உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அட்சம்‌

விக்கிமூலம் இலிருந்து

அட்சம்‌ (Latitude) : ஓரிடத்தின்‌ அட்சம்‌ என்பது பூமத்தியரேகையிலிருந்து தெற்கிலோ, வடக்கிலோ அவ்விடத்திற்குள்ள் கோணத்‌ தொலைவு. இது பாகைகளில்‌ குறிப்பிடப்படும்‌. புவியானது திருத்தமான கோள வடிவுள்ளதாயின்‌ ஒரே தீர்க்கரேகையிலுள்ள இரு இடங்களின்‌ அட்சரேகைகளின்‌ வேறுபாடு ஒரு பாகை என்றால்‌ இந்த இடங்கள்‌ புவியின்‌ எப்பகுதியில்‌ இருந்தாலும்‌ அவற்றினிடையே உள்ள தொலைவு மாறாமல்‌ இருக்கும்‌. ஆனால்‌, துருவங்களில்‌ சற்றுத்‌ தட்டையாக இருப்பதால்‌ இத்தொலைவு பூமத்தியரேகையின்‌ அருகே குறைவாகவும்‌, துருவங்களின்‌ அருகே அதிகமாகவும்‌ இருக்கும்‌. இதன்‌ சராசரி மதப்பு சுமார்‌ 70 மைல்‌. புவியில்‌ ஓர்‌ இடத்தின்‌ பரப்பிற்குச்‌ செங்குத்‌தாக உள்ள கோட்டிற்கும்‌ பூமத்தியரேகைக்கும்‌ இடையே உள்ள தொலைவு பூகோள அட்சம்‌ (Geographical L.) எனப்படும்‌. பூமத்தியரேகையின்‌ தளத்திற்‌கும்‌, புவி மையத்தை ஓர்‌ இடத்தோடு இணைக்கும்‌ கோட்டிற்கும்‌ இடையே உள்ள கோணம்‌ அந்த இடத்‌தின் புவிமைய அட்சம்‌ (Geocentric L.) எனப்‌படும்.

புவியின்‌ மேலுள்ள இடங்களின்‌ இருப்பிடத்தைப்‌ பூகோள அட்சத்தால்‌ குறிப்பது போலவே, வானிலுள்ள பொருள்களின்‌ இருப்பிடத்தை வான அட்சம்‌ (Celestial L.) என்ற அளவினால்‌ குறிப்பீடுகிறார்கள்‌. இது வான மத்திய ரேகையிலிருந்து வடக்கிலோ தெற்கிலோ அப்பொருளுக்குள்ள கோணத்‌ தொலைவு. இது துருவத்‌திலிருந்து அந்தப்‌ பொருளுக்குள்ள கோணத்‌ தொலைவின்‌ அனுபூரகமாகும்‌. பூமி சுற்றுவதால்‌ ஈட்சத்திரங்‌களின்‌ இருப்பிடம்‌ மாறுவதுபோல்‌ தேரன்றினும்‌ அவற்றின்‌ துருவதூரம்‌ மாறுவதில்லை. இதனால்‌ அவற்‌றின்‌ வான அம்சமும்‌ மாறாது.

புவியின்‌ துருவங்கள்‌ நிலையாக இல்லாது இடம்‌ மாறுவதால்‌ பூமத்தியரேகையும்‌, அட்சங்களும்‌ காலப்போக்கில்‌ மாறுகின்றன. இந்த மாற்றங்கள்‌ சுமார்‌ 429 நாட்‌களுக்கு ஒருமுமை சீராக நிகழ்கின்‌றன. வானிலை விளைவுகளாலும்‌ துருவங்களில்‌ சில மாறுதல்கள்‌ நிகழ்ந்‌து அட்‌சங்கள்‌ மாறுகின்‌றன. சர்வதேசப்‌ புவியியல்‌ சங்கம்‌ இந்த மாறுதல்களை ஆராய்ந்தறிவதற்காக ஏறக்குறைய ஒரே அட்சரேகையிலுள்ள பல இடங்களில்‌ ஆராய்ச்சி நிலையங்களை ஏற்படுத்தியுள்ளது

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அட்சம்‌&oldid=1455911" இலிருந்து மீள்விக்கப்பட்டது