கலைக்களஞ்சியம்/ஆர்கான்
Appearance
ஆர்கான் (Argon) : குறியீடு A : அணுநிறை 39.944 : அணுவெண் 18. சடவாயுக்களில் (த.க.) ஒன்று. இது 1894-ல் சர் வில்லியம் ராம்சேயினால் கண்டுபிடிக்கப்பட்டது. காற்றில் 0.932% லிருந்து 0.935%வரை இது உள்ளது. இதன் அடர்த்தி 1.78364 கிராம் லிட்டர், கொ.நி.-186°; உ. நி. 189.6. பூமியின் ஒவ்வொரு சதுர மைல் பரப்பின் மேலும் உள்ள காற்றில் 80,00,00,000 ராத்தல் ஆர்கான் உள்ளதெனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் கரைதிறன் 5.8 க.செ.மீ/0° காற்றிலிருந்து மற்ற வாயுக்களை அகற்றி இது தயாரிக்கப்படுகிறது. மின்சார விளக்குக்களில் அடைக்க இது பயன்படுகிறது. ம. ஏ. து.
ஆர்கான் (Argonne) பிரான்சு நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஒரு காடு. இரண்டு உலக யுத்தங்களிலும் இப் பிரதேசத்தில் பிரெஞ்சுப் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் இடையே பெரும்போர் நடைபெற்றது.