கலைக்களஞ்சியம்/அடைகாக்கும் பெட்டி
அடைகாக்கும் பெட்டி (Incubator) பறவை முட்டைகளின்மேல் அமர்ந்து சூட்டை அளித்து அவை பொரிக்க உதவுகிறது. இதையே செயற்கையில் செய்யும் அமைப்பு அடைகாக்கும் பெட்டி எனப்படுகிறது. முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்க உதவுவதோடு இது பாக்டீரியாவை ஏற்ற வெப்பனிலையில் வைத்து வளர்க்கவும், பருவத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகளைத் தக்க வெப்பநிலையில் வைத்துக் காக்கவும் பயன்படுகிறது.
சொற்கை முறையால் முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் வழக்கம் சீனாவிலும், எகிப்திலும் தொன்று தொட்டே உள்ளது. இந்நாடுகளில் பெரிய உலைகளில் முட்டைகளை வைற்றி வெப்பத்தைத் தந்து குஞ்சு பொரிக்க வைக்கிறர்கள்.
அடைகாக்கும் பெட்டிகளில் உள்ளிருக்கும் காற்றைச் சூடேற்றவும், சூடேறிய காற்றைச் சுற்றிவரச் செய்யவும், காற்றின் ஈரத்தைக் கட்டுப்படுத்தவும் அமைப்புக்கள் இருக்கும். முதன் முதலில் சுண்டுபிடிக்கப்பட்ட அடைகாக்கும் பெட்டிகளில் குழாய்களின் வழியே வெந்நீரைச் செலுத்தி உள்ளிருக்கும் காற்றைச் சூடேற்றினார்கள். ஆனால் இந்த அமைப்பு அதிகமான இடத்தை அடைத்துக் கொண்டதால் இது கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாகக் காற்றைச் குடேற்றி உள்ளே அனுப்பும் முறைகளே தற்காவத்தில் அதிகமாக வழங்குகின்றன. வாயு விளக்கினாலோ, எண்ணெய் அடுப்பினாலோ காற்றைச் சூடேற்றலாம். ஆனால் மின்சாரத்தால் வெப்பத்தைப் பெறுவதில் பல நண்மைகள் இருப்பதால் இதுவே தற்காலத்தில் அதிகமாகப் பயனாகிறது எளிய அமைப்புள்ள பெட்டியில் தட்டுக்களில் முட்டைகள் வைக்கப்படுகின்றன. பெட்டியின் முன்பக்கம் கண்ணாடியால் ஆனது. ஆகையால் அப்பக்கத்தின் வழியே ஒளி உள்ளே வரலாம். முட்டையிலிருந்து குஞ்சு வெளிவந்ததும் அது ஒளியை நோக்கிச் செல்கிறது. தட்டின் விளிம்பை அடைந்ததும் அது பெட்டியின் கீழ் அறையில் விழும். அங்கிருந்து குஞ்சுகளை வெளியே எடுத்துக் கொள்ளலம்.
பெட்டிக்குள் காற்றோட்டத்தையும் வெப்பநிலையையும் மிகத் திருத்தமாகக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பாதரசத்தையோ, இரு உலோகங்களாளான தடியையோ கொண்ட வெப்பநிலையை நிலைநிறுத்தும் சாதனத்தால் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தலாம். ஈரத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் அமைப்பும் இதில் இருக்கும்.
பெரிய பெட்டிகளில் ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டுப் பொரிக்க வைக்கலாம். செயற்கை அடைகாப்பில் பல நண்மைகள் உள்ளன. இயற்கை முறைையைவிட அதில் ஒரே சமயத்தில் அதிக முட்டைகளைப் பொரிக்கவைக்கலாம்; இம்முறையில் கெட்டுப்போகும் முட்டைகளும் குறைவு. இவ்வாறு பொரிக்கப்படும் குஞ்சுகளைப் பூச்சிகளும், நோய்க்கிருமிகளும் தொற்ற இடமில்லை. பொட்டைக் கோழியினால் நசுக்குண்டு மடியும் அபாயம் இதில் இல்லை.
பாக்டீரியா ஆராய்ச்சிச் சோதனைகளில் அவற்றை வளர்க்கப் பயனாகும் பெட்டிகளில் காற்றோட்டமோ. ஈரக் கட்டுப்பாடோ தேலையில்லை. இரட்டைக் கதவுகளைக்கொண்டு வெப்பத்தை வெளிவிடாத பொருளினால் ஆன பெட்டி இதற்குப் போதுமானது. காற்றை ஏதோவொரு வகையில் சூடேற்றவும், அதை மாறாத நிலையில் கட்டுப்படுத்தவும் இதில் அமைப்பு இருக்கும். வெளி வெப்பநிலையைவிடக் குறைவான வெப்பநிலையே ஒருவகை பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு ஏற்றதாயின் பெட்டியைக் குளிர்விக்கும் அமைப்பும் இருப்பதுண்டு.
டார்னியர் (Dr. Tarnier) என்ற பாரீஸ் நகர மருத்துவர் பருவத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகளைக் காக்க அவற்றை அடைகாக்கும் பெட்டியில் வைக்கும் முறையை 1880-ல் முதன்முதல் கையாண்டார். இப்போது இம்முறை பிரசவ ஆஸ்பத்திரிகளில் கையாளப்படுகிறது. இதற்கான பெட்டி இரு அறைகளைக் கொண்டது. மேல் அறையில் குழந்தை படுக்கவைக்கப்படுகிறது. கீழ் அறையில் குடான காற்று உள்ளே நுழைந்து போதிய ஈரத்தைப் பெற்று மேலே வந்து வெளியேறுகிறது. பருவத்தில் பிறக்கும் குழந்தைகளை விட அதற்குமுன் பிறப்பவைகளுக்கு அதிகமாக வெப்பமும் ஈரநிலையும் தேவை. இந்த நிலையில் பலநாட்கள் யைத்திருந்த பின்னரே குழத்தையை வெளியே விட முடியும். இமுறையில் 6 மாதங்களில் பிறந்த குழந்தைகளையும் பிழைக்க வைத்திருக்கிறார்கள்.