உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்மொழி இலக்கிய வரலாறு/புறநானூறு

விக்கிமூலம் இலிருந்து


17. புறநானூறு

முன்னுரை

எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு வரலாற்றுச் சிறப்புடையது, அறம், பொருள், வீடு ஆகிய மூன்றையும் பற்றிய பாடல்களைக் கொண்டது; 157 புலவர்கள் பாடிய பாடல்களைத் தன்னகத்தே கொண்டது. இதனைச் சிறந்த முறையில் முதலிற் பதிப்பித்த பெரியார் டாக்டர் உ. வே. சாமிநாதையர் ஆவர்.

புறநானூறு வரலாற்றுக்குப் பெருந்துணை செய்யும் நூல். அஃது இறுதியில் தொகுக்கப்பட்டது என்று கூறலாம். நானூறு பாக்களுள் இரண்டு பாக்கள் (287, 268) காணப்படவில்லை. பதினான்கு பாடல்களைப் பாடியவர் இன்ன வர் என்பது தெரியவில்லை. பாடிய புலவர்களின் எண்ணிைக்கை 157; பாடியவரும் பாடப்பட்டவருமாகிய பேரரசர். சிற்றரசர் முதலியோர் தொகை 178.

இந்நூலில் உள்ள செய்யுட்களைப் பாடிய புலவர்கள் ஒரு நாட்டாரல்லர், ஒர் ஊராரல்லர் தமிழகம் முழுமையிலும் வாழ்ந்தவராவர். இவருள் சேரர், சோழர், பாண்டியர், குறுநில மன்னர், அந்தணர், வேளாளர், பலவகை வணிகர், வீரர், அரசமாதேவியர், குறுநில் மன்னர் மகளிர், கொல்லர் முதலிய பலவகைத் தொழிலாளர் எனப் பலவகைப் பட்டவர் இடம் பெற்றுள்ளனர். -

சேர, சோழ, பாண்டிய நாடுகள், அவற்றின் தலை நகரங்கள், ஆறுகள், மலைகள், தமிழகத்தில் பேரரசர்சிற்றரசர் செய்த போர்கள், மன்னரது ஒழுக்கம், வீரர்

த-19

செயல்கள், மறக்குடி மகளிர் செயல்கள், புலவர் அறிவுரைகள் எனப் பல திறப்பட்ட செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

அக்கால மக்கள் பயன்படுத்திய போர்க் கருவிகள்: பலவகை நகைகள், உடைகள், உலோகங்கள், உணவுகள், ஊர்திகள், கட்டில்கள், கொடிகள், பாத்திரங்கள், மாலைகள், வாத்தியங்கள் முதலியவற்றின் பெயர்களை இந்நூலிற் காணலாம். தெய்வங்களின் பெயர்கள், கோவில்களின் பெயர்கள், விலங்குகள்-பறவைகள்-மரங்கள் இவற்றின் பெயர்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சங்ககாலத். தமிழருடைய உழவு, கைத்தொழில், வாணிகம், பழக்கவழக்கங்கள் முதலியவற்றையும் இந்நூல் கூறுகின்றது.

புறநானூற்றுச் செய்யுட்கள் பேராசிரியர் பலருடைய உள்ளத்தையும் உரையாசிரியர் பலருடைய உள்ளத்தையும் தம் வயமாக்கி அவற்றைத் தமக்கு முழுமணிப் பீடிகையாக்கிக்கொண்டு வீற்றிருந்தன என்பதை, அவரவர் அருளிச்செய்த நூல்களும் உரைகளும் இவற்றின் சொல் நடை பொருள் நடைகளை இடையிடையே பெரும்பாலும் தழுவி யிருத்தலே தெளிவாகப் புலப்படுத்தும். ![1]

இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அவ்வுரை இருநூற்று அறுபத்தாறு பாடல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அவ்வுரை மிகச் சிறந்த புலவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பதை அதன்நடையும் பொருள் அமைதியும் பிறவும் உணர்த்துகின்றன. பேராசிரியர் ஒளவை. சு துரைசாமிப் பிள்ளையவர்கள் இந்நூற் பாடல் ஒவ்வொன்றுக்கும். தக்க முன்னுரையும் உரையும் விளக்கமும் எழுதியுள்ளார். இந்நூலைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்டுள்ளனர். இப்புதியவுரை பெரிதும் பாராட்டத்தக்கது. ... புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்கள்-157


