திருவாசகத்தேன்/பொய்யும் யானும் புறமே போந்தோம்!

விக்கிமூலம் இலிருந்து



பொய்யும் யானும்
புறமே போந்தோம்!


இறைவன் உயர்த்தியுள்ள கொடி இடபக் கொடி. இடபம் அறத்தின் சின்னம். எருது , கடுமையாக உழைக்கவும் உழைப்பின் பயனை மற்றவர்க்குக் கொடுக்கவும் செய்கிறது. அதுபோல மனிதன் கடுமையாக உழைப்பதையே ஒழுக்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறருக்காக உழைப்பது நோன்பு, தவம் என்று புறநானூறு கூறும்.

அறம்- தற்சார்பில்லாதது. அதனால் அறழ் விலைப் பொருள் அல்ல. அறத்தை விலைப் பொருளாகவும். ஆக்கக்கூடாது. “அறவிலை வாணிகன் ஆய் அலன்” என்று புறநானூறு கூறும். அறம் ஆன்மாவைச் சார்ந்தது. அறம், அகநிலைப் பண்பு. அறம், இம்மையின்பத்தையும் தரும்; மறுமை இன்பத்தையும் தரும். மாணிக்கவாசகர் “பொய்யும் யானும் புறமே போந்தோம்” என்றருளிச் செய்துள்ளார். திருவாசகப் பாடலில் வரும் புறம், அறத்திற்கு எதிரிடையான புறம். இறைவனுடைய திருவடி இன்பத்திற்குப் புறமாய புறம். புறம், உத்தரவாதமும் பாதுகாப்பும் இல்லாத நிலை. அற நெறிக்கு, அன்பு நெறிக்கு எதிரிடையானதெல்லாம். புறம். புறம், பயனற்றவை ஒன்று சேரும் இடம்; அல்லது, போடப்படும் இடம். புறம் என்பது ‘வெளியே’ என்ற பொருளும் தரும். “புறஞ்சுவர் கோலம் செய்வான்” என்று பாரதம் கூறும் புறத்தே வந்தபிறகு ஆன்மாவின் நிலை என்ன? தீயவை எல்லாம் புறம். தீயவை எழு பிறப்பும் தீண்டும். தீயைவிடத் தீமை கொடிது. பொருள் கூடத் திதின்றி வந்தால்தான் பொருள் எனப்படும். அப்பொருள்தான் இன்பந்தரும். நெருப்பு புகையால் மூடப்பட்டுள்ளது. முகம் பார்க்கும் கண்ணாடியும் கூடப் புழுதியால் மூடப்படுகிறது. அதுபோல் தன்னலத்தால் மூடப்பெற்ற ஆன்மாக்கள் சமூகத்திற்குப் புறம்பாம்! அறநெறிக்குப் புறம்பாம்.

இன்ப நெறிக்கு இடையூறு காமமும் சினமும் பொய்யும்! இவை மனிதனை, மனிதக் கூட்டத்திலிருந்து பிரித்துப் புறத்தே தள்ளுகின்றன. புறம், சன்மார்க்கத்திற்கு இசைந்தது அல்ல. ஆன்மா, புறத்தே துக்கியெறியப்படாதிருக்க வேண்டுமானால் நன்னெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். அவை யாவன: ஒப்புரவறிதல், அடக்கம், பொறுமை, சினம் காத்தல் முதலியன. சத்தியத்தையும் நடுவு நிலையையும் பேணுக. புறத்தே தள்ளப்படாமல் சொர்க்கத்திற்குச் செல்லவேண்டுமா? சொர்க்கத்தின் கதவு திறக்க வேண்டுமா? நீ, அறநேறி பற்றிப் பேசுவதை நிறுத்து: அறநெறியில் நட! நீ, அறநெறியில் நடக்க முயன்று வெற்றி பெற்றுவிட்டால் புறமே இல்லை. நீ வாழும் இடமே சொர்க்கம்.

மாணிக்கவாசகர் “புறமே போந்தோம் பொய்யும் யானும்” என்கிறார். ஆம், உண்மை பொய், சொர்க்கத்திற்குள் புகமுடியாது. அது மட்டுமல்ல. இப்புவிக் கோளத்தில் பொய் வெற்றி பெறாது; நிலை நிற்காது. மனிதன் தவிர்த்துக் கொள்ள வேண்டியவைகளில் பொய் ஒன்று என்பது மாணிக்கவாசகரின் கருத்து. அதனால் “பொய் தான் தவிர்த்து” என்றார். பொய் என்றால்

தி- 11 என்ன? வள்ளுவத்தின் அடிப்படையில் விரிந்த அடிப்படையில் பொய்க்குப் பொருள் கொண்டால் குற்றம் அல்லது நலம் பயப்பனவாக இல்லாதன எல்லாம் பொய் என்று கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. ஆதலால், பொய் என்பது, மெய் அல்லது உண்மைக்கு எதிரிடையானது என்று பொருள் கொள்ள இயலாது. தீமை செய்யாது நன்மை செய்தல் இவற்றுடன் பொய்யாமையை உடன் வைத்து எண்ணுகிறது, பகவத்கீதை. “பாவம் இயங்க அதன் கைப்பிடியாகப் பயன்படுவது பொய்” என்றான் ஜேம்ஸ்.

