைத் தாங்க வேனும். 18020


மருத்துவர்க்கு நோயை மறைக்கலாமா?

(பழமொழி நானூறு. )

மருதமுத்து மாரு மாதம் காதவழி மாயமாய்ப் பறக்கும்.

மருந்துக்கும் கிடையாது.

மருந்து கால், மதி முக்கால்.

 மருந்து சாப்பிட்டு மாமரத்தடியிலும் போகக்கூடிாது: விஷத்தைச் சாப்பிட்டு வேப்பமரத்தடியிலும் போகலாம். 18025


மருந்து தின்றால் பிழையாய் என்றால் மயிர்தான் திண்ணமாட்டேன் என்கிறான்.

மருந்தும் மாயமும்.

மருந்தும் விருந்தும் மூன்று நாள்.

(மூன்று பொழுது.)

மருந்தே ஆயினும் விருந்தோடு உன்.

மரு பூமியில் தண்ணீர் பெற்றார் போலே. 18030

(மருபூமி - பாலைவனம்.)


மருமகள் சோறு தின்றவரும் வாசற்படியில் தூங்கியவரும் ஒன்று.

மருமகளும் மாமியாராவாள்.

மருமகனுக்கு என்று ஆக்கிய சோற்றை மகனுக்குப் போட்டு வயிறு எரிந்தாளாம்.

(அறிந்தாளாம்.)

மருமகளே. மருமகளே. கோழிக்கறிக்குப் பதம் பாரடி; மாமியாரே, மாமியாரே, அது கொக்கோ என்று கொத்த வருகிறது.

மருமகனோடு உண்ணவில்லை என்கிறார்கள் என்று மாமியார் வார்த்த நெய்யைப் புரட்டி உண்டாளாம், மாமியாரைக் கட்டவில்லை என்கிறார்கள் என்று தன் அரை நாண் கயிற்றை அறுத்துத் தாலி கட்டினானாம். 18035


மருவில் தின்ற சாப்பாட்டை லங்கணத்தில் நினைத்துக் கொண்டது போல.

(உண்ட)

மருவுக்கு வாசனை வந்தது போல.

மருவும் மலரும் போல.

மரைக்காயர் வீட்டு மரைக்காயர்.

மரைக்காயருக்கும் உண்டு மாட்டுப் புத்தி. 18040


மல்லாக்கப் படுத்துக்கொண்டுக் மார்பில் உமிழ்ந்து கொண்டாற்போல.

மல்லாந்த தோஷம் வயிற்றில் அடைத்தது.

மல்லாந்து துப்பினால் மார்மேல் விழும்.

(உமிழ்ந்தால்.)

மல்லாந்து படுத்து எச்சிலைத் துப்பினால் மார்மேல் தானே விழும்? மல்லாந்து படுத்துக் கொண்டா அல்லாவைத் தொழுகிறது? 18045


மல்லாந்து படுத்துக் கொண்டு மாரில் உமிழ்ந்து கொண்டது போல.

மல்லுக்கட்டிப்பிடுங்கியும் கொடாதவனா வலுவில் அழைத்துக் கொடுக்கப் போறான்?

மல்லுக்கட்டுக்காரனுக்கு மாகாணிப் பங்கு.

மல்லுக்கு ஒரு மாகாணிப் பங்கு

மல்லுக்கு மாப்பங்கு ஆகிலும் வைத்துக் கொள்ள வேணும். 18050


மலடி அறிவாளா பிள்ளையின் அருமை?

மலடிக்குத் தெரியுமா பிரசவ வேதனை?

(பிள்ளை வலி , மகப்பேறு வருத்தம்.)

மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?

(பிள்ளை வருத்தம் )

மலடிக்குத் தெரியுமா மகப்பேறு வருத்தம்.

மலடி பின்ளை பெற்றாற் போல. 18055


மலடி பெற்ற மகன் போல.

மலடி மகப் பெற்றாள்.

மலடி மகன்.

மலடி மகனைப் பெற்றது போல.

மலடி வயிற்று மகன் போல. 18060


மலத்தைக் கண்ட நாய்க்கு வாய் ஊறுவது போல,

மலப்பஞ்சம் நாய்க்கு உண்டோ?

மலம் தின்ன வந்த நாய் மாணியைக் கடித்ததாம்.

மலர்த் தேனை வண்டு அல்லாமல் மண்டூகம் குடிக்குமோ?

மலராத பூவுக்கு மணம் ஏது? 18065


மலரில் மணமும் எள்ளில் எண்ணெயும் உடலில் உயிரும் கலந்தது போல.

மலரும் மணமும் போல்.

மலரைக் கசக்கி மணம் கொள்வார் உண்டோ?

மலரைக் கசக்கி மோந்து பார்க்கலாமா?

மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும். 18070

(சந்தைக்கு வரும்.)


மலிந்தது கொள்ளா வணிகரும் பதரே.

மலிந்த பண்டம் கடையிலே வரும்.

மலிந்தால் தெருவில் வரும்.

மலிந்த பண்டம் கொள்ளாத வணிகன் பதர்.

மலை அடி கெட்டாலும் மதகடி கெடாது. 18075


மலை அடி புன்செய்; மதகடி நன்செய்.

மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கற்பூரம்.

மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை சாம்பிராணி.

மலை அத்தனை சாமிக்குத் தினை அத்தனை புஷ்பம் சாத்தினாலும் போதும்.

மலை அத்தனை சாமிக்கு மலையத்தனை புஷ்பம் போடுகிறார்களா? 18080

(மலர் படைக்கிறார்களா?)


மலை அத்தனை சாமிக்கு மிளகு அத்தனை கர்ப்பூரம்.

மலை அத்தனை பாவத்திலே கடுகு அத்தனை புண்ணியம்.

மலை இடிந்து விழுந்தாலும் மரப் பொன்னுக்குச் சேதம் இல்லை.

மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்.

மலை இலக்கு. 18085


மலை இற்று மயிரில் தொங்குகிறது.

(தொங்குகிற வேளை.)

மலை உச்சியில் கல் ஏற்றுதல் அரிது; மலையிலிருந்து கல்லைத் தள்ளுவது எளிது.

மலை எவ்வளவு, உளி எவ்வளவு.

மலை ஏறப் போனாலும் மச்சான் தயவு வேணும்.

மலை ஏறி மேய்ந்தாலும் ஆட்டுக்குட்டி கோனான் குட்டி தானே? 18090


மலை ஏறினாலும் மைத்துனனைக் கை விடாதே.