1. அடைநெடுங் கல்வியார்
2. அண்டர்மகன் குறுவழுதி
3. அரிசில் கிழார்
4. அள்ளூர் நன்முல்லையார்
5. ஆடுதுறை மாசாத்தனார்
6. ஆலங்குடி வங்கனார்
7. ஆலத்தூர் கிழார்
8. ஆவியார்
9. ஆவூர் கிழார்
10. ஆவூர் மூலங்கிழார்
11. இடைக்காடனார்
12. இடைக்குன்றூர் கிழார்
13. இரும்பிடர்த்தலையார்
14. உலோச்சனார்
15. உறையூர் இளம்பொன் வாணிகனார்
16. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
17. உறையூர் மருத்துவன் தாமோதரனார்
18. உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
19. உறையூர் முதுகூத்தனார்
20. ஊன்பொதி பசுங் குடையார்
21. எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்
22. எருமை வெளியனார்
23. ஜயாதிச் சிறுவெண் தேரையார்
24. ஜயூர் முடவனார்
25.ஐயூர் மூவங்கிழார்.


26. ஒக்கூர் மாசாத்தனார்
27. ஒக்கூர் மாசாத்தியார்
28. ஒருசிறைப்பெரியனார்
29. ஒரூஉத்தனார்
30. ஒல்லையூர் தந்த பூதம் பாண்டியன்
31. ஓரம் போகியார்
32. ஓரேருழவர்
33. ஔவையார்
34. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
34. கண்ணகனார்
35. கணியன் பூங்குன்றன்
36. கணியன் கண்ணனார்
37. கதையங் கண்ணனார்
38. கபிலர்
39. கயமனார்
40. கருங்குழலாதனார்
41. கருவூர்க் கதப்பிள்ளை
42. கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார்
43. கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார்
44. கல்லாடனார்
45. கழாத்தலையார்
46. கழைதின் யானையார்
47. கள்ளில் ஆத்திரையனார்
48. காக்கை பாடினெியார் நச்செள்ளையார்
49. காரிகிழார்
50. காவட்டனார்
51. காவற்பெண்டு
52. காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
53. குட்டுவன் கீரனார்
54. குடபுலவியனார்
55. குடவாயிற் கீர்த்தனார்.



56. குண்டுகட் பாலியா தன்
57. குளம்பாதாயனார்
58. குறமகள் இளவெயினி
59. குறுங்கோழியூர் கிழார்
60. குன்றுார் கிழார் மகனார்
61. கூகைக் கோழியார்
62. கூடலூர் கிழார்
63. கோடை பாடிய பெரும் பூதனார்
64. கோதமனார்
65. கோப்பெருஞ்சோழன்
66. கோவூர் கிழார்
67. கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
68. சங்க வருணரென்னும் நாகரியர்
69. சாத்தந்தையார்
70. சிறுவெண் தேரையார்
71. சேரமான் கணைக்கால் இரும்பொறை
72. சேரமான் கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக் கோதை
73. சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார்
74. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
75. சோழன் நல்லுருத்திரன்
76. சோழன் நலங்கிள்ளி
77. தண்காற் பூண் கொல்லனார்.
78. தாமப்பல் கண்ணனார்


79. தாயங் கண்ணியார்
80.திருத்தாமனார்
81. தும்பி சொகினனார்
82. துறையூர் ஓடைகிழார்
83. தொழுத்தலை விழுத்தண்டினார்
84. தொண்டைமான் இளந்திரையன்
85. நரிவெரூஉத்தலையார்
86. நல்லிறையனார்
87. நன்னாகனார்
88.நெட்டிமையார்
89. நெடுங்கழுத்துப் பரணர்
90. நெடும் பல்லியத்தனார்
91. நொச்சி நியமங்கிழார்
92. பக்குடுக்கை நன்கணியார்
93.பரணர்
94. பாண்டரங் கண்ணனார்
95. பாண்டியன் அறிவுடை நம்பி
96. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
97. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
98. பாரதம் பாடியபெருந்தேவனார்
99. பாரி மகளிர்
100. பாலை பாடிய பெருங்கடுங்கோ
101. பிசிராந்தையார்
102. பிரமனார்

103. புல்லாற்றூர் எயிற்றியனார்
104. புறத்திணை நன்னாகனார்
105. பூங்கணுத்திரையார்
106. பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
107. பெருக்குன்றூர் கிழார்
108. பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
109. பெருஞ்சித்திரனார்
110. பெருத்தலைச் சாத்தனார்
111. பெரும் பதுமனார்
112. பேய்மகள் இளவெயினி
113. பேரெயில் முறுவலார்
114. பொத்தியார்
115. பொய்கையார்
116. பொருந்தில் இளங்கீரனார்
117. பொன்முடியார்
118. மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளளார்
119. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
120. மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
121. மதுரை ஓலைக் கடைக் கண்ணம்புகுந்தாராயத்தனார்.
122. மதுரைக் கணக்காயனார்
123. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

124. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
125. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
126.மதுரைத் தமிழ்க்கூத்தனார்
127. மதுரை நக்கீரர்
128. மதுரைப் படைமங்க மன்னியார்
129. மதுரைப் பூதனிள நாகனார்
130. மதுரைப் பேராலவாயார்
131. மதுரை மருதனிள நாகனார்
132. மதுரை வேளரசான்
133. மருதனிள நாகனார்
134. மாங்குடி கிழார்
135. மாதி மாதிரத்தனார்
136. மார்க்கண்டேயனார்
137. மாற்பித்தியார்
138. மாறோக்கத்து நப்பசலையார்
139. முரஞ்சியூர் முடிநாகராயர்
140. மோசிகீரனார்
141. மோசி சாத்தனார்
142. வடம நெடுநதத்தனார்
143. வடம வண்ணக்கன் தாமோதரனார்
144. வடம வண்ணக்கன் பெருஞ் சாத்தனார்
145. வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்


146. வடமோதங்கிழார்
147. வன்பரணர்
148. வால்மீகியார்
149. விரிச்சியூர் நன்னாகனார்
150. விரியூர் நக்கனார்
151. வீரை வெளியனார்
152. வெண்ணிக் குயத்தியார்

153. வெள்வௌருக்கிலையார்
154. வெள்ளைக்குடி நாகனார்
155. வெள்ளைமாளர்
156. வெறிபாடிய காமக் கண்ணியார்
157. வேம்பற்றூர்க் குமரனார்


பேரரசரும் சிற்றரசரும் :' புறநானூற்றில் சேர மன்னர் பதினெண்மரும் சோழ மன்னர் இருபதின்மரும் பாண்டியர் பதின்மூவரும் சிற்றரசர் ஐம்பத்திருவரும் பிற தலைவர் பன்னிருவரும் குறிக்கப்பட்டுள்ளனர். இவர் அனைவரும் தமிழ்ப் புலவர்களைப் போற்றிப் பாதுகாத்தவராவர். சங்க காலத்தில் தமிழ் வளம்பெறக் காரணமாயிருந்த இப்பெரு மக்கட்கு நமது நன்றியும் வணக்கமும் உரியவாகும்.

புறநானூற்றுச் செய்திகள்

ஆட்சிச் சிறப்பு: மன்னன் தன் ஆட்சிக்குட்பட்ட குறிஞ்சி முதலிய எல்லா நிலங்களிலும் காவல் வீரரை வைத்திருந்தான் (3). ஒவ்வோர் ஊரிலும் ஊரைக் காப்பவர் இருந்தனர். அவர்கள் இரவில் விளக்கேற்றிச் சென்று ஊரைக் காவல் காத்தனர் (37), குடிகள் கண்ணிர் சிந்தி, 'எம் மரசன் கொடுங்கோலன்' என்று வருந்திக் கூறும்படி நடத்தலாகாது என்று தமிழ் மன்னர் கவலை கொண்டனர் (72), முறை தவறி அறம் உரைக்கும் மக்கள் அறங்கூறவையத்தில் இருத்தலாகாது என்று கவலை கொண்டனர். குடி மக்களைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள அரசமரபில் பிறத்தலைச் சிறப்பாகக் கருதினர் (71); நல்லவரை ஆதரித்தனர்; கொடியவரைத் தண்டித்தனர் (29), சோழர் தலைநகரான உறையூரிலிருந்த அறங்கூறவையம் அறநெறி தவறாதது (39)

அரசர் ஒழுக்கம் : பாண்டியன் நெடுஞ்செழியன், "'எனது நாட்டின்மீது படையெடுத்து வரும் பகைவரையான் வெல்லேனாயின், என்குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று பழி தூற்றுவர் ஆகுக: மாங்குடி மருதனைத் தலைவனாகப் பெற்ற புலவர் கூட்டம் எனது நாட்டைப் பாடாது ஒழிவதாகுக. இல்லை யென்று இரப்பவர்க்கு இல்லை’ யென்று சொல்லும் வறுமையை யான் அடைவேனாகுக ! {72), என்று சூளுரைத்தான்.

