திருவாசகத்தேன்/பிணக்கிலாப் பெருவாழ்வு

விக்கிமூலம் இலிருந்து
பிணக்கிலாப் பெருவாழ்வு

னித வாழ்க்கையைத் துன்பமயமாக்குவது பிணக்கு. நம்பிக்கையும்- நல்லெண்ணமும் பயிலாத நெஞ்சில் பிணக்குத் தோன்றுகிறது; அல்லது தோன்றும். வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு- ஒப்புக்கொண்டு மேவிய அன்புடன் வாழும் திறம் இல்லையானாலும் பிணக்குத் தோன்றும். பிணக்கு பகைக்கு வித்திடும். பிணக்கு வாழ்க்கையில் அமைதியைச் சீர்குலைக்கும். கெட்ட போரிடும் உலகம் தோன்றுவதே பிணக்கினால்தான்.

பிணக்கு வீட்டிலும் தோன்றும்; சமூக அளவிலும் தோன்றும். பிணக்கின் வளர்ச்சியே வேந்தலைக்கும் கொல் குறும்பு! பிணக்குகளைத் தவிர்த்து வாழ்தலே. சிறப்பு. 'நான்', 'எனது' என்ற செருக்குகளை அகற்றினால் பிணக்குகள் தோன்றா!

ஆற்று வெள்ளத்தில் 'சுழி' தோன்றும். இச்சுழியில் சிக்கியோர் எவரும் தப்புதல் அரிது. அதுபோலவே மனிதனும் சாதி, குலம் என்னும் சுழிகளில் சிக்கிக் கொள்ளுதல் அறியாமையேயாம். 'நான்', 'எனது' என்ற உணர்வு செத்தால்தான் ஆன்மா உய்திநிலையை எய்தும். இந்த உலகில் துன்பங்கள் பலவானாலும் அவற்றிற்குரிய காரணங்கள் இரண்டேயாம். ஒன்று உடல் சார்ந்த 'நான்' என்ற அகங்காரம். மற்றொன்று உடைமை சார்ந்த, 'எனது' என்ற மமகாரம். 'நான்', 'எனது' என்ற விருப்பங்களிலிருந்து விடுதலை பெறுதல் துன்பத்திலிருந் விடுதலை பெறுதலுக்குரிய ஒரே வழி. தமக்கு வேண்டுவன. வெல்லாம் மற்றவர்க்கும் வேண்டுவனவே என்ற எண்ணப். போக்கு வளரின் பிணக்குகளைத் தவிர்க்கலாம். தமது உரிமையை அழுத்தாமல் மற்றவர் உரிமைகளை மதித்தால்- வழ்ங்கினால் பிணக்குகள் வரா. அழுக்காறு, புறங்கூறல் ஆகிய உறவுகளுக்கு எதிரான கேடுகளை அகற்றுதல் பிணக்கு வராமல் தடுப்பதற்குரிய தலையாய வழி மற்றவர்களுக்கு ஊறு விளைவிப்பதில்லை என்ற நேர்ன்பு மேற்கொள்வதாலும் பிணக்கினைத் தவிர்த்துப் பெருவாழ்வு வாழலாம்.

பொதுவாகப் பிணக்குகளைத் தவிர்த்து வாழ்தல் மனிதம் சிறக்க வழி பிணக்குகள், சிறியன சிந்தித்து, சிறியன செய்வோர் மாட்டே தோன்றும்! ,பெரியதாக நினைப்பது, விரிந்த பரந்த மனப்பான்மையைப் பெறுவது, நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் பழகுவது, உறவுக்கு முதலிடம் கொடுப்பது, யார்மட்டும். அடக்கமாக இருப்பது ஆகிய நற்பண்புகளை மேற்கொண்டொழுகுதல் பிண்க்குகளைத் தவிர்க்க வழி: பிணக்கு தீய பண்பு. திருவருளுக்கு எதிரானது. ஒருமைக்குப் பகை பிணக்கு. பிணக்கு உடையோர் இம்மையிலும் வாழ்வாங்கு வாழ்தல் இயலாது; மறுமையிலும் பயன் எய்தார். ஆதலால் பிணக்கில்லாத பெருவாழ்வு வாழ முயல்வோமாக!