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

மலைக்கும் மண்ணாங்கட்டிக்கும் சரியா?

மலைக்கு மண்கட்டி ஆதரவா?

(ஆதரவு.)

மலை கல்லி எலி பிடித்தது போல. 18095


மலை கலங்கினாலும் மனம் கலங்கப் போகாது.

மலை கறுத்தால் மழை வரும்.

மலை குலைந்தாலும் நிலை குலையல் ஆகாது.

மலைச்சாரல் மழையும் மங்கையின் மனமும் திடீரென மாறும். மலை கட்டுக் கரி ஆகுமா? மயிர் சுட்டுக் கரி ஆகுமா? 18100


மலைத்தவருக்குப் பலன் லபிக்கிறதா?

(பலன் கிடைக்குமா?)

மலைத் தேன் முடவனுக்குக் கிட்டுமா?

(வருமா)

மலை நெல்லிக்காய்க்கும் கடல் உப்புக்கும் உறவு செய்தவர் யார்?

மலைப் புளுகு கலப் புளுகாய் இருக்கிறது.

மலை பெரிதானாலுல் சிற்றுளியால் தகரும். 18105


மலை போல் இருக்கிற தேரும் சிறு சுள்ளாணியால் நிலை பெறும்,

மலை போலப் பிராமணன் போகிறானாம்; பின் குடுமிக்கு அழுகிறாளாம்.

மலை போலப் பிராமணன் மாய்த்தானாம்; அவன் உச்சிக்கு அழுதாளாம் பிராமனத்தி.

மலை போன்ற சாமிக்கு மலை போலப் படைக்க முடியுமா?

மலை மல்லிகைக்கு எதிர் பூத்ததாம் ஊமத்தை. 18110


மலை மீது இருப்பவரைப் பன்றி எப்படிப் பாயும்?

மலை மேல் இருக்கிறவனைப் புலி பாயுமா?

மலை மேல் ஏற்றிய விளக்குப் போல.

மலை மேல் மலையாக விழுந்தாலும் மனம் கலங்காத தீரன்.

மலையாளத்துக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கே. 18115


மலையாளத்து யானை பருக்கை தேய்ப்பது போல.

மலையாளம் பெய்து விளைகிற சீமை, தஞ்சாவூர் பாய்ந்து விளைகிற சீமை.

(பேய்ந்து.)

மலையில் விளைந்த மூலிகை ஆனாலும் உரலில்தான் மசிய வேண்டும்.

மலையில் விளைந்தாலும் உரலில்தான் மசிய வேண்டும்.

(பிறந்தாலும்.)

மலையிலும் மானம் பெரிது. 18120


மலையின் உயரம் மலைக்குத் தெரியுமா?

மலையின் வாயில் பொழுதும் நுளையன் வாயில் சோறும்.

(வயிற்றில்.)

மலையுடன் மண்ணாங்கட்டி எதிர்ப்பது போல. மலையும் மலையும் இடித்துக் கொள்ளும் போது மண்ணாங்கட்டி எந்த மூலை?

மலையும் மலையும் பொருதது போல. 18125


மலையே மண்ணாங்கட்டி ஆகிற போது, மண்ணாங்கட்டி எப்படி ஆகும்?

மலையே விழுந்தால் மண்ணாங்கட்டியா தாங்கப் போகிறது?

மலையே விழுந்தாலும் தலையே தாங்க வேண்டும்.

மலையை என் தலைமேல் தூக்கி வைத்தால் நான் எடுத்துக்

கொண்டு போகிறேன்.

மலையைச் சுற்றடித்தவன் செடியையாகிலும் சுற்றடிப்பான். 18130


மலையைச் சுற்றி அடித்தவனைச் செடியைச் சுற்றி அடியானா?

மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?

மலையைத் துளைக்க வாச்சி உளி வந்தாற் போல.

மலையைத் துளைக்கிற சிற்றுளி போல.

மலையைத் தூக்கி மடியில் கட்டுகிறவன். 18135


மலையைத் தூக்கி வைத்தால் அதைச் சுமக்கிறேன் என்றானாம்.

மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கிறதா?

மலையை நம்பி இரு; அல்லது ஆற்றை நம்பி இரு.

மலையை நோக்கி நாய் முறைத்தது போல.

மலையைப் பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு வலிக்குமா? மலைக்கு வலிக்குமா? 18140

(நாய்க்குச் சேதமா? மலைக்குச் சேதமா? நாய்க்குக் கேடா?)


மலையைப் பார்த்து நாய் குரைத்தாற் போல.

மலையைப் பிடுங்கும் மாகாளியம்மைக்குக் காடு ஒரு சுண்டைக்காய்.

மலையை மயிர் முனையால் துளைக்கலாமா?

மலையை மயிரால் கட்டி இழு: வந்தால் மலை வரட்டும்; அறுந்தால் மயிர் அறட்டும்.

(வராவிட்டால் மயிர் அறட்டும்.)

மலையை மயிரால் கட்டி இழுத்தாற் போல. 18145


மலையை மலை தாங்கும்: மண்ணாங்கட்டி தாங்குமா?

மலையை விழுங்கும் மாரியாத்தாளுக்கு உரல் சுண்டைக்காய்.

மலை வளந்தானே நிலவளம் என்பர்?

மலைவாயிலே சூரியன்; மறவன் வாயிலே சோறு.

(மலைவாயிலே பொழுது.)

மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கியா? 18150


மலை விழுங்கிச் சுன்டெலியைப் பெற்றது போல.

மலை விழுங்கி மகாதேவனுக்குக் கதவு அப்பளம்.

மலை விழுங்கி மாத்தாங்கிக்கு வண்டிச் சக்கரம் அப்பளம்.

மலை விழுங்கி மாரியாத்தாளுக்கு உரல் சுண்டாங்கி.

மலைவிழுங்குவதற்கு மண்ணாங்கட்டி பச்சடியா? 18155


மலை விழுந்தால் மண்ணாங்கட்டி தாங்குமா?

மலை விழுந்தாலும் தலையே தாங்க வேண்டும்.

மவ்விடப் பவ்வாயிற்று.

மழலைச் சொல் கேளாத காதில் நெருப்பைக் கொட்டு.

மழுங்கணி மாங்கொட்டை. 18160

(மழுங்குணி.)


மழுங்கலுக்கு வட்டியிலே போடு; சவுங்கலுக்குச் சட்டியிலே போடு.

மழை இல்லாததற்குக் குளிர் அதிகம்: வரிசை இல்லாததற்கு வாய் அதிகம்.