பூதப் பாண்டியன், என் பகைவரை யான் வெல்லேனாயின், யான் என் மனைவியை விட்டு நீங்குவேனாகுக; அறநெறி தவறாத அவைக்களத்தில் தகுதியற்ற ஒருவனை வைத்து முறைதவறிக் கொடுங்கோல் செய்தவன் ஆகுக: என் சிறந்த நண்பர்களும் நல்லவர்களுமாகிய மாவன், ஆந்தை அந்துவன் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகியோர் நட்பினைத் தப்பினவன் ஆகுக; பல உயிர்களையும் பாதுகாக்கும் பாண்டியர் அரசமரபிலிருந்து யான் மாறிப் பிறப்பேனாகுக. (71) என்று சூளுரைத்தான்.

சோழன் நலங்கிள்ளி, யான் என் பகைவரை வெல்லேனாயின், பொதுப் பெண்டிர் மார்பில் எனது மாலை துவள்வதாகுக. (73) என்று சூளுரைத்தான். இம்மூன்று சூளுரைகளிலிருந்தும் சங்ககாலத் தமிழரசர் ஒழுக்கத்தின் உயர் வினை நாம் நன்கு அறியலாம்.

தமிழ்ப் புலவர்கள் : புலவர்கள் வறுமையில் வாடினும் உயர்ந்த பண்பாடு பெற்றிருந்தனர். புலவர் தம் மதிப்பை இழக்க விரும்பாதவர்;

முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின் நீதல் யாம்வேண்டலமே' (205)

என்று இறுமாந்து கூறியவர்; அரசரிடமிருந்து மரியாதையையும் பொருள் உதவியையும் பெற விழைந்தவர்; மன்னர் தமக்கு உதவி செய்யத் தாழ்க்கினும், தாமே நேரில் வந்து உபசரியாது பிறர் வாயிலாக உதவியை அனுப்பினும், வெகுளும் இயல்பினர் (206, 209); சிறிது பொருள் தரினும் அதனைப் பெறாது வெகுண்டு செல்வர் (162, 208) .

புலவர் தம்முள் ஒருவரை ஒருவர் மதித்துத் தம் பாக்களில் போற்றினர் (158, 174, 202, 212) ; ஒரு புலவரை மதியாது நடந்துகொண்ட மன்னனிடத்து வெறுப்புக் காட்டி அவனிடம் செல்வதைத் தவிர்ந்தவர் (151, 202) ; இத்தகைய உயர் பண்புகளால் தமிழ் வேந்தரது மதிப்பைப் பெற்றனர். -

புலவர் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர். பெருஞ்சித்திரனார் என்ற புலவர் குமணனைப் பாடிப் பரிசில் கொணர்ந்து தம் மனைவியைப் பார்த்து, இச்செல்வத்தை உனக்கு இதுவரையில் கடன் கொடுத்தவர்க்குக் கொடு; நம் உறவினர்க்கு வழங்கு; இல்லாதவர் எவர் வந்து கேட்பினும் என்னைக் கேளாது உதவுவாயாக, (163) என்று கூறினார் எனின், சங்ககாலப் புலவரது பண்பாட்டை என்னென்பது:

அக்காலப் புலவர்கள் உள்ளதை உள்ளவாறே எடுத்துக் கூறும் இயல்பினர்; தமது வறுமையைச் சிறிதும் வெட்க மின்றி-மகன் தந்தைக்கு உரைப்பது போலத் தம் வள்ளலிடம் எடுத்துக் கூறினர் (154).

தமிழரசரும் புலவரும்; தமிழ் வேந்தர் தம் காலப் புலவர் பெருமக்களைப் பெரிதும் மதித்தனர்; அவர்தம் அறிவுரைகளை அவ்வப்போது ஏற்று நடந்தனர். கோவூர் கிழார் சோழரிடை நடைபெற இருந்த பெரும் போரைத் தம் அறிவுரையால் நீக்கினார் (44); பகை வேந்தனுடைய குற்றமற்ற மக்களைக் கிள்ளிவளவன் கொல்ல முனைந்தபோது அறிவுரை கூறி அம்மக்களைக் காத்தார்; இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றன் என்று தவறாக எண்ணி அவரைக் கொல்ல முயன்ற நெடுங்கிள்ளிக்குப் புலவர்களின் வாழ்க்கையை எடுத்துக் கூறி, இளந்தத்தன் உயிரைக் காத்தார் (47) . .

ஒளவையார் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் நிகழவிருந்த போரைத் தாமே அரசியல் தூதராகச் சென்று தவிர்த்தார் (95) . பெருந்தலைச் சாத்தனார் தன் தமையனைக் கொல்ல விரும்பிய இளங்குமணன் உள்ளத்தைத் தம் சிறந்த உரையால் மாற்றினார் (165). முடமோசியார் சேரனுக்கும் சோழனுக்கும் நிகழ இருந்த போரைத் தமது பேச்சாற்றலால் தவிர்த்தார் (13}. . .

