பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அங்கவியல்

64. அமைச்சு


1.கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

ஒரு தொழிலைச் செய்யும் போது, அதற்கு வேண்டிய கருவி, அதற்கு ஏற்ற காலம், அதனைச் செய்யும் முறை, அம்முறையில் செய்யப்படும் அரிய செயல் ஆகிய இவைகளை மாட்சிமைப்படப் பொருத்தமாக எண்ணிச் செய்ய வல்லவனே அமைச்சன் ஆவான்.

மாண்டது-சிறப்புடையது.

கருவிகளாவன ; அமைச்சருக்குச் சேனை, பொருள் முதலியன; மற்றவர்கட்கு அவரவர் தொழிலுக்கு ஏற்ற கருவிகள். 'அமைச்சு' என்பது இங்கு அமைச்சன் என்னும் பொருளில் வந்தது 631

2.வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

அஞ்சாமையும், குடிப்பிறப்பும், காக்கும் தன்மையும், பல நூல்களையும் கற்று அதனால் பெற்ற அறிவும், முயற்சியும் ஆகிய இந்த ஐந்தினையும் சிறப்புறப் பெற்றவனே அமைச்சனாவான்.

வன்கண்-அஞ்சாமை; குடி-குடும்பச் சிறப்பு; ஆள்வினை -முயற்சி; குடிகாத்தலை ஒன்றாகக் கொண்டால் கற்றறிதல் என்பதனைக் கற்றல், அறிதல் என இரண்டாகக் கொள்க. 632

3.பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு.

தன் அரசரிடத்திலிருந்தும், தன் அரசனுக்குப் பகைவராக உள்ளோரிடத்திலிருந்தும் பிரிக்க வேண்டியவர்களைப் பிரித்தலும், என்றென்றும் பிரியாமல் இருக்க வேண்டியவர்