மழைக்கால் இருட்டிலும் மறு மாதரைத் தொடருகிறதா?

மழைக்கால் இருட்டு ஆனாலும் மந்தி கொம்பு இழக்கப் பாயுமா?

(கொம்பு இழந்து.)

மழைக்கால் இருட்டு ஆனாலும் வாய்க்குக் கை தெரியாதா? 18165


மழைக்கால் இருளேனும் மந்தி கிளைபாய்தல் பிழைக்காது.

(கொம்பு இழந்து பாயுமா?)

மழைக்கால இருட்டானாலும் கொம்பு தவறிக் கொக்குப் பாயுமா?

மழைக் காலத்தில் பதின் கலத்திலும் கோடைக் காலத்தில் ஒரு குடம் நீர்.

மழைக்கு ஒதுங்க வந்த பிடாரி மனைக்குச் சத்தம் போட்டதாம்.

(வழக்குப் பேசினாளாம்.)

மழைக்குக் குடை உண்டு; இடிக்குக் குடை உண்டா? 18170

(குடையா?)


மழைக்குத் தண்ணிர் மொண்டு வார்ப்பவர் யார்?

மழைக்குப் படல் கட்டிச் சாத்தியமா?

(சாத்தலாமா?)

மழைக்கும் இடிக்கும் படல் கட்ட முடியுமா?

மழைக்கோ படல்? இடிக்கோ படல்?

மழைப் பேறும் பிள்ளைப் பேறும் மகாதேவனுக்கும் தெரியா. 18175

மழை பெய்கிறதும் பிள்ளை பெறுகிறதும் மகாதேவனுக்கும் தெரியா.

மழை பெய்தால் அடி மறக்காது.

மழை பெய்து அடி மறைந்தாற் போல.

(ஒடி மறைந்தாற் போல.)

மழை பெய்து குளம் நிறையுமா? பனி பெய்து நிறையுமா?

மழை பெய்து நிறையாதது மொண்டு வார்த்தால் நிறையும். 18180


மழை பெய்தும் கெடுத்தது. காய்ந்தும் கெடுத்தது.

(பேய்ந்ததும்.)

மழை பெய்து விடியுமா? பனி பெய்து விடியுமா?

மழை பெய்து விளைய வேணுமே தவிரப் பனி பெய்து விளையப் போகிறது இல்லை.

மழைமுகம் காணாப் பயிரும் தாய்முகம் காணாச் சேயும் வாட்டமாம்.

(பிள்ளையும்.)

மழையில் நனைந்த நாய் முடங்கிப் படுத்தது போல 18185


மழையில் போட்டாலும் நனைகிறது இல்லை; வெயிலில் போட்டாலும் காய்கிறது இல்லை.

மழையிலும் நனைய மாட்டான்; வெயிலிலும் காயமாட்டான்.

மழையும் பிள்ளைப்பேறும் மகாதேவரருக்கும் தெரியாது.

மழை வறண்டால் மணக்கத்தை விதை.

மழைவாய்க் கருக்கல் ஆனாலும் மந்தி கொம்பு விட்டுக் கொம்பு தாண்டாது. 18190



மழை விட்டும் தூவானம் விடிவில்லை.

மழை விழுந்தால் தாங்கலாம்; வானம் விழுந்தால் தாங்கலாமா?

மறத்தி தாலியும் பள்ளித் தாலியும் வற்றாத் தாலி.

மறதி பாராதவன் கழுதை.

மறந்த உடைமை மக்களுக்கு ஆகாது. 18195


மறந்த சடங்கை மகத்தில் விடு,

(திருமழபாடியில் மகம் விசேஷம்.)

மறந்த ததியை மகத்தில் கொடு,

மறந்து செத்தேன்; பிராணன் வா என்றால் வருமா?

(செத்தால் உயிர் வருமா?)

மறவன் உறவும் பனை நிழலும் சரி.

(போல நீடியாதன.)

மறுசாதம் போட்டுக் கொள்ளாவன் மாட்டுப் பிறப்பு. 18200

மறுமங்கையருக்கும் மறுமன்னவருக்கும் மார்பும் முதுகும் கொடாமல் இரு.

மறைத்துக் கட்ட மாற்றுப் புடைவை இல்லை.

மறைந்த புதன் நிறைந்த தனம்.

மறைப்பினும் ஆகாதே தம் சாதி மிக்கு விடும்.

(பழமொழி நானுாறு.)

மன் உயிரைத் தன் உயிர் போல் நினை. 18205


மன்மதக் காட்டு ஓணான்.

மன்மதக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கே.

மன்மதன் அவனைப் பம்பரம் போல் ஆட்டுகிறான்.

மன்னர்க்கு அழகு செங்கோல் முறைமை.

மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும். 18210

(திருக்கோவையார்.)


மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை.

(மகிமை.)

மன்னவர்கள் செத்தார்கள்; மந்திரிகள் செத்தார்கள்; முன் இருந்தோர் எல்லாம் முடிந்தார்கள்.

மன்னவன் எப்படி, மன்னுயிர் அப்படி.

மன்னன் இல்லாத நாடும் மந்திரி இல்லாத அரசும்.

மன்னன் எவ்வழி, குடிகள் அவ்வழி. 18215


மன்னன் சொல்லுக்கு மறு சொல் உண்டோ?

மன்னார்குடி பழந்தரித்திரம்.

மன்னார்குடி மதில் அழகு.

மன்னார் சாமி போல.

மன்னுயிர்களைத் தன் உயிர் போல நினை. 18220


மனக் கசடு அற மாயை நாடேல்.

மனக் கவலை பலக் குறைவு.

மனக் கஷ்டப்படலாம்; மக்கள் கஷ்டம் பொறுக்காது.

மனக் காவல் பெரிதா, மன்னன் காவல் பெரிதா?

மனக் குரங்கு எப்படி வேண்டுமானாலும் தாவும். 18225


மனச்சாட்சியை விட மறு சாட்சி வேண்டாம்.

(உண்டா இல்லை.)

மனசில் இருக்கும் இரகசியம் மதிகேடனுக்கு வாயிலே.

மனசில் ஒன்றும் வாக்கிலே ஒன்றும். மனசில் உள்ளது வாயில் வரும்.

மனசில் மாசு இருக்கும் பொழுது மகான் ஆக முடியுமா? 18230


மனசிலே பகையும் உதட்டிலே உறவுமா?

மனசு அறியாப் பொய் உண்டா?

மனசு ஒத்ததே இடம்.

