உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அனோபிலிஸ்

விக்கிமூலம் இலிருந்து

அனோபிலிஸ் (Anopheles) ஒரு சாதிக் கொசு. இதில் ஏறக்குறைய இருநூறு இனங்கள் இருக்கின்றன.

அனோபிலிஸ்
C கியூலெக்ஸ்
A அனோபிலிஸ்
1. முட்டை
2. லார்வா
3. பியூப்பா
4. கொசு.

இவற்றில் முப்பது நாற்பது வகைகள் நோய்களைப் பரப்புகின்றன. மலேரியா நோய் பெண் அனோபிலிஸால் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகிறது. இந்தியாவில் சாதாரணமாக இருக்கும் கியூலெக்ஸ் கொசுவுக்கும் அனோபிலிஸ் கொசுவுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. கியூலெக்ஸ் முட்டைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு தெப்பம்போல நீர்மேல் மிதக்கும். அனோபிலிஸ் முட்டைகள் தனித்தனியாக மிதக்கும். ஒவ்வொரு முட்டையின் நடுவிலும் இரு பக்கங்களிலும் காற்றறைகள் உண்டு. மிதவையாகப் பயன்படுகின்றன. கியூலெக்ஸின் லார்வா மூச்சு விடுவதற்காக நீர்மட்டத்திற்கு வந்தால் அந்த மட்டத்திற்குச் சாய்வான ஒரு கோணத்தில் தொங்கும். அனோபிலிஸ் லார்வா நீர்மட்டத்திற்குக் கீழே ஒரு போகாகக் கிடக்கும். கியூலெக்ஸின் பியூப்பா மூச்சுவிட வரும்போது அதன் தலையும் உடலும் நீர் மட்டத்திற்குச் செங்குத்தாக இருக்கும்படி நிற்கும். அனோபிலிஸ் பியூப்பாவின் தலையும் உடலும் சற்றுச் சாய்ந்து நிற்கும். கியூலெக்ஸ் உட்கார்ந்திருக்கும் கொசு போது தலையின் அச்சும் உடலச்சும் சேருமிடம் கூன்போல வளைந்திருக்கும். அனோபிலிஸ் தலையும் உடலும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். பார்க்க : கொசு, மலேரியா.