கலைக்களஞ்சியம்/ஆதன்ஸ்
Appearance
ஆதன்ஸ் : கிரேக்க மொழியில் ஆதினாஸ் என்று கூறுவர். இந்தக் கிரேக்க நகரம் பண்டைக் காலத்தில் ஆட்டிகா இராச்சியத்தின் தலைநகராகவும் கிரேக்கப் பண்பாட்டின் நடுநாயகமாகவும் இருந்துவந்தது; அக்ரோப்பலிஸ் என்னும் தட்டையான குன்றின்மீது அமைந்திருந்தது. இந்த நகரம்போல் வேறு எந்த நகரமும் அத்தனை கவிஞர்களையும், கலைஞர்களையும், நாவலர்களையும் மேனாட்டுக்கு அளித்ததில்லை. பிளேட்டோ, பிடியாஸ், பெரிக்ளீஸ், டெமாஸ்தனீஸ், சாக்கிரட்டீஸ் போன்ற பெரியோர்கள் வாழ்ந்துவந்த நகரம் இதுவே. இதுவே மேனாட்டு நாகரிகத்தின் தாயகமாகும். கோயிலும் அதன் சிற்பங்களும் நனி சிறந்தவை. பிளேட்டோவின் அக்காடமியும் அரிஸ்டாட்டிலின் லைசியமும் இதன் அருகில் நடைபெற்று வந்தன. இப்போது கிரீஸ் நாட்டின் தலை நகரம். மக் : 13,15,571 (1951).