மனசு மதிலைத் தாண்டுகிறது. கால் வாசற்படியைத் தாண்டவில்லை.

மனசுக்குப் பிடிக்காமல் தினுசுக்கு ஒரு புடைவையா? 18235


மனசுக்கு மனமே சாட்சி; மற்றதற்குத் தெய்வம் சாட்சி.

மனசு சுத்தமானால் மந்திரம் எதற்கு?

மனசே காரணம்.

மனசே மனசுக்குப் பந்து; மனசே மனசுக்குச் சத்துரு,

மனசே ராஜா, குசுவே மந்திரி. 18240


மனசே ராஜா, மதியே மந்திரி.

(மயிரே மந்திரி.)

மனத்திலே பகை, உதட்டிலே உறவு.

மனத்துக்கம் மண்டையிலே.

மனத்துக்கு இனியவன் மாமன் மகன்.

மனத்துக்கு மனம் சாட்சி. 18245


மனத்துயர் அற்றோன். தினச் செபம் உற்றோன்.

மன நோய்க்கு மருந்து இல்லை.

(உண்டோ?)

மனப்பால் குடிக்காதே.

மனப்பால் குடித்து மாண்டவர் அநேகம்.

(அனந்தம்.)

மனப் பேயே ஒழிய மற்றைப் பேய் இல்லை. 18250

(மற்றவை பேய் அல்ல.)


மனப் பொருத்தம் இருந்தால் மற்றப் பொருத்தம் பார்க்க வேண்டாம்.

மனம் இருக்கும் மணம் போலக் கூழ் இருக்கும் குணம்.

மனம் இருந்தால் மலையும் சாயும்.

மனம் இருந்தால் மாரியம்மா; இல்லாவிட்டால் காளியம்மா.

மனம் இருந்தால் வழி உண்டு. 18255

(மார்க்கம் உண்டு.)

மனம் இருந்தும் சற்று வகை அற்றுப் போவான்.

மனம் உண்டானால் வழி உண்டு.

(இடம் உண்டு.)

மனம் கலங்கிப் பிரியாமல் பிடித்தவரிக்குப் பேறு உண்டாம்.

மனம் காவலா? மதில் காவலா?

மனம் கொண்டது மாங்கல்யம். 18260


மனம் கொண்டதே மாளிகை.

(கொள்கை.)

மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

மனம் தடுமாறேல்.

மனம் போல மாங்கலியம்.

(மனம் போல் இருக்கும் மாங்கலியம்.)

மனம் போல வாழ்வு. 18265


மனம் போன போக்குக்கு வழி இல்லை.

மனம் வெளுக்க மருந்து இல்லை.

(பாரதியார்)

மனமது செவ்வையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்.

மனமயக்கம் சர்வ மயக்கம்.

மன முரண்டிற்கு மருந்து உண்டா? 18270


மனவீதி உண்டானால் இடி வீதி உண்டு.

மனிதக் குரங்கு ஆனாலும் மல்யுத்தம் போடுமாம்.

மனிதர் காணும் பொழுது மெளனம்; காணாத பொழுது ருத்திராட்சப் பூனை.

மனிதரில் சிவப்பு அழகு; நாயில் கறுப்பு அழகு.

மனிதன் ஆரம்பமாவது பெண்ணாலே; அடங்கி ஒடுங்குவதும் பெண்ணாலே. 18275


மனிதன் கையில் மனிதன் அகப்பட்டால் குரங்கு.

மனிதன் சுற்றிக் கெட்டான்; நாய் கத்திக் கெட்டது.

மனிதன் சுற்றிக கெட்டான்; நாய் நக்கிக் கெட்டது.

மனிதன் தலையை மான் தலை ஆக்குகிறாள்; மான் தலையை மனிதன் தலை ஆக்குகிறான்.

மனிதன் மட்கினால் மண்; ஆனை மட்கினால் பொன். 18280


மனிதன் மறப்பான்; இறைபடுவான்; மாறுவான்; போவான் .

மனிதனை மனிதன் அறிவான்; மட நாயைத் தடிக்கம்பு அறியும்

(மரநாயை.)

மனிதனை மனிதன் அறிவான்; மீனைப் புளியங்காய் அறியும்.

மனுஷ பலம் துர்ப்பலம். .

மனைக் கொடி இல்லா மனை பாழ். 18285

(வீடு.)


மனையால் அன்றோ தலை வெடித்ததாம்.

மனையாள் வாசல் மட்டும்; மகன் சுடுகாடு மட்டும்.

மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்ல வேண்டாம்; மாற்றானை ஒருநாளும் நம்ப வேண்டாம்.

(மற்றவனை.)

மனைவி இல்லாத புருஷன் அரை மனுஷன்.

மனைவி இறந்தால் மணம்; மகள் இறந்தால் பிணம். 18290


மனைவி உள்ளவன் விருத்துக்கு அஞ்சான்.

மனோராஜ்யம் பண்ணுகிறது போல.

மனோவியாதிக்கு மருந்து உண்டா?

மா

மா அளந்த படியைப் போல.

மா இடித்தால் மண்டிக் கொள்கிறது; கூழ் குடித்தால் கூடிக் கொள்கிறது. 18295

மா இருக்கிற மணத்தைப் போல் அல்லவா கூழ் இருக்கிற குணம்?

(குடுவை.)

மா உண்டானால் பணியாரம் சுடலாம்.

மா ஏற மலை ஏறும்.

மாகனப் பட்டது எல்லாம் ஒரு திருணம்; மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.

மாகேச நவ பன்டித. 18300


மாங்கல்யப் பெண்ணுக்கு மாசம் இரண்டு பூசை.

மாங்காய் அழுகலும் மாப்பிள்ளையில் கிழமும் கிடையா.

மாங்காய்க் காலத்தில் மாங்காய் தின்னாவிட்டால், வீங்கித் தூங்கிச் சாவார்கள்.

மாங்காய்க்குத் தேங்காய் மருந்து.

மாங்காய்க்குத் தேங்காய்; வழுக்கைக்கு இளவெந்நீர்; பூங்கதலிக்குச் சுக்கு நீர். 18305


மாங்காய்க்குப் புளியங்காய் தோற்குமா?

மாங்காயில் பெரிசும் தேங்காயில் சிறிசும்.

மாசி ஈனா மரமும் இல்லை; தை ஈனாப் புல்லும் இல்லை.

மாசி என் மச்சின் மேலே.

மாசி என் மடியில் பணம். 18310


மாசிக் கடாவும் மார்கழி நம்பியானும்.

மாசிக் கரும்பும் மகர வாழையும்.