பிசிராங்தையார் பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சென்று, குடிகளை வருத்தாது சிறுகச் சிறுக வரி வாங்க வேண்டும் என்பதை அவன் உள்ளத்தில் நன்கு பதியும்படி அறிவுறுத்தினார் (184). வெள்ளைக் குடி நாகனார் என்ற புலவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்குத் தக்க வாறு அறிவுரை கூறி, நிலத்திற்கு விதிக்கப்பட்டிருந்த பழைய வரியை நீக்கினார் (85) . -

சிற்றரசர் : தமிழகத்துச் சிற்றரசருட்பலர் மூவேந்தர்' ஆட்சிக்கு உட்பட்டவர். அவர் அனைவரும் முத்தமிழ் வாணரைப் போற்றினர். அவருள் பறம்பு நாட்டையாண்ட பாரி, பழநிமலை நாட்டை ஆண்ட பேகன், கொல்லிமலை நாட்டை யாண்ட ஒரி, மலையமானாட்டை யாண்ட காரி பொதிய மலைநாட்டை ஆண்ட ஆய், தகடூர் நாட்டை ஆண்ட அதிகன், நள்ளி என்னும் எழுவரும் குறிக்கத் தக்கவர். புலவர் பலர் இவ்வள்ளல்களின் உயிர் நண்பர்களாய் இருந்தனர் என்று புறநானூற்றுப் பாடல்கள் புகல்" கின்றன. . - - -

ஊர்த்தலைவர்களும், சிறந்த வீரர்களும், பெருஞ் செல்வரும் முத்தமிழ் வாணரை ஆதரித்துவந்தனர் என்பதைச் செய்யுட்கள் பல (318-897) உணர்த்துகின்றன. இத் தலைவர்கள் போலவே இவர்தம் வாழ்வரசிகளும் முத்தமிழ் வாணரை உபசரித்துப் பெருமை பெற்றனர் என்பதைப் புலவர் பாக்களே புகழ்ந்துரைக்கின்றன. இங்ங்னம், சங்ககாலத் தமிழகத்தில் முடியுடை மூவேந்தர், சிற்றரசர், வீரர், செல்வர் ஆகிய அனைவரும் பைந் தமிழைப் பாங்குற வளர்த்தனர் என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

தமிழ் வீரர் , தமிழ் நாட்டு வீரர் போர் என்றவுடன் துள்ளிக் குதிப்பவர்; தாம் போரிடச் செல்லும் நாடு தொலைவில் இருப்பினும் மிக்க மகிழ்ச்சியோடு செல்பவர் (81) , அடிக்கும் கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் பாம்பு போன்றவர் (89) . இவ்வீரர் குடிப் பெண்களும் அஞ்சாமை மிக்கவர்; தம் மைந்தர் போரில் மார்பில் புண்பட்டு இறந்தலையே விரும்பினர் (278) , ஒரு வீரத் தாய் போருக்குச் செல்லத்தக்க ஆடவன் தன் வீட்டில் இல்லாமையால் விளையாடிக்கொண்டிருந்த தன் ஒரே மகனை வேலைக் கையில் கொடுத்துப் போருக்கு அனுப்பினாள் (279) . இம்மகளிர், இறந்த தம் கணவர் உடலைப் போர்க்களத்தில் தழுவினர்; சிலர் தழுவி இறந்தனர் (288).

வீரர் மன்னன் தகுதி ஒன்றிற்காகவே தம் மகளை மணம் செய்து கொடுப்பர்; அரசனுக்கு அஞ்சித் தம் மகளைத் தாரார்; அதனால் வரும் போரை மகிழ்ச்சியோடு ஏற்பர் (388-852). போரில் இறந்த வீரர்க்குக் கல் நடப்படும். அக்கல்லில் அவனுடைய உருவமும் பெயரும் பீடும் பொறிக்கப்படும். பின்பு அக்கல் அனைவராலும் வழிபடப்படும் (232, 260, 306, 329) .