பொய், நஞ்சு; இல்லை! பொய் நஞ்சினும் கொடியது. மனித நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டுப் பொய்யை மறுத்தே வந்துள்ளனர். உலக சிந்தனையாளர்கள் சில நாடுகளில் பொய்க்கு எதிரான சட்டமே இயற்றியிருக்கிறார்கள். துருக்கி நாட்டுச் சட்டத்தில் பொய் சொன்னதாக நிரூபிக்கப்பட்டுவிட்டால் பொய் சொன்னவர்களின் நெற்றியில் நெருப்பில், பழுத்த இரும்புக் கம்பியால் சூடு போடுகிறார்களாம். நமது நாட்டில் சொல் வன்மையால் பொய்யை மெய்யாக்கிவிடுகிறார்கள். மனிதன் வளர, வளர அவனுடைய பொய்யும் வளருகிறது என்பது மாணிக்கவாசகரின் கருத்து. “பொய்மையே பெருக்கி” என்கிறார். பிறந்தவுடன் குழந்தைகள் பொய் கூறுவதில்லை. கூறவும் தெரியாது. ஆனால் வயது வளா, வளர வீடுகளும் விதிகளும் குழந்தைகளுக்குப் பொய்யைக் கற்றுத் தந்துவிடுகின்றன. அதனால், திருக்குறள் “வாய்மை” என்று ஓர் அதிகாரமே இயற்றியது.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை கன்று”

என்பது திருக்குறள்.

பொய்யைத் தவிர்க்க என்ன வழி? நாட்டில் செங்கோல் தழுவிய ஆட்சி இருக்க வேண்டும். இன்றைய ஆட்சிமுறையில் பொய்க் கணக்கு, இரண்டாம் கணக்கு என்றெல்லாம் பகிரங்கமாகவே பேசப்படுகின்றன. கருப்புப் பணம் இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், எங்கும் பொய் அரங்கேறுகிறது. கொடுங்கோல் அரசு அகற்றப்படவேண்டும். பொருள் ஈட்டவும், வைத்துக்கொள்ளவும் சுதந்திரம் வேண்டும். கொடுங்கோன்மை அகன்றால் மட்டும் போதாது. ஆற்றல் வளர வேண்டும். ஆற்றல் பெற்றவர்கள் தற்காப்புக்குப் பொய்யைக் கருவியாகப் பயன்படுத்துவது இயற்கை. சத்தியம் சாகாது.

பொய்யைக்கூட ஒரளவு சமாளிக்கலாம். மெய் போலப் பொய் கூறுபவரை சமாளிப்பது அரிது. இங்ஙணம் மெய்போலப் பொய் கூறுபவர்களைப் பற்றி தான் “பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்” என்று மாணிக்கவாசகர் கூறினார். ஆதலால், பொய்களைத் தவிர்த்து வாழாதவர்கள் சொர்க்கத்தை அடைய முடியாது. பொய்யால் புறமேயாகும் தன்மை பெறுவர். பொய்க்குத் துணை ‘யான்’ என்பது. யானும் பொய்யும் புறமே போந்தோம் என்றார். பொய்க்கு யான் துணை யானுக்குப் பொய் துணை.

மனிதன் சொர்க்கம் அடையவேண்டுமா? அவன் ‘யான்’ 'எனது என்ற செருக்கு உடையவனாக இருத்தல் கூடாது என்றார் திருவள்ளுவர். இவற்றுள் யான் மிகவும் மோசமானது. ‘யான்’ உறவுப் பகை, நட்புக்குப் பகை; காதலுக்குப் பகை; சமுதாயத்துக்குப் பகை; ஆதலால், ‘யான்’ என்ற செருக்கு அறவே ஆகாது. ‘யான், எனது’ என்ற அகந்தை எள்ளளவும் மாறவில்லை” என்பது தாயுமானவர் வாக்கு. ‘யான்’ என்ற செருக்கில் விளைந்த மோதல்களும் கலகங்களும் பலப்பல. ‘எனது’ என்பதால் எழுப்பப்பெற்ற சுவர்களும், போடப்பட்ட வேலிகளும் எண்ணிலடங்கா. பூட்டு வியாபாரிகளின் நம்பிக்கைக் குரிய மூலதனமே “எனது” என்பதுதான்! ஒரு முனிவர்தூய துறவி- நல்லவராயினும் அவருக்கு வீடு பேறு கிடைக்கவில்லை. அவர் வாயிற்காவலராகிய நந்தீசரிடம் ‘நான்’ வந்திருக்கிறேன் என்று சொன்னதால் இறைவனின் ஆணை ‘நான்’ இழந்தபின் வரட்டும் என்பதாயிற்று! ஆதலால் ‘பொய்யும் யானும்’ சொர்க்கத்தில் புகா. பொய்யும் ‘யான்’ எனும் செருக்கும் உடையவர் சொர்க்கம் புகமுடியாது. புறத்தே தள்ளப்படுதல் உறுதி.

