பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆயினும், இனிமே லேனும்
அகம்நொந்து வருவோர்க் கெல்லாம்
தாயெனத் தந்தை யென்னத்
தம்பதி யான நீவிர்
நோயினைத் தீர்த்து வாழ்வை
நுகர்ந்திடச் செய்வீ ராயின்,
மாயினும் மாயாக் கீர்த்தி
மணம்பெற்றுக் கமழ்வீ’ ரென்றே.

கேவலம் வறுமை துன்பம்
கிளைத்திடும் விதங்கள் பற்றி
ஏவலர் சாந்தி நந்தன்
இதயங்கள் தெளியும் வண்ணம்,
பாவலன் பேசக் கேட்டுப்
பரவசப் பட்டோ ராகி
ஆவலே வடிவா யங்கே
அமர்ந்தவா றினிதி ருந்தார்.

காகப்பன் தன் தம்பி மீது பழிகூறல்
சின்னப்பன் ஊரில் கொஞ்சம்
செல்வாக்கும் உடையோன் கூடப்
பொன்னப்பன் தெருவில் நின்று
போக்காகப் பேசும் போது,
தன்னொப்பொன் றில்லோன், ஊர்க்குத்
தலைவன்நா கப்பன் பார்த்தே,
“என்னப்பன் மாரே! சற்றிங்
கிருவரும் வருவீர்,” என்றான்.

41