சமயம் : தமிழகத்தில் சிவபெருமான், கண்ணன், பல தேவன், முருகன் ஆகிய நால்வரும் நாற்பெரும் தெய்வங்களாகக் கருதப்பட்டனர் (56) . மக்களுக்கு மறுமை உலகம் உண்டு என்ற நம்பிக்கை இருந்தது (18). தெய்வத் திருவுருவங்கள் வழிபடப்பட்டன (106). உலகத்தைப் படைத்தவன் இறைவன் என்ற நம்பிக்கை இருந்தது (194). உலகில் எப்பொருளும் நிலையாதது-புகழ் ஒன்றே நிலைபெறும் என்று சான்றோர் நம்பினர் (105) ,

வாழ்க்கையின் இறுதியில் யமன் உயிரைக் கொண்டு செல்லுதல் உறுதி. ஆதலால் நல்வினைகளைச் செய்யுங்கள்: அவற்றைச் செய்ய முடியவில்லையாயின் தீவினையாவது செய்யாதிருங்கள். அதுவே நன்னெறியில் செலுத்தவல்லது' (195) என்பது ஒரு புலவர் அறிவுரையாகும். மற்றொரு புலவர், நல்லது செய்வோர் துறக்கம் பெறுவர்-அல்லது செய்பவர் மாறிப் பிறப்பர், (214) என்று கூறியுள்ளார்.

தமிழர் வடநாட்டு அறிவு : இமயமலை அடிவாரத்தில் அந்தணர் இருந்து வேள்வி செய்தனர் (2). அங்குக் கவரிமான்கள் நரந்தையையும் நறும்புல்லையும் மேய்ந்து சுனைநீரைப் பருகித் தகரமர நிழலில் தங்கும் (132) . இமயமலை உயர்ந்த நெடிய பக்க வரைகளை உடையது (166) .

பண்பாடு : அன்புடைமை, அருளுடைமை, பண்புடைமை முதலிய நற்பண்புகளின் சேர்க்கையே பண்பாடு என்பது. அது சொல்லிலும் செயலிலும் வெளிப்படுவது: வயலில் அறுவடை செய்யும் உழவர் அங்குத் தமக்குத் தெரியாமல் வாழும் பறவைகளை விரட்டத் தண்ணுமை முழக்குவர் (348). தண்ணுமை ஒலி கேட்டு அவை பறந்து விடும். தண் ணுமை முழக்காவிடின் அவை அறுவடையில் உயிரிழக்கும். எனவே உழவர் அருளுணர்ச்சியால் தண்ணுமை முழக்கினர் என்பது இங்கு அறியத்தகும்.

தம்மை மறந்து இருந்த வேந்தரையும், தம் தகுதி அறியாது சிறிதே வழங்கிய மன்னரையும், தமக்குப் பொருள் கொடாது காலம் தாழ்த்திய காவலரையும் புலவர்கள் கடிவது வழக்கம். அங்ங்னம் கடிந்த பின்பு அருளுணர்ச்சி மேலிடத் தம்மை அவமதித்தமையால் அம்மன்னர் கேடுறுவரே என்று அஞ்சி, "நீ நோயின்றி வாழ்வாயாக!' என்று கூறி வாழ்த்துவது வழக்கம் (209) .

வறுமையால் வாடிய புலவனோ, பாணனோ, கூத்தனோ ஒரு வள்ளலைக் கண்டு பாடி அல்லது ஆடிப் பரிசில் பெற்று மீளும் போது வழியில் வறுமையுற்ற புலவனையோ, பாணனையோ, கூத்தனையோ பார்க்கும்போது அவனைத் தன் வள்ளல்பால் ஆற்றுப்படுத்துதல் வழக்கம். தான் மட்டும் வாழ்ந்தால் போதும், பிறன் எக்கேடும் கெடுக என்று எண்ணாது அக்கால முத்தமிழ்வாணர் தம்போன்றவரை ஆற்றுப் படுத்தியது, அவரிடமிருந்த உயர்ந்த பண்பாட்டை விளக்குகிறது. இப் பண்பாட்டின் அடியாகத் தோன்றியவையே புலவர் ஆற்றுப்படை (48), விறலி ஆற்றுப்படை (106) பாணாற்றுப்படை (143) முதலிய நூல்கள்.

கல்வி கேள்வி ஒழுக்கங்களால் சிறந்த சான்றோர் போர்களையே விரும்பிய மன்னர்களுக்கும் வீரர்களுக்கும் வாழ்க்கை நிலையாமையை வற்புறுத்தத் தொடங்கினர்; உடல் நிலையற்றது, செல்வம் நிலையற்றது, வாழ்க்கை நிலையற்றது என்பதைப் பல சான்றுகள் கொண்டு விளக்கி அவர்களை அறவழியில் செலுத்தினர். துறவு உள்ளம் கொள்ளச் செய்தனர். “நாடும் செல்வமும் மன்னர் உயிருக்குத் துணை செய்வதில்லை; அவர் செய்யும் அறிவினையே மறுமைத் துணையாய் நின்று இன்பம் தரும்” (357). இவ்வுலகம் ஒரே நாளில் எழுவரைத் தலைவராகக் கொள்ளும் தன்மை உடையது; அஃதாவது, எந்த ஆட்சியும் நிலையில்லாதது. பற்று விடுதலே இன்பத்தைக் காணும் வழி (358).