மாசிச் சரடு பாசிபோல் வளரும்.

(படரும்.)

மாசி நிலவும் மதியாதார் முற்றமும் வேசி உறவும் வியாபாரி நேசமும்.

மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 18315

(பிளக்கும்.)


மாசிப் பிறையை மறக்காமல் பார்.

மாசி பங்குனியில் கரும்பு அறு.

மாசி மகத்தழகும் மகாமகக் குளத்தழகும்.

மாசி மாதத்திலே மறைந்திருந்த கண்மணியே.

மாசி மணிப் பூணுால். 18320


மாசி மரம் தளிர்க்க மழை.

மாசி மழையில் மாதுளை பூக்கும்.

மாசி மாதத்தில் மகம் மதியின் தெற்குக் கோடியில் தேசமும் நாடும் செழிக்கும்.

மாசி மாதம் மண்ணாங்கட்டியும் பிள்ளை பெறுகிறது.

(யாழ்ப்பான வழக்கு)

மாசி மனப் பூக்கும். 18325


மாசி மின்னல் மரம் தழைக்கும்

மாட்டின் காலிலே நெல்; மனுஷன் காலிலே பணம்.

மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே.

மாட்டு எரு புவிசெய்க்கு தழை எரு நன்செய்க்கு.

மாட்டு எரு மறு வருஷம். 18330


மாட்டுக்கு ஓர் அடி; மனிதனுக்கு ஒரு சொல்.

மாட்டுக்குச் சர்வாங்கமும் வயிறு.

மாட்டுக்குப் பெயர் பெரிய கடா என்று.

மாட்டுக்கு மாடு சொன்னால் கேளாது: மணி கட்டின மாடு சொன்னால் கேட்கும்.

(யாழ்ப்பான வழக்கு)

மாட்டுக்கு மாடு மிரளுமா? 18335


மாட்டுக்கு மேய்ப்யும், குதிரைக்குத் தேய்ப்பும்.

மாட்டுப் பல் மகராசி; அரிசிப் பல் அவிசாரி.

மாட்டைத் தண்ணிரில் போட்டு விலை பேசுகிறாயே!

மாட்டை நடையில் பார்; ஆட்டைக் கிடையில் பார்.

மாட்டைப் பார்த்தாயா என்றால், தோட்டம் தூரம் என்றானாம். 18340

மாட்டைப் பிடித்த சனியன் கொட்டிகையைச் சுட்டால் போமா?

மாட்டைப் புல் உள்ள தரையிலும் மனிதனைச் சோறு உள்ள தலத்திலும் இருக்க ஒட்டாது.

(புல் உள்ள தலத்திலும்.)

மாட்டை மேய்த்தானாம்; கோலைப் போட்டானாம்.

மாடக்குளம் பெருகினால் மதுரை பாழ்,

(மாடக் குளம் . மதுரைக்கு மேற்கே உன்ன ஊர். அங்கே ஒரு குளம் உண்டு.)

மாடம் அழிக்கால் கூடம். 18345

(மாடம் மெலிந்தாலும் கூடம், இடிந்தால்.)


மாடிக்கு ஏணி வைக்கலாம்; மலைக்கு ஏணி வைக்க முடியுமா?

மாடு அறியாதவன் மாட்டைக் கொள்.

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது.

(இளைக்குமா?)

மாடு கன்று படைத்தவருக்கும் மக்களைப் பெற்றவருக்கும் குற்றம் சொல்லலாமா?

மாடு கிழம் ஆனாலும் பாலில் சுவை போகுமா? 18350


மாடு கெட்டால் தேடலாம்; மனிதர் கெட்டால் தேடலாமா?

மாடு திருப்பினவன் அல்லவோ அர்ஜூனன்?

மாடு தின்கிற மாலவாடு ஆடு தின்கிறது அரிதா?

மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?

மாடு தெரியாதவன் மாடக்கொம்பு மாடு வாங்கினது போல. 18355


மாடு நினைத்த இடத்தில் தொழுவம் கட்டலாமா?

மாடு பிடி சண்டைக்கு மூலிய வராதே.

மாடுபோல் உழைத்து மன்னன் போல் வாழ்.

மாடு போனவனுக்குச் செடியெல்லாம் கனி.

மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும். 18360


மாடு மலை ஏறி மேய்ந்தாலும் உடையவன் பேர் சொல்லும்,

மாடு மறத்தாலும் கறக்கும், வாலில் கயிற்றைக்கட்டினால்.

மாடு முக்க முக்க, வீடு நக்க நக்க.

(மாடு முக்கிவர, வீடு நக்கிவர.)

மாடு மேய்க்காமல் கெட்டது; பயிர் பார்க்காமல் கெட்டது.

மாடு மேய்க்கிற தம்பிக்கு மண்டலம் இட்ட பெண்சாதி. 18365


மாடு மேய்க்கிறவன் கூட மாமனார் வீட்டில் இருக்க மாட்டான்.

மாடு மேய்க்கும் குமரனுக்கு மண்டலம் எட்டும் குமரியாம்.

மாடு மேய்த்து வந்தேன்: மணி ஆட்டி வந்தேன்; சோறு போட்டி சொக்க வெள்ளாட்டி.

மாடு வாங்க அறியாதவன் மாடைக் கொம்பு மாடு வாங்கு.

மாடு வாங்குமுன் பிறந்தகத்துக்கு மோர் கொடுப்பேன் என்றாளாம் 18370


மாடு வாங்குவதற்கு முன் கன்றை விலை பேசலாமா?

மாணிக்கக் காலுக்கு மாற்றுக் கால் இருக்கிறதா?

(வைத்தது போல.)

மாணிக்கம் இருக்கிறது என்று தலையை வெட்டுகிறதா?

மாணிக்கம் விற்ற ஊரில் மண்கடை சுமக்கலாகாது.

மாத்திரை தப்ப மிதித்தால் லோத்திரம் கூறப்படும். 18375


மாதம் ஒரு மாரி பெய்தால் இரு போகம் வினையும்.

மாதம் காத வழி மாயமாய்ப் பறக்கும்.

(மாறாக)

மாதம் காதவழி மாறாகத் துள்ளுவான்.

மாதம் மும்மாரி பெய்தால் முப்போகம் விளையும்.

மாதம் மும்மாரியும் வருஷம் ஒரு பொன்மாரியும். 18380


மாதா ஊட்டாத சேற்றை மாங்காய் ஊட்டுமாம்.

(அன்னத்தை)

மாதா செய்தது மக்களுக்கு.