திருப்பெருந்துறை திருத்தலம்! நமது மலம் மூன்றும் கெட, சிவானந்த் வெள்ளம் மேவிய, குதிரைச் சேவகனாய். எழுந்தருளிய பெருமான் இருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பதால் திருப்பெருந்துறையை வாழ்த்து மின்! திருப்பெருந்துறையை வாழ்த்தின் பிறவிக் காட்டின் கருவும் கெடும் திருப்பெருந்துறை பிணக்கிலாத பெருந்துறை. பிணக்கிலாமையால் பெருந்துறையாயிற்று, பெருந்துறை ஊர்; தலம்! ஆங்குப் பிணக் இலாதார் வாழ்ந்தமையால் அது பெருந்துறையாயிற்று. பெருந்துறை! திருப்பெருந்துறை! திருநலஞ்செறிந்து திருப்பெருந்துறை! மக்களாகப் பிறந்தோர் அனைவரும் விரும்பும் பெருந்துறை! பெருந்துறை பெருந்துறை என்று பேசியே துன்பங்கெடுத்து வாழலாம். இருளகற்றி இன்பம் பெருக்கித் துன்பத்தின் தொடர்பு அறுத்து, வாழ்தல் கூடும் திருப்பெருத்துறையைச் சார்ந்தால் திருப்பெருந்துறைப் பெருமானே! ஆன்மாக்களிடத்தில் பிணக்கிலாத பெருமானே! உன்னை ஏசினும் ஏத்தினும் பிணக்குக் கொள்ளாது அருள்பொழியும் பெருமானே! உன் நாமங்களையே பேசுவர்! இங்ங்னம் திருப்பெருந்துறைச் சிவபெருமான் திருநாமத்தையே பேசுபவர்களுக்கு எதிர்வரும் துன்பம் துடைக்கப்பெறும்.

நேற்றைய துன்பம் அறியாமையால், விளைந்தது! இன்று அதன் தொடர்ச்சி! ஏன் எதிர்வரும் காலத்திலும் துன்பம்! அந்த எதிர்வரும் துன்பத்தையேனும் தடுத்தலாகாதா? தடுக்கலாம்! எப்படி? எப்போதும் பிணக்கிலாது வாழ்க! பிணக்கிலாத பெருந்துறையைச் சேருக! திருப்பெருத்துறையுறை பெருமானின் திருநாமங்களைப் பேசுக! எதிர்வரும் துன்பம் துடைக்கப்பெறும்! இணையில்லாத இன்பமும் வந்தடையும் திருவருளின்பம் இச்சையினால் அடையக்கூடியதொன்றன்று! தவத்தால், சீலத்தால், நோன்பால் மட்டுமே எய்த முடியும்!

பிறவிக்கு- பிறவித் துன்பத்துக்கு வித்து ஆணவம்! ஆன்மாவை இயல்பாகவே பற்றியிருப்பது ஆணவம்! இந்த ஆணவம் என்றும் காயாமல் முளைக்கும் இயல்பினது ஆணவத்தை அழித்தல் இயலாது. ஆணவத்தின் செயல் திறனை முடக்கலாம். ஆணவத்தின் ஆற்றலை அடக்கலாம். வினை செயல் உயிரின் இயல்பு. மனிதத்துக்கு வினையே உயிர்! வினைகள் என்றால் செயல்கள் என்று பொருள்! செய்யும் செயல்களே பயன் தந்து விடுவதில்லை; செயல் செய்வதன் நோக்கம் என்ன? உள்ளீடு என்ன? அதுவே கைகூடும் க்ரும்பு பிடித்தவர் இறந்ததையும் இரும்பு, பிடித்தவர் வாழ்ந்ததையும் எண்ணுக! ஆணவம் மேலும், மேலும் அடர்த்து 'நான்' 'எனது' என்னும் செருக்கினுள் சிக்கித் தலையால் நடந்து திரிந்து ஆகா வினைகள் மேலும் மேலும் செய்தல் வாழும் முறையன்று, ஆணவத்தின் ஆற்றல் மேலோங்கிப் பிறப்பிற்குரிய வித்து மேலும் விளையாமல் தடுத்துக்' கொள்ள வேண்டும். அதற்குரிய உத்தி, முதலில் பகைப் புலமாக இருக்கிற ஆணவத்தை அனுகூலமாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு 'நான்' 'எனது' என்னும் செருக்கினை அடக்கி ஆண்டு தாழ்வெனும் தன்மை உடையதாக மகவெனப் பல்லுயிரையும் ஒக்க நோக்கி நல்லனவே எண்ணி, நல்லனவே செய்து இடையறாத திருவருள் சிந்தனையுடன் வாழ்ந்தால் மலம் பக்குவமாகி நல்வாழ்க்கைக்குத் துணையாக அமையும். ஆணவத்தின் ஆற்றல் அடங்கிய நிலையில் இறைவனின் இருவருட் சத்தி ஆன்மாவிடத்தில் கருணை பொழியும். இந்தப் பரிபக்குவ நிலையிலும் உயிர்கள்- ஆன்மாக்கள் ஓயாது தொழிற்படும். ஆயினும் பயன் கருதா நிலையில் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற அனுபூதி வாழ்க்கையை எய்தும்,

