உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அஜ்மீர்

விக்கிமூலம் இலிருந்து

அஜ்மீர் இந்திய யூனியனிலுள்ள சீ.பிரிவு இராச்சியங்களுள் ஒன்று. இது முன்னர் அஜ்மீர்-மீர்வாரா என்ற பெயர் கொண்டிருந்தது. இதன் பரப்பு 2,425 ச.மைல்; மக்: 6,92,506 (1951). ஆரவல்லி மலைத்தொடர் இதன் வழியே சென்று மீர்வார் பீடபூமியையும், மார்வார் சமவெளியையும் பிரிக்கிறது. இது மழை குறைவான பகுதியாகையால் இங்குப் புன்செய் நிலச்சாகுபடியே அதிகமாகச் செய்யப்படுகிறது. சோளம், பார்லி, பருத்தி, எண்ணெய் வித்துக்கள், கோதுமை முக்கியமான விளைபொருள்கள். அஜ்மீர், மீர்வார், கேக்கி ஆகியவை இதன் முக்கிய நகரங்கள். கடைசி இரண்டும் வியாபாரத்தலங்கள். இந்த இராச்சியத்தில் பல பஞ்சாலைகளும் நெசவாலைகளும் உள்ளன. பிரதம கமிஷனரின் ஆளுகையின் கீழுள்ள இந்த இராச்சியத்திற்கும் 30 உறுப்பினர் கொண்ட சட்டசபையொன்றுண்டு. மக் : 1,96,633(1951).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அஜ்மீர்&oldid=1455590" இலிருந்து மீள்விக்கப்பட்டது