உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அனேதா

விக்கிமூலம் இலிருந்து

அனேதா (Agnatha) முதுகுத்தண்டுள்ள பிராணிகளில் ஒரு வகுப்பு. தாடையில்லா தவை என்று பொருள்படும். இக்காலத்தில் இதைச் சேர்ந்த இனங்கள் மிகச் சிலவே உள்ளன. அவற்றிற்குச் சைக்ளோஸ்டோமேற்றா (Cyclostomata) அதாவது வட்டவாயின என்று பெயர். இவை நீர்வாழ்வன. பல பண்புகளிலே மீன் போன்றவை. ஆயினும் இவற்றிற்குத் தாடையில்லை. மற்ற எல்லா முதுகுத்தண்டுப் பிராணிகளுக்கும் பொதுவாக உள்ள இணைத்துடுப்புக்கள், அல்லது இணைக்கைகால்கள் இவற்றிற்கு இல்லை. சிலவற்றிற்கு இணைத்துடுப்பு ஒரு ஜதை இருக்கலாம். முதுகுத்தண்டுப் பிராணிகளின் பாசில்களாகக் கிடைத்திருப்பவற்றில் வரையில் மிகப் பழமையானவை இவற்றினுடையவே. இந்தப் பாசில் பிராணிகள் ஆஸ்ட்ர கோடெர்ம்கள் எனப்படும். இவை 35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சைலூரியன், ஆர்டொவீசியன் காலங்களிலே வாழ்ந்தவை. முதுகுத் தண்டுப் பிராணிகளெல்லாம் இவற்றினின்றும் வழி வழியாக வந்தவை என்று கருதப்படுகின்றன. இவற்றைத் தாடையில்லாதவை என்று குறிப்பிடுவதுபோல, தாடையுள்ள மற்ற எல்லா முதுகுத் தண்டுப் பிராணிகளையும் ஒன்றாகச் சேர்த்து தோஸ்டோமேற்றா (Gnathostomata) தாடைவாய்ப் பிராணிகள் என்று சொல்வதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அனேதா&oldid=1465043" இலிருந்து மீள்விக்கப்பட்டது