கலைக்களஞ்சியம்/ஆஸ்ட்டன்
Appearance
ஆஸ்ட்டன் (Aston, 1877-1945) ஆங்கிலப் பௌதிக அறிஞர். இவர் பர்மிங்ஹாமில் பிறந்து, அவ்வூரிலும் கேம்பிரிட்ஜிலும் கல்வி கற்றார். 1909ஆம் ஆண்டில் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியரானார். 1922-ல் இவர் ரசாயனத்தில் நோபெல் பரிசு பெற்றார். 1935-ல் சர்வதேச அணு ஆராய்ச்சிக் குழுவின் தலைவரானார். ஐசோடோப்புக் களைப்பற்றிய தற்கால அறிவிற்கு இவரே அடிப்படையான காரணராவார். இவர் அமைத்த நிறை நிறமாலை காட்டி (Mass Spectroscope) என்னும் கருவி ஐசோடோப்பு ஆராய்ச்சியில் பெரிதும் உதவும் சாதனமாகும். பெரும்பான்மையான தனிமங்கள் ஐசோடோப்புக்களைக் கொண்டவை என இவர் காட்டினார்.