கலைக்களஞ்சியம்/அம்பிரியா
Appearance
அம்பிரியா (Ambria) : இத்தாலியில் ஒரு மாகாணம். இங்கு வாழும் அம்பிரியர் ஒருவகைப் பண்டைச் சாதியினர். இவர்கள் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய ஐரோப்பாவில் வசித்து வந்தனர் என்று கருத இடமுண்டு. இங்கே மக்கள் முன்பு பேசி வந்த மொழிக்கு அம்பிரிய மொழி என்பது பெயர். இது ஆஸ்கன் மொழிக்கு நெருங்கிய தொடர்புடையது. இது பெரும்பாலும் மலைப்பாங்கான இடமாயினும் செழிப்பாக இருக்கிறது. இங்கு எஃகு, சணல் முதலிய தொழிற் சாலைகள் பல உள்ளன. பரப்பு : 3,281 ச. மைல் ; மக் : 8.02,415 (1951).