மாதா சொல் மடிமேல்,

மாதா பிதா செய்தது மக்கள் தலைமேல்.

மாதா பிதா மக்களுக்குச் சத்துரு. 18385


மாதா மனம் எரிய வாழாய் ஒரு நாளும்.

(வயிறு எரிய.)

மாதா வயிறு எரிய மகேசுவர பூஜை நடத்தினானாம்.

மாதாவுக்குச் சுகம் இருந்தால் கர்ப்பத்துக்கும் சுகம்.

(சுரம்.சுரம்)

மாதாவுக்கே ஆபத்து: கர்ப்பத்தைப்பற்றிக் கவலையா?

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம் போல. 18390


மாந்திரிகன் வீட்டுப் பேயும் வைத்தியன் வீட்டு நோயும் போகா.

மாப்பழுத்தால் கிளிக்கு ஆம்; வேம்பு பழுத்தால் காக்கைக்கு ஆம்.

மாப்பாய் இருக்கிற மட்டும் மடியில் வைத்திருந்தேன்; தோப்பான பிறகு மடியில் வைக்கலாமா?

மாம்பிள்ளை இருக்கிற மட்டும் மடியில் வைத்தேன்; தோப்பான பிறகு மடியில் வைக்கலாமா?

மாப்பிள்ளை என்று துரும்பைக் கிவிளிப் போட்டாலும் துள்ளும். 18395


மாப்பிள்ளைக்கு ஆக்கி வைத்த சேற்றை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்.

மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கோணல் வாய்; அதிலும் கொட்டாவி விட்டுக் காட்டினானாம்.

மாப்பிள்ளைச் சமர்த்து.

மாப்பிள்ளை சமர்த்து என்றால் செம்பை வெளுக்கத் தேய்த்தானாம்.

மாப்பிள்ளை சிங்காரிப்பதற்குன் பெண் வண்டி ஏறிவிடும். 18400


மாப்பிள்ளை சொந்தம்; துப்பட்டி இரவல்.

(அங்கவஸ்திரம்.)

மாப்பிள்ளைத் தோழனுக்குப் பெண்டு அறுதி.

(உறுதி.)

மாப்பிள்ளை தலை போனாலும் போகிறது: மாணிக்கம் போல உள்ள உரல் போகிறது என்றாளாம்.

மாப்பிள்ளை, தோப்பிள்ளை, மாங்காய்ச் சோற்றுக்குக் கதிகெட்ட பிள்ளை.

மாப்பிள்ளை, மண்ணாங்கட்டி தோப்பிள்ளை. 18405


மாப்பிள்ளையில் கிழடு இல்லை.

மாப்பிள்ளையையும் வேண்டிப் பெண்ணையும் வேண்டுகிறதா?

மாப்பிள்ளை வேண்டும் என்று மலைப்பாம்புக்கு வாழ்க்கைப்பட்டது போல.

மாப்பிள்ளை வேஷ்டியைப் பார், அத்தைப்பாட்டி புடைவையைப் போல்.

மாப் புளிக்கிறதெல்லாம் பணியாரத்துக்கு நலம். 18410

(மாவு.)


மாப்பொன் இருக்க, மக்களைச் சாவக் கொடுப்பேனா?

மாப் பொன் இருக்க மக்களைப் பட்டினி போடுவானேன்?

மாபாவி பெயரைச் சொன்னால் மாணிக்கமும் கல் ஆகும்.

மாம்பழத்தில் இருக்கும் வண்டே, மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை.

மாம்பழத்தினுள் வண்டு போல. 18415


மாம்பழம் தின்று தண்ணீர் குடித்தால் மாமியாரோடு போகிற மாதிரி

நெல்லிக்காய் தின்று தண்ணீர் குடித்தால் உடன்பிறந்தாளோடு பேசுகிற மாதிரி.

மாம்பூவைக் கண்டு மகிழ்ந்து போகாதே.

மாமரமும் மணத்தக்காளிச் செடியும் போல.

மா மறந்த கூழுக்கு உப்பு ஒரு கேடா?

(மாவு.)

மாமன் சொத்துக்கு மருமான் கருத்தாளி. 18420


மாமனை வைத்துக் கொண்டு மைத்துனனைச் சாகக் கொடுத்தாள்.

மாமா இச்சுக் கிச்சான், ஒரு பக்கத்து மட்டையைப் பிச்சுக் கிச்சான்; மச்சான் கிச்சுக் கிச்சான்; ஒரு பக்கத்துக் கச்சையைப் பிச்சுக்கிச்சான்.

மாமாங்கச் சந்தையிலே மாடு வாங்கினது போல.

(மகான்மகச் சந்தையிலே.)

மாமி உடைத்தால் மண்கலம்; மருகி உடைத்தால் வெண்கலம்.

மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது. 18425


மாமி குற்றம் மறைப்பு: மருமகள் குற்றம் திறப்பு.

(யாழ்ப்பான வழக்கு.)

மாமி செத்து மருமகள் அழுத கதை.

மாமியார் அறுத்துப் போன பிறகுதான் காமிரா உள் நமக்குக்கிடைக்கும்.

மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக் கூடாது; கையாலும் காட்டக் கூடாது.

(துணி அவிழ்ந்தால்.)

மாமியார் உடைத்தால் குழவிக்கல்; மருமகள் உடைத்தால் வைரக்கல். 18430


மாமியார் உடைத்தால் மண்கலம்; மருமகள் உடைத்தால் பொன்கலம்.

(மாமியார் உடைத்தால் மண்சட்டி; மண்பானை. பொன்கலம்: பொன் பானை.)

மாமியார் கை வெல்லத்தைப் பார்க்கிலும் மருமகன் கைத் தவிடு தேவலை.

மாமியார் கோபம் வயிற்றுக்கு மட்டம்.

மாமியா சாமான் வாங்கி மச்சு நிரம்புமா?

(செட்டி நாட்டு வழக்கு.)

மாமியார் சீலை விலகினால் வாயால் சொன்னாலும் குற்றம்: கையால் காட்டினாலும் குற்றம். 18435


மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகன் கண்ணீல் தண்ணீர் வந்ததாம்.

மாமியார் செத்ததற்கு மருமகன் அழுகிறது போல்.

(செத்து மருமகள் அழுதாளாம்.)

மாமியார் செத்த நாளும் இல்லை; நான் வாழ்ந்த நாளும் இல்லை;

மாமியார் தலையில் கையும் மாப்பிள்ளை மேலே சிந்தையும்.

