பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பிள்ளைகள் கூடிக் கற்றுப்
பேரறி வாள ராகும்
பள்ளியைக் கட்டி வைக்கப்
பாங்கான இடத்தைத் தேர்ந்து
கொள்ளவும், குடும்பங் கள்தாம்
குறைதீர்ந்து கூட வும்நாம்
வள்ளலின் வீட்டுக் குப்போய்
வருவதும் ஒள்ளி” தென்றான்


இகல் தீர்ந்த நாளி தென்றே
இதயமும் களித்த நந்தன்,
பகல் தீர்ந்து மாலை நேரம்
பாவலன் உடனி ருக்க,
மிகல் தீர்ந்த நாகப் பன்தான்
மேலொரு ஆளின் மூலம்
நகல்தேர்ந்து கொளும ழைப்பாய்
நற்செய்தி அனுப்பி வைத்தான்.

'கத்தியும் பிடியும்’ என்னக்
கவிஞனும் நந்த னும்தாம்
புத்திமிக் குடைய சாந்தி
புதல்வனோ டொருங்கு போக,
உத்தமி புவனம் வீட்டுக்
கொருமகள் தான் முன் வந்து
“சித்தியில் லாஇவ் வீடு -
சீவனில் லாக்கூ” டென்றாள்.

112