புறத்தேயிருந்து சொர்க்கத்திற்குள் புக அன்பு வேண்டும். அந்த அன்பு மெய்யன்பாக இருக்கவேண்டும். மெய்யன்பு என்று கூறியதால் அன்பிலும் போலி- பாசாங்கு இருப்பது உண்மையாகிறது. மெய்யன்பு என்பது காரண காரியங்களைக் கடந்த அன்பு. தூண்டுதல் தேவைப்படாத அன்பு. அன்பு, அன்புக்காகவே! இந்த அன்பு நெறி நின்று வாழ்வதில் துன்பம் வரினும் அன்பு குறையக்கூடாது. அன்பு வளர வேண்டும்.

இடிர்க ளையா தேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் கெறிபணியா ரேனும்- சுடர் உருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்னெஞ் சவர்க்கு.

(அற்புதத் திருவந்தாதி- 2).

என்று அம்மையார் பாடினார்.

இந்த அன்பு நிரந்தரமானதாக இருக்கவேண்டும் என்பது, மாணிக்கவாசகரின் பிரார்த்தனை.

பரந்து பல் லாய மலரிட்டு முட்
டாதடி யே இறைஞ்சி
இரந்தவெல் லாம் எமக் கேபெற
லாம் என்னும் அன்பருள்ளம்
கரந்து கில் லாக்கள் வனே நின்றன்
வார்கழற்(கு) அன்(பு) எனக்(கு)
நிரந்தர மாய்அரு ளாய் நின்னை
ஏந்த முழுவதுமே!

(திருச்சதகம்- 6)

அன்பு நிரந்தர்மானதாக இருக்க வேண்டும். அந்த அன்பும் ஆற்றுப் புனல்போல் கரைகளை- சம்பிரதாயங்களை உடைத்துக்கொண்டு ஓடவேண்டும். அன்பெனும் ஆறு கரை புரள நின்றுயர்ந்தவர்கள் மாணிக்கவாசகரும் கண்ணப்பருமாவர். அச்சமிலாத மாணிக்கவாசகர் அன்பிலாதவரைக் கண்டால் அஞ்சுகிறார். அன்பிலாதவர் உறவு, நட்பு பனைமரத்து நிழலனையது; கானல் நீர் போன்றது. பனைமரத்து நிழலில் வெய்யிலுக்கு ஒதுங்க இயலாது; முடியாது. கானல் நீர் தாகம் தீர்க்காது. அன்பிலாதவருடன் பழகி அவர்களைச் சுமப்பது பைத்தியக்காரத்தனம். அதனால் மாணிக்கவாசகர் “அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே!” என்று பாடுகிறார். ஆம்! அன்பிலாதவர் உறவு அஞ்சத்தக்கது. அன்பிலாதவர்கள் ஒழுக்கமுடையவர்களாகவும் இருக்கமாட்டார்கள்; வஞ்சனை, ஏமாற்று, சூது முதலியனவும் கொண்டிருப்பார்கள். ஆதலால், ஒழுக்கமுடையவராக இருக்க விரும்பினால் அன்புடையராக வாழ்தல் வேண்டும். மனிதன் தன்னுடன் தொடர்புடையார் மாட்டும், தொடர்பிலாதார் மாட்டும், கடவுள் மாட்டும் அன்பு செலுத்தும் வரை ஒழுக்கமுடையவனாக இருப்பான். பரிபூரண அன்புடையோராவதற்கு அறிந்தோ, அறியாமலோ போராடுவதுதான் வாழ்க்கை! அன்பு வளர, அன்பை அனுபவிக்க, அன்புகாட்ட “யான்” என்ற உணர்ச்சியைத் துறந்தேயாக வேண்டும். நாமனைவரும் பின்பற்ற வேண்டிய பண்புகள் அன்பு, அறிவு, பணிவு ஆகியன. அன்பு குறையாமல் வளரவேண்டுமாயின் பணிவு வேண்டும், விரும்பி அன்பு செய்யப் பழகுதல் வேண்டும். அன்பும் நுண்ணறிவும் ஒருசேரப் பெற்றால் எதையும் சாதிக்கலாம். வாணிகப் போக்கில்- வாணிகக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் அன்பு ஒன்றுக்கு பத்து மடங்காகப் பயன் தரக்கூடியது. அன்பு தன்னையே கொடுக்கும். உண்மை, அறிவுக்குப் புலனாகாது. அன்புக்கே உண்மை புலனாகும். வாழ்க்கை என்ற கோட்டையை வலிமைப்படுத்த வேண்டுமாயின் அது நட்புறவால்தான் இயலும். அன்பு கொள்வதும் அன்பு பெறுதலும் மனித வாழ்க்கையின் தலையாய கடமை. உலகத்தில் மற்றெல்லாவற்றிற்கும் அழிவுண்டு. ஆனால் அன்புக்கு அழிவில்லை. அன்பிலும்கூடப் பிரிவு வருதல் உண்டு. பிரிவு, சிறிது காலமாக இருந்தால் அன்பு வளரும். பிரிவு நீடித்தால் துன்பந்தரும்; வதைக்கும்.