“பல நாடுகளை வென்று ஆண்ட முடிவேந்தரும்முடிவில் முதுகாட்டையே அடைந்தனர். நினக்கும் அவ்வாறு ஒரு நாள் வரும் . இவ்வுலகில் இசை அல்லது வசையே நிலைத்து நிற்கும். ஆதலால் வசை நீங்கி இசை வேண்டின், ஒரு பாலும் கோடாது முறை வழங்குதலும் இரவலர்க்கு ஈதலும் நல்லது. இச் செயலால் உலகம் உள்ளளவும் நின் பெயர் நிலை பெற்று விளங்கும்” (359). “சீரிய பண்பு நலன்களைப் பெற்றிருந்த மன்னர் சிலர்; அவர்க்கு மாறுபட்டவரே, மிகப் பலர்; அவரும் மறைந்தனர்; அவர்தம் செல்வமும் மறைந்தது. ஆதலால் ஒழுக்கம் குன்றாமல் அறச் செயல் செய்து நற்பெயர் பெறுதலே நல்லது” (360). அறிவுடை அரசர் தாயினும் சாலப் பரிந்து ஏழைகளுக்கு உதவுவர்; 

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

801

நெறி தவறாது முறை செய்வர்: வாழ்க்கை இன்பத்தை நன்கு நுகரினும் யாக்கை, செல்வம் முதலியவற்றின் நிலையாமையை மறவார்; அவரே நற்பேற்றைப் பெறுவர்' (361).

" விரிந்த சிந்தையும் பரந்த நோக்கமும் உடைய பெரு மக்கள் உலகத்தில் எல்லா ஊர்களையும் தம் ஊர்களாகவே கருதுவர்; உலக மக்களைத் தம் உறவினராகவே எண் ணுவர்; தமக்கு வரும் ஆக்கமும் கேடும் தம்மாலேயே வருவன என்னும் உண்மையை மறவார்' ' (192) :

மறக்குடியில் பிறந்த ஒரு பெண்மணி பலருடைய கடமைகளைக் கீழ்வருமாறு கூறியுள்ளார் : மகனைப் பெற்று வெளியுலகத்திற்குத் தருதல் எனது கடமை: அவனைக் கல்வி கேள்வி ஒழுக்கங்களால் சிறந்தவனாகச் செய்வது தந்தையின் கடமை; அம் மைந்தனுக்குப் போர்க் கருவிகளைச் செய்து தருவது கொல்லனது கடமையாகும். நாட்டுக்குகந்த நன்மகனாக அவனை ஆக்குவது காவலன் கடமையாகும்; மிகச் சிறந்த போரில் ஆண் யானையைக் கொன்று பெயர் பெறுதல் அம் மைந்தன் கடமையாகும்' (312). இது பொன்முடியார் பாடலாகும். இவர் ஒரு பெண்பாற் புலவர். நாட்டில் பிறந்த குடிமகனான இளைஞனுக்கு யார் யார் எவ்வெவ்வாறு கடமைப்பட்டிருக்கின்றனர் என்பதை இப் பெண்பாற் புலவர் அறிவுறுத்தும் திறம் பாராட்டத்தகும். உயர்ந்த பண்பாடு பெற்ற சமுதாயத்தில் தான் இத்தகைய உயர்ந்த கருத்துகள் வெளிப்படல் இயலும். -

பிசிராங்தையார்ஒரு புலவர். பல்லாண்டுகள் ஆகியும் அவர் தலையில் நரை இல்லை. புலவர். பலர் அதன் காரணத்தை அறிய அவாவினர். அப்புலவர் பெருமான் தமக்கு நரையின்மைக்குக் கீழ் வருமாறு நான்கு காரணங் களைக் கூறினார்: (1) என் மனைவியும் மக்களும் குணங் களாலும் செயல்களாலும் உயர்ந்தவர்; (2) என் இல்லத்து

302

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஏவலரும் அத்தகையவரே; (3) எனது நாட்டு மன்னன் செங்கோலினன்: (4) இவை அனைத்திற்கும் மேலாக, எனது ஊரில் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் வாழ்கின்றனர்" (191).