மாமியார் தலையில் கையும் வேலிப் புறத்திலே கண்ணும். 18440


மாமியார் மதிலைத் தாண்டினால் மருமகள் குதிரைத் தாண்டுவான்.

மாமியார் மெச்சின மருமகள் இல்லை; மருமகன் மெச்சின மாமியாரும் இல்லை.

மாமியார் வீட்டில் முகம் தெரிந்து வா என்றானாம்; கஞ்சி குடிக்கும் போது முகம் தெரிகிறதென்று திரும்பினானாம் மகன்.

மாமியார் வீடு கைலாசம்.

மாமியார் வீடு மகா செளக்கியம்; நாலு நாள் சென்றால் நக்கலும் கக்கலும். 18445

(நாய் படாப் பாடு; நாய் பெறு சீலம்- யாழ்ப்பாண வழக்கு.)


மாமியாருக்குக் கண்ணும் மண்ணும் பிதுங்கிப் போகின்றன.

மாமியாருக் காரியம் இல்லை என்று கல்லும் நெல்லும் கலந்து வைத்தாளாம்.

மாமியாருக்குச் சாமியார் இவள்.

மாமியாருக்குப் புடைவை சோர்ந்த கதை.

மாமியாருக்கும் மாமியார் வேண்டும். 18450


மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.

(ஒரு காலம் ஒரு வீட்டுப் பெண்தான்.)

மாமியசரும் சாகாளோ? என் மனக் கவலையும் தீராதோ?

மாமியாரே, மாமியாரே. உனக்காக உடன் கட்டை ஏறுகிறேன்.

மாமியாரே, மாமியாரே, மை இட்டுக் கொள்கிறீர்களா? பொட்டு இட்டுக் கொள்கிறீர்களா?

மாமியாரைக் கட்ட வில்லை என்று மருமகன் தன் அரைஞாண் கயிற்றை அறுத்துத் தாலி கட்டினானாம். 18455


மாமியாரைக் கண்டு மருமகன் நாணுகிறதைப் போல.

(மருமகள்.)

மாமியாரோடு போகாத மாபாதகன்.

மாமியாரோதிக்கு மருமகள்தான்.

மாமேருவைச் சேர்ந்த காக்கையும் பொன் நிறம் ஆகும்.

(யாப்பருய கலக் காரிகை.)

மாய்மாலக் கண்ணி மருமகளே, கோழிக் கறிக்குப் பதம் பாரடி: கொக்கு என்கிறது. அத்தையாரே, கொத்த வருகிறது. அத்தை

யாரே, திறந்து பார்த்தேன் அத்தையாரே, பறந்து போச்சு அத்தையாரே.

18460


மாயக்காரன் பேயிற் கடையே.

மாயத்தில் மாரீசனைப் போல.

மாயப் பெண்ணே, சுந்தரி, மாவைப் போட்டுக் கிண்டடி.

மாயன் கயேந்திரனுக்காக வந்தது போல.

மாயூரத்தில் பெண் எடுக்காதே; மன்னார் குடியில் பெண் கொடுக்காதே 18465


மாயூர நாத சுவாமி மகிமையைப் பார்: வந்து கிடக்கிற மொட்டைகளைப் பார்.

மாயூரம் மொட்டை, சிதம்பரம் கொட்டை.

மார் அடித்த கூலி மடிமேலே.

மார்க்கண்டினைப் போல தீர்க்காயுசாய் இரு.

மார்க்கண்டாயுசாய் இரு. 18470


மார்கழிக் கோடை மரம் வெட்டிச் சாய்த்தாற் போல்.

மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல்.

மார்கழிப் பணி தலையைத் துளைக்கும்.

மார்கழி பிறந்தால் மழை இல்லை.

மார்கழி பிறந்தால் மழையும் இல்லை; பாரதம் முடிந்தால் படையும் இல்லை. 18475

(மார்கழி முடிந்தால்.)


மார்கழி மத்தியில் மாரி பொழிந்தால் சீர் ஒழுகும் பயிர்களுக்கு சேக்ஷமம் மிக உண்டாகும்.

மார்கழி மழை மண்ணுக்கும் உதவாது.

மார்கழி மாதத்து நம்பியானும் ஐப்பசி மாதத்து எருமைக் கடாவும் சரி.

மார்கழி மாதம் மச்சும் குளிரும்.

மார்கழி மாதம் மண் அலம்பப் போது இல்லை. 18480

(மண் குடவும்.)


மார்கழியில் மழை பெய்தால் மலைமேலே நெல் விளையும்.

மார்கழி வெற்றிலையை மாடு கூடத் தின்னாது.

மார்பிலே தைத்து முதுகிலே உருவினது போல.

மார்பு சரிந்தால் வயிறு தாங்க வேண்டும்.

மாசிமட்டும் உறவு இருந்தாலும் மார் மேல் கை போடாதே. 18485

(சிநேகம் இருந்தாலும்.)

மார்மட்டும் சிநேகம் ஆனாலும் மடியிலே கை போடாதே.

மார்மேலும் தோள் மேலும் வளர்த்தாள் அருமையாய்.

மாரி அடைத்த வில் போட ஏரி உடைக்க மழை பெய்யும்.

மாரி இல்லையேல் காரியம் இல்லை.

(மாரி அல்லது. மாரி இன்றேல்.)

மாரிக் காலத்தில் பதின்கல மோரும் கோடைக் காலத்தில் ஒரு படி நீரும் சரி. 18490


மாரி பதின்கல நீரில் கோடை ஒரு குடிநீர் வண்மை.

மாரி பொய்த்தாலும் மன் பொய்க்காது.

மாரி முரண்டுக்கு மருந்து உண்டா?

மாரிலே கொடி மாமனுக்கு ஆகாது.

மாரியாத்தாள் குழியில் மறைத்து வைக்க. 18495


மாரியாத்தாள் வாரிக் கொண்டு போக.

மாரியாத்தாளைப் பெண்டு பிடிக்கிறவனுக்குப் பூசாரி பெண்சாதி எம்மாத்திரம்?

மாரைத் தட்டி மனசில் வை.

மாரி மங்கலத்தாள் கொப்புக் கண்டெடுத்தாள்.

மாலுமி இல்லா மரக்கலம் ஓடாது. 18500


மாலை இட்ட நாள் முதல் தாரை இட்டு அழுதான்.

மாலை இட்டி பெண்சாதி காலனைப் போல் வந்தாள்.

மாலை உப்பு மழை அப்புறம், காலை உப்பு அடுத்து மழை.

