உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆஸ்ட்டர்

விக்கிமூலம் இலிருந்து

ஆஸ்ட்டர் (Aster) சாமந்தி வகையை சார்ந்தது. கண்கவர் பூக்களுள்ள பெரிய கூட்டம். நூற்றுக் கணக்கான வகைகளைப் பல தேசங்களில் தோட்டங்களில் வளர்க்கிறார்கள். ஆஸ்ட்ரா என்றால் விண்மீன் எனப் பொருள்படும். தண்டுகளில் இலைகள் மாறொழுங்கில் அமைந்திருக்கும். பூக்கள் பல நிறமானவை. வெள்ளை முதல் செங்கறுப்பு வரையில் இருக்கும். சிவப்பு, ரோஜா,நீலம் முதலிய நிறங்களும் உண்டு. பூக்களெல்லாம் வட்டமான தட்டுப்போல அடுக்கியிருக்கும். இதழ்கள் மெலிந்து நீண்டு கதிர்கள் போல இருக்கும். குடும்பம்: கம்பாசிட்டீ (Compositae).