ஒவ்வொருவரும் இந்நான்கு காரணங்களையும் எண்ணிப் பார்த்தல் இன்றியமையாதது. மனிதன் நடமாடும் இடங்கள் மூன்று. அவை வீடு, ஊர், நாடு என்பன. வீட்டில் உள்ள அனைவரும் உயர்ந்த பண்பு நலன் வாய்க்கப் பெற்றி ருப்பின் அவ்வீட்டில் இன்பம் ஒன்றே நிறைந்திருக்கும். இங்ஙனமே ஊரில் கல்வி, கேள்வி ஒழுக்கங்களாற் சிறந்த பெரியோர் பலர் இருப்பின் அவ்வூர் செம்மை சான்ற சூழ் நிலையில் அமைந்திருக்கும். அரசன் செங்கோலினனாயின் நாட்டில் அன்பும் அறனும் அருளும் தாண்டவமாடும். எனவே, மனிதன் கவலைப்பட இடமில்லை. இத்தகைய வாழ்க்கை ஒவ்வொருவரும் பெறத்தக்க வாழ்க்கையன்றோ? உயர்ந்த பண்பாட்டின் அடியாகப் பிறந்த இக்கருத்துகள் சங்ககாலப் புலவர்பெருமக்களின் பண்பாட்டை அல்லவோ உணர்த்துகின்றன!

அந்தணர்: புறநானூற்றுப் பாடல்கள் பல தோன்றிய காலத்தில் வடமொழியாளர் செல்வாக்குத் தமிழகத்தில் நன்கு பரவிவிட்டது. அவர்களை

ஆன்ற கேள்வி அடங்கி கொள்கை நான்மறை முதல்வர்'

(28)

என்று புலவர் பாராட்டினர்; அவர்கள் எதிரே தலை வணங்குக' என்று அரசர்க்கு அறிவுறுத்தினர். வேள்வி செய்தல் சிறப்பாகக் கருதப்பட்டது (15). r

அந்தணர்க்கு ஊர்களும் செல்வமும் நீர்வார்த்துக் கொடுக்கப்பட்டன (351, 362, 367) . அவர்கள் தூண்டுதலால் தமிழரசர் சிலர் வேள்வி செய்யத் தொடங்கினர். சேர மன்னருட் பலர் வேள்வி செய்தமையைப் பதிற்றுப் பத்து

உணர்த்துகிறது. சோழருள் பெருநற்கிள்ளி என்பவன் இராஜ சூயயாகம் செய்து, இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி'என்று பெயர் பெற்றான். பாண்டியருள் ஒருவன் பல யாகசாலைகளை அமைத்துப் 'பல்யாகசாலைமுதுகுடுமி பெருவழுதி' எனப் பெயர்பெற்றான். அவன் வேள்விஅந்தணர்க்கு ஊர்களை உதவினவன் என்று வேள்விக்குடிச்செப்பேடுகள் செப்புகின்றன. பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுன்னியன் விண்ணந்தாயன் பல வேள்விகள் செய்த பெருமகன் இவை அனைத்தும் சங்ககாலப் பிற்பகுதியில் (கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகளில்) தமிழகத்துச் சமயத் துறையில் (பெருமக்கள் அளவில்) வடமொழியாளர் செல்வாக்கு வேரூன்றி வளர்ந்துவந்தது என்பதை அங்கைக்கனியெனஅறிவிக்கின்றன. இவர்கள் சேர்க்கையால் வடமொழிச் சொற்கள் பல தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றமை ஒவ்வொரு நூலைப்பற்றிய ஆராய்ச்சியிலும் கூறப்பெற்ற தன்றோ?

வட சொற்கள்: புறநானூற்றில் இடம் பெற்றுள்ள வட சொற்களுள் பின்வருபவை குறிப்பிடத்தக்கவை:

அசுரர், அஞ்சனம் (174), அந்தி (2) , அமிழ்தம் (182), ஆகுதி (99) , இயக்கன் (71) , ஈமம் (281), உற்கம் (41) . கபிலம் (337) , கரகம் (1) . கலாபம் (183), குமரி (67), கெளரியர் (3), சடை (251), சாபம் (70), சாமரம் (50), சிகரம் (185), சித்திரம் (251), தருப்பை (360), நேமி (3) , பிண்டம் (284) , பூதம் (369), மதுரை (351), மாயம் (363), மார்ச்சனை (1.64) , முண்டகம் (24) , யூபம். (400).


  1. 1. புறநானூறு, மூன்றாம் பதிப்பின் முகவுரை,