(உப்பு-உப்பங்காற்று.)

மாலைக் கண்ணுக்கு மூலைச் சுவர்.

மாலைக் குளியனையும் மார்பில் மயிரனையும் நம்பகதே. 18505


மாலைக் கொசுக்கடி மழையைக் கொண்டு வரும்.

மாலைக் குளித்து மனையில் புகும், தன் மனையில் ஆரையும் சேர்க்காது.

மாலைச் செம்மேகம் மழை அறிகுறி, காலைச் செம்மேகம் கழுதை வாடை.

மாலை சுற்றிப் பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது.

(மாலை சுற்றிப் பெண் பிறந்தால்.)

மாலையில் வந்த விருந்தும், காலையில் வந்த மழையும். 18510


மாவடை மரவடை

மாவடை இல்லா ஊருக்கு மணக்காச்சா வயிரம்.

மாவாய்த் தின்றால் என்ன? கொழுக்கட்டையாய்த் தின்றால் என்ன?

மாவாய்த் தின்றால் பணியாரம் இல்லை.

மாவிலும் ஓட்டலாம்; மாங்காயிலும் ஓட்டலாம். 18515 18475

(தேங்காயிலும் ஓட்டலாம்.)


மாவிலும் மரத்திலும் தட்டாமல்.

மாவின் குணமே கூழின் குணம்.

மாவு இடித்தால் மண்டிக் கொள்கிறது; கூழ் கொதித்தால் கூடிக்கொள்கிறது.

மாவு இருக்கிற மணம் போல் கூழ் இருக்கிற குணம்.

மாவுக்குத் தக்க பணியாரம். 18520


மாவுக்குத் தலமா வாய்?

மாவுக்கும் ஆசை, கூழுக்கும் ஆசை.

மாவு புளிக்கிறதெல்லாம் பணியாரத்து நலம்.

மாவுத்துக்காரனுக்கு ஆனையிலே சாவு.

மாவு தின்றால் பணியாரம் ஆகாது. 18525


மாவும் தேனும் போல.

மாவும் போச்சுது; மாவு கட்டின துணியும் போச்சுது; இனி என்ன உறவு?

மாவு மறந்த கூழுக்கு உப்பு ஒரு கேடா?

மாவேகம் மனோ வேகமாய்ப் பேசுகிறான்.

18475

(ஓடுகிறான்.)

மாவைத் தின்றால் அப்பம் இல்லை. 18530


மாவைத் தின்றால் பணியாரம் இல்லை; பணியாரம் தின்றால் மாவு இல்லை.

மாவைத் தின்றால் பணியாரம் இல்லை; பெண்டாட்டியைத் தின்றால் பிள்ளை இல்லை.

மாளய பட்சத்துச் சாஸ்திகள்; மார்கழி மாதத்து நம்பியான்; மாசி மாதத்துக் கடா.

மாளாத பணத்துக்கு ஒரு மண்டி வைத்துப் பார்த்தானாம்.

மாளிகை கட்டி மரநாய் கட்டினது போல. 18535


மாளிகையைக் கட்டி வன்குரங்கைக் கட்டினது போல.

மாற்றாந்தாய் மூத்தாள் பிள்ளைக்குக் கால் கழுவினது போல.

மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் மணம் உண்டு.

மாற்றானுக்கு இடம் கொடேல்

மாற்றானுக்கு மார்பில் ஆணியாய். 18540


மாற்றானை நம்பினாலும் மாதரை நம்பொணாது.

மாற்றிலே விளைவது மரத்திலே விளையுமா?

(மாற்றிலே வளைவது.)

மாற்றைக் குறைத்தான் தட்டான், மாய் பாலம் கண்டான் செட்டி.

மாற்றைக் குறைத்தால் தட்டான். வாயிலே ஏய்த்தான் செட்டி.

மான் கண்ணிலும் அழகு; விரைவிலும் விரைவு. 18545


மான் கூட்டித்தில் புலி புகுந்தது போல.

மானசிக பூஜைக்கு அழுகல் வாழைப் பழம்.

மானத்தின கீழிருந்து மழைக்குப் பயந்தால் முடியுமா?

{{left margin|2em|(வானத்தின் கீழ்.)

மானத்தின் மேலே கண்ணும் மாப்பிள்ளை மேலே சிந்தையும்.

{{left margin|2em|(வானத்தின்.)

மானத்தை விட்டவனுக்கு மார் மட்டும் சோறு. 18550


மானத்தை விட்டால் மார்மட்டும் சோறு: வெட்கத்தை விட்டால் வேண மட்டும் சோறு.

மானத்தை வில்லாய் வளைப்பான்; மணலைக் கயிறாய்த் திரிப்பான்.

(வானத்தை.)

மானத்தை விற்றால் கையளவு சோறு.

மானத்தோடு வாழ்பவனே மனிதன்.

மானம் அழிந்தபின் மரியாதை என்ன? 18555


மானம் அழிந்தபின் வாழாமை இனிதே.

(இனியவை நாற்பது.)

மானம் அழிந்தாலும் மதி கெட்டுப் போகுமா?

மானம் அழிந்து வாழ்வதிலும் மரணம் அடைவது உத்தமம்.

மானம் அழியில் உயிர் காவலா? மானம் இழந்தபின் உயிர் வாழ்தல் ஏன்? 18560


மானம் தலைக்கு மேலே; வேட்கம் கட்கத்திலே.

(வானம்.)

மானம் பெரிது என்று மதித்தவர்க்குப் பிராணன் துரும்பு.

மானம் பெரிதோ, பிராணன் பெரிதோ?

(சிவன், உயிர்.)

மானம் போக வேணும்; வயிறு நிரம்ப வேணும்.

மானம் போன பிறகு பிராணன் இருந்து பயன் என்ன? 18565

மான மழை நின்றாலும் மரமழை நில்லாது.

(வான மழை )

மானார் கலவியில் மயங்கி இருந்தாலும் தானே தருவான் சிவன் தன் பாதம்.

மானியம் வாங்கிப் பிழைப்பதிலும் வாணிகம் செய்து பிழைப்பது மேல்,

மானுக்கு ஒரு புள்ளி ஏறி என்ன, குறைந்து என்ன?

மானுஷ்யம் இல்லாதவன் மனுஷப் பதர். 18570


மானைக் காட்டிக் மானைப் பிடிப்பார்.

(கட்டி, பிடிப்பது போல.)

மானைத் தேடி மதம் கொள்கிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_4/ம&oldid=1397246" இலிருந்து மீள்விக்கப்பட்டது