பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடமும் வட இந்திய மொழிகளும்

91

தடைகள் பல உள்ளன. மொழியியலிற் பிற சான்றுகளின் துணையில்லாவிடத்து வெறும் சொல்லொப்புமை கொண்டு எதையும் துணிந்துவிட முடியாது. பல வழிகளிலும் சிறந்த போறிஞர்கூட இத் துறையில், ”ஆனைக்கும் நான்கு கால், பூனைக்கும் நான்கு கால்; ஆனைக் காலிலும் பூனைக் காலிலும் நகங்கள் காணப்படுகின்றன” என்ற ஒப்புமைகளின் பேரில் முடிவுகட்டிவிடுகின்றனர். ஒரு தமிழ்ச் சொல்லில் ஒரு பகரம் இருக்கிறது; ஒரு வடசொல்லிலும் ஒரு பகரம் இருக்கிறது. ஆகவே, வடசொல் தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது என்று கூறிவிடுவதா! முதலாவதாக, இந்தியப் பழங்குடிகளைவிட உடல்வலியிலும் அறிவுவன்மையிலும் ஆரியர்கள் உயர்வுடையவர்களாகவே இருந்தனர். எனவே, அவர்கள் ஏற்றதைவிட ஈந்ததே மிகுதியா யிருந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, இந்தியாவுக்கு வருவதன் முன்னரே ஆரியர்கள் சொல்வள மிக்கதொரு மொழியை உடையவராயிருந்தனர். எனவே உடை, கருவிகள், தட்டுமுட்டுகள், கன்று காலிகள், உடற் கூறுகள், உறவு முறைகள் போன்ற பொதுக் கருத்துக்களுக்குரிய சொற்களைக்கூட அவர்கள் கடன்வாங்க வேண்டும் நிலைமை அவர்களிடம் இருந்திருக்கமுடியாது. அவர்கள் கடன் வாங்கவேண்டு மென்றால் புதிய செடி கொடிகள், உயிர் வகைகள், தாம் முன்னர்க் கண்டிராத புதுப் பொருள்கள் ஆகியவற்றின் பெயர்களையேயாகும். இவற்றில்கூடத் தம் மொழிச் சொற்களையே திரித்தும் கூட்டியும் புதுச் சொற்களை ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் எல்லா மொழிகளுக்கும் பொதுவாய் அமைந்துள்ளது. மூன்றாவதாக, நிலஇயலைப்[1] பொறுத்து எழும் சிக்கல்கள் இருக்கின்றன. ஆரியர் வருகையின்போது அவர்களுடன் நட்பாகவோ பகையாகவோ உறவுபூண்ட மக்கள் யார் யார்? வந்தேறிய ஆரியர்க ளெல்


  1. Geography.