மாணிக்கவாசகர் தமக்கும், இறைவனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவை நீடிக்க விரும்பாமல் அழுது புலம்பிய புலம்பல்தானே! திருவாசகம்! தீங்கிழைத்தவரிடத்திலும் அன்பு காட்டுவதுதான் உண்மையான அன்பு. இங்ஙனம் தீங்கிழைத்தாரிடத்திலும் அன்பு காட்ட மனிதனால்தான் முடியும். அறியாமையாலேயே தீங்கிழைக்கிறான் என்று எண்ண வேண்டும். “அறியாமல் செய்கிறார்கள், மன்னித்து விடுக” என்று இயேசுபெருமான் செய்த பிரார்த்தனையை நினைவிற் கொள்க.

பிறந்தவர்கள் அனைவரும் இறப்பது உறுதி. அதற்குள் ஏன் அன்பில் வறட்சி என்று எண்ணி அன்பு காட்டவேண்டும். கடவுள் மனிதனுக்கு மட்டும் கொடுத்துள்ள ஒரே ஒரு கொடை அன்புதான்! அன்பு அரும் பொருள். அதனை இழந்தால் திரும்பப் பெறுவது கடினம். அன்பு, உள்ளத்தை உயிருடனும் உயிரை உடலுடனும் பிணைக்கும் ஒரு தளை. “அறிவு இறை வன்னத் தேடுகிறது. அன்புதான் இறைவன் உறைவிடம் என்பதை அறிந்து கொண்டாரில்லை. அன்புதான் வாழ்க்கைச் சட்டம்! அன்புடன் ஒன்றுவதுதான் விடுதலையும் முத்தியும்” என்றார் இராமதீர்த்தர்.

அன்புடையார் ஆன்மாவைத் தவிர மற்றொன்று அறியார். ‘மற்றொன்று அறியார்’ என்பது கடவுள் பக்தி முதல் சமூக வாழ்க்கை வரை பொருந்தும்.

மெய்யன்பு காட்டும் வல்லமை பெறவேண்டும். அதற்குத் தொண்டு செய்யவேண்டும். அன்புக்கு அரண் தொண்டு.

பொய்யைத் தவிர்த்தல், “யான்” இழத்தல், மெய்யன்பு காட்டுதல், சிவமும் அன்பும் தவிர மற்றொன்று அறியாதிருத்தல், தொண்டு செய்தல் ஆகியன மேற்கொண்டு ஒழுகினால் திருவருள் சித்திக்கும். மாணிக்க வாசகர் “யானும் பொய்யும் புறமே போந்தோம்” என்றும், “புறம் போகலொட்டேன்” என்றும் பாடுகின்றார். ஆம் புறம் போதலுக்கா பிறந்தோம்! மனித குலத்திலிருந்து புறம் போகமாட்டோம் என்று உறுதி கொள்வோம். அன்பால் நட்புச்செய்தோரிடமிருந்தும் அன்பு காட்டப்பெற்றவரிடமிருந்தும் பிரிய மாட்டோம் புறம் போக மாட்டோம்! நிச்சயமாகக் கடவுளிடத்திலிருந்து விலக மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

புறமே போக்தோம் பொய்யும்
யானும் மெய்யன்பு
பெறவே வல்லேன் அல்லா
வண்ணம் பெத்திறன் யான்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார்
முற்றொன் றறியாதார்
சிறவே செய்து வழி வந்து சிவனே
நின்நாள் சேர்ந்தாரே!

(திருச்சதகம்- 86)