கலைக்களஞ்சியம்/அட்மிரல்டி தீவுகள்
Appearance
அட்மிரல்டி தீவுகள் : இவை பசிபிக் சமுத்திரத்திலுள்ள நியூகினி தீவின் வடக்கேயுள்ள பிஸ்மார்க் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த 40 தீவுகள். இத்தீவுகளில் மிகப் பெரியது மேனஸ் என்பது. பரப்பு: 800 சதுரமைல். மக்: 13.607 (1950). இங்கு மரப் பொருள்கள், தென்னைப் பொருள்கள், முத்து முதலியவை மிகுதியாக வாணிபம் செய்யப்படுகின்றன. 1914 வரையில் இவை ஜெர்மனிக்குச் சொந்தமா யிருந்தன. பிறகு இவை ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. 1942-ல் ஜப்பான் இத்தீவுகள்மீது படையெடுத்தது. இரண்டாம் உலக யுத்த முடிவிற்குப் பின் ஆஸ்திரேலியாவின் ஆட்சிக்கீழ் உள்ளன.