உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆலா

விக்கிமூலம் இலிருந்து

ஆலா கடற்கரையில் வாழும் கழுகு வகை. (White bellied sea eagle). இது பருந்தளவா யிருக்கும்; தலையும் மார்பும் வயிறும் வாலும் வெளுத்து, மற்றெங்கும் கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். கடல் மீது நாளெல்லாம் சளைக்காது இறக்கையடித்தும் வட்ட மிட்டும் பறந்து உரத்த குரலில் கத்தும். இணைசேரும் காலத்தில் மற்றக் காலங்களைவிட அதிகமாகப் பறந்து அலைந்து கூக்குரலிடும். இது நண்டு, மீன் வகைகளைப்

ஆலா

பிடித்துத் தின்னும். ஆற்றுக் குருவியையும் ஆலா என்பதுண்டு. பார்க்க : ஆற்றுக்குருவி. மா. கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆலா&oldid=1457662" இலிருந்து மீள்விக்கப்பட்டது