1. புத்தர் அவதாரம்
இறைவன் தேவர் சபையில் தெரிவித்தல்
"வையகத்தில் உயிர்கள் மிக வாடக் கண்டேன்;
வழியறியாது அவைமயங்கி வருத்தக் கண்டேன்;
மெய்யிது என்று உய்யுதெறி காட்டி தன்மை
வியாவிப்பார் எவரையுமே கண்னற் காணேன்,
1
எண்ணரிய சென்மங்கள் எடுத்து முன்னம்
எவ்வுடம்பின் எவ்வுயிருக்கும் இடர்க ளைந்தேன்;
மண்ணுலகம் ஈடேற இன்னும் ஓர்கால்
மனிதஉடல் தாங்கமனத்து ஆசை கொண்டேன்.
2
இப்பிறப்பை யல்லாது பிறப்பு வேறிங்கு
எனக்குமில்லை; என்னைவழி பட்டு வாழும்
ஒப்பரிய அடியவர்கள் எவர்க்கும் இல்ல;
உண்மைாது எந்தாளும் உண்மை யாமால்.
3
வானெழுந்து வளர் இமய மயிைன் தென்பால்
வாழும்உயர் சாக்கியர் தம் மன்ன னுக்கு
யானுமொரு மகளுகச் செல்வேன்" என்முன்,
இமையவரை நோக்கி அருள் இறைவன் மாதோ!
4
மாயாதேவி கனாக் காணுதல்
வேறு
அந்நாளில் அவ்விரவில் கத்தோத னப்பேர்
அண்ணற்கு வாய்த்தமன் அவர்மங்கை யனையாள்
எந்நாளும் சாணத கனவொன்று கண்டாள்
எந்நாடும் எவ்வுயிரும் இன்புறவே அம்மா!
5