தாம் அடையும் நல்லனவற்றிற்கு மகிழ்தல், அல்லனவற்றிற்குத் துயருறுதல் நெறியுமன்று; முறையும்ன்று. வெற்றியும் தோல்வியும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருபவையல்ல தொடர்கதைதான். வெற்றி- தோல்வி என்ற மனப்போக்கு சச்சரவுக்குக் காரணமாக அமையும். இருவனுடைய வெற்றி, தோற்றவனுடைய உள்ளத்தில் அவமானமாக உறுத்தி அவன் மீண்டும் தன் தோல்வியை வெற்றியாக்க முயல்வான். மீண்டும் போர்! ஆதலால், வெற்றியை வெற்றியாகக் கொள்ளாது தோற்றவர்கள். வெற்றி பெற்றதைப் போல மகிழ்தலுக்குரியன செய்து உயர்த்துக! வாழ்த்துக!

          நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
          அல்லற் படுவ தெவன்?

என்று வள்ளுவம் கூறும், தீதும் நன்றும் கண்டு நோதலும் தணிதலும் வேண்டா என்று புறநானூறு கூறும். ஆன்மிகத்தில் வளர்ந்த மாமனிதர்கள் துன்பங்களில் உழலும்பொழுதும் தம் நிலையில் பிறழார்; திரியார். கரை தவறி விழுவதால் கடல் கலங்கி விடுமா என்ன? ஒருபொழுதும் கடல் கலங்காது. சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவோர் துன்பங்களினால் நிலை கலங்கார். அவர்கள் இன்பம் விழைதல் இல்லை! துன்பம் இயற்கை என்று எண்ணுவர். இத்தகு வாழ்வியலையே இருவினை ஒத்தல் என்று சமயவியல் கூறும்.

துன்பங்களுக்காகத் துக்கப்படுதல் விலங்கியல்பு ஆகும். துன்பம் நல்லுணர்வு கொளுத்துவதற்காகவே கிடைத்த சாதனம் என்று சான்றோர் கருதுவர். நல்லதாக நடந்த ஒரு காரியத்திற்குப் பலர் தம்மைக் காரணமாக்கி மகிழ்வர்; பெருமைப்படுவர். அதே போழ்து ஒன்று தீமையாகிவிட்டால்- துன்பமாகிவிட்டால் பழியைப் பலர்மீது தூக்கிப் போடுவர்; விதியை நொந்து கொள்வர். ஏன் இந்த இரட்டை நிலை? நன்மையும் தீமையும் ஏன் ஆன்மாவைப் பாதிக்க வேண்டும்? பானை சுடலாம். பாலை நேரே சுட வைக்க இயலுமா?

நன்மையையும் தீமையையும் அனுபவிக்கும்பொழுது சமநிலையாகப் பாவித்தல், விருப்பு- வெறுப்புக்கள், காய்தல்- உவத்தல் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுதல்- இருவினை ஒத்தலாகும்.

மாணிக்கவாசகர் முதலமைச்சராக இருந்தபொழுதும் அரச தண்டனைக்கு ஆளாகிய் நிலையிலும் சம நிலையில் இருந்தார். அதனாலேயே "நன்றே செய்வாய்; பிழை செய்வாய்! நானோ இதற்கு நாயகமே!" என்றார். மாணிக்கவாசகர் அவர்தம் வாழ்நிலையில் அடைந்த துன்பங்கள் பலப்பல! ஆனால் ஒருபோதும் மாணிக்க வாசகர் அஞ்சியது இல்லை. அதனால் மாணிக்க வாசகருக்கு இறைவன் கணக்கில் காட்சிகளைக் காட்டியருளியுள்ளான். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடி பில் ஞானாசிரியன்; மதுரையில் குதிரைச் சேவகன், வைகை யாற்றங்கரையில் கொற்றாள்! இங்ங்னம் எத்தனை எத்தனை காட்சிகள்! எனவே, "கணக்கிலாத் திருக்கோலம் காட்டினாய்!" என்றார் மாணிக்கவாசகர்.

மாணிக்கவாசகரின் திருவுள்ளம் பிணக்குகளினின்று விடுதலை பெற்றது. இறைவன் தன் விருப்பம் தன் விருப்பமாகக் கொண்டவரானார்! "வேண்டுவதும் உன் தன் விருப்பன்றே!" என்பது மணிமொழி. அறிவால் சிவனே யாய நிலை மாணிக்க வாசகருக்குக்கிடைத்தது.

          பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
              மான்! உன் காமங்கள் பேசுவார்க்(கு)
          இணக்கி லாததோர் இன்ப மேவருந்
              துன்ப மேதுடைத் தெம்பிரான்
          உணக்கி லாததோர் வித்து மேல்விளை
              யாமல் என்வினை ஒத்தபின்
          கணக்கி லாத்திருக் கோலம் வந்து
              காட்டி னாய்கழுக் குன்றிலே!

(திருக்கழுக்குன்றப் பதிகம்-1)