உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அனோனேசீ

விக்கிமூலம் இலிருந்து

அனோனேசீ (Anonaceae ): சீத்தாக் குடும்பம் இரட்டை விதையிலையுள்ள மரங்கள், குற்றுச் செடிகள் கொடிகள், இலைகள் மாறொழுங்கின, தனி, முழு வடிவின இலையடிச் செதிலில்லாதவை பூக்கள் பெரும்பாலும் இரு பால் உள்ளவை. இதழ்கள் வட்டத்திற்கு மூன்றாக இருக்கும். புல்லி மூன்று. அல்லி பெரும்பாலும் ஆறு ; இரண்டு வட்டமாக அமைந்திருக்கும். இதழ்கள் சற்றுத் சற்றுத்தடித்தவை. பசுமை அல்லது பழுப்பு நிறமுள்ளவை. பகட்டாக இருப்பதில்லை. மகரந்தக் கேசரங்கள் பல. கேசரத் தாள் சிறியது. மகரந்தப் பையில் அறைகளைச் சேர்க்கும் இணைப்பு அறைகளுக்கு மேலே நீண்டு வளர்ந்திருக்கும். சூலகத்தில் பல சூலிலைகள் உண்டு. சூலறைபிரிந்தது(Apocarpous) சீத்தாப் போன்றவற்றில் சூலறை இணைந்ததாக (Syncarpous) இருக்கும். ஒரு பூத்திரள்கனி (Aggregate fruit). சிலவற்றில் உலர்கனியாகவும் சிலவற்றில் சதைக் கனியாகவும் இருக்கும்.

இது ஒரு முக்கியமான குடும்பம். பெரும்பாலும் அயன மண்டலத்தில் வளர்வது. சுமார் எண்ணூறு இனங்கள் இருக்கின்றன. பழத்துக்காகவும், வாசனைப் பொருள்களுக்காகவும், அழகுக்காகவும் சில வகைகள் பயிர் செய்யப்படுகின்றன. சீத்தாப்பழம்போன்ற சில மிகுந்த சுவையுடையவை. இந்தியா, மலேயா, பிலிப்பீன், கிழக்கிந்தியத் தீவுகள், அயன அமெரிக்கா முதலிய இடங் களில் நன்றாக வளர்கின்றன. நெட்டிலிங்கம் தோட்டங்களிலும் சாலைகளிலும் வைக்கும் மரம்; கூம்பு வடிவமாக உயர்ந்து வளர்வது. மனோரஞ்சிதம்

சீத்தா
முழுக்கனி
கனி : நெடுக்கு வெட்டு
1. கிளை
2. பூங்கொத்து
3. பூ: நெடுக்கு வெட்டு
4. பூவின் உறுப்புக்கள்
5. 6. 7. கேசரம் முன், பின், பக்கத் தோற்றங்கள்

ஒரு கொடி. அதன் பூ மிகுந்த வெடிப்பான மணமுள்ளது. இந்தோ-மலேயா, பிலிப்பீன் முதலிய இடங்களில் இலாங்-இலாங் என்னும் கனங்கா பயிர் செய்யப்படுகிறது. இதிலிருந்து மக்காசார் எண்ணெய் எடுக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவின் அயனமண்டலத்தில் வளரும் மானோடோரா மிரிஸ்டிகா (Monodora myristica)வின் விதை சாதிக்காய் போலப் பயன்படுகிறது. பார்க்க: சீத்தா, நெட்டிலிங்கம், கனங்கா, செரிமோயா, மனோரஞ்சிதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அனோனேசீ&oldid=1490558" இலிருந்து மீள்விக்கப்பட்டது