ஈரோடு மாவட்ட வரலாறு
ஈரோடு மாவட்ட வரலாறு
ஆசிரியர்
புலவர் செ. இராசு எம்.ஏ., பிஎச்.டி.,
முன்னாள் தலைவர்
கல்வெட்டு - தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
வெளியீடு
கொங்கு ஆய்வு மையம்
84/5டி.பி.ஜி. காம்ப்ளக்ஸ்
புதிய ஆசிரியர் குடியிருப்பு அருகில்
ஈரோடு-638011.
நூற்குறிப்பு
இந்நூல் ஈரோடு கட்டிட ஒப்பந்தக்காரர் திரு. R.P. பெரியசாமி, தென்முகம் வெள்ளோடு சாந்தந்தை குலம் இராசாசுவாமி நற்பணி மன்றத் தலைவர் திரு. N.T. கண்ணுசாமி ஆகியோர் பொருட்கொடையால் வெளியிடப்படுகிறது.
அவர்கட்கு எங்கள் மனமார்ந்த நன்றி உரியதாகுக.
நூலின் பெயர் | : ஈரோடு மாவட்ட வரலாறு |
நூல் பொருள் | : வரலாறு |
ஆசிரியர் | : புலவர் செ. இராசு எம்.ஏ., பிஎச்.டி- |
மொழி | : தமிழ் |
நூல் உரிமை | : ஆசிரியர்க்கு |
பதிப்பு ஆண்டு | : 2007 |
நூலின் அளவு | : 11 செ.மீ. x 18 செ.மீ. |
பக்கங்கள் | : 298 |
அச்சு எழுத்து | : 11 புள்ளி |
விலை | : ரூ.100/- |
நூல் கிடைக்குமிடம் | : கொங்கு ஆய்வு மையம் |
64/5 டி.பி.ஜி. காம்ப்ளக்ஸ் புதிய ஆசிரியர் குடியிருப்பு அருகில் ஈரோடு 638 011. போன் : 0424 2262864 செல் : 99942 77711 | |
நூல் & அட்டை | |
வடிவமைப்பு | : காயத்திரி ஆப்செட் |
29 நாச்சியப்பா வீதி ஈரோடு-638 001. போன்: 0424-2250184 |
த. உதயச்சந்திரன் இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்,
ஈரோடு மாவட்டம்,
அணிந்துரை
வணிக உலகில் கடும் போட்டிச் சூழலில் தனனை நிலை நிறுத்திக் கொண்டு, தமிழகத்தையும், இந்திய நாட்டையும் தன் தொழில் முனையும் திறனால் ஒளி விடச் செய்யும் கொங்கு மண்டலம், தன் பண்பாட்டு அடையாளங்களைத் தேடிப் புறப்பட்டிருக்கிறது.
இப்பண்பாட்டுப் பயணத்தை வழிநடத்திச் செல்பவர் பெருமதிப்பிற்குரிய புலவர் இராசு அவர்கள். அவருடைய ஆழ்ந்த அறிவு மற்றும் புலமையைக் கொண்டு படைத்திருக்கும் இத்நூல் ஈரோடு மாவட்டத்தின் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், ஏன் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஓர் கலங்கரை விளக்கம் மட்டுமன்று: ஒரு தசுவல் தளமும் கூட.
இந்நூல் கல்வெட்டுகள் துணை கொண்டு வரலாற்று நோக்கிலும், இலக்கியச் சான்றுகள் கொண்டு ஆதாரபூர்வமானதாகவும், தொல் பழங்காலம் முதல் தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலங்களினூடே கும்பினிப் படையினரின் ஆட்சி, ஆங்கிலேயரின் ஆட்சி என்று விரிந்து தற்காலம் வரை நீண்டிருக்கிறது.
ஒவ்வோர் காலகட்டத்திலும் ஆட்சிமுறை குறித்தும், சமூக வழக்கங்கள் குறித்தும், சமயங்கள் பல பரவியது குறித்தும் விளக்கமாய் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பழங்காலப் பெருமைகளை மட்டும் பட்டியலிடாமல் தற்காலச் சாதனைகளையும் இணைத்து உரைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈரோடு மாவட்டத்தில் கிடைந்த தொல்லுயிரி எச்சங்கள், சங்க இலக்கியங்கள் போற்றும் நொய்யல்கரை நாகரிகம், அம்மக்கள் மேற் கொண்டிருந்த கடல் கடந்த வணிகத் தொடர்புகள் யாவையும் இப்பகுதி தமிழ்ப் பண்பாட்டின் தலைநகராகவே விளங்கியிருப்பதை நிறுவுகின்றன.
பவானியாற்றில் நீர் குளிர்ந்து பாய்வதற்குக் காரணம் சந்தன மரங்கள் மிதந்து வந்ததாகவும், பெண்கள் தங்கள் அணிகலன்களை மறந்து அல்லது தொலைத்துவிட்டால் தெளிந்த ஆற்று நீர்வழி கண்டுபிடிப்பது குறித்த செய்திகளையும் படிக்கும் பொழுது ஏக்கமே மிகுகின்றது. திப்புசுல்தான் சந்தன மரங்களை "அரச மரங்கள்" (Royal Trees) என அறிவிக்கை செய்து பாதுகாக்க முயற்சித்தது, அவருடைய சமய நல்லிணக்க முயற்சிகள் என வரலாற்றுத் தகவல் களஞ்சியமாகவே இந்நூல் திகழ்கிறது.
மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அவர்தம் ஆட்சிப் பரப்பு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதற்குக் காரணம் மதுரைக் கோட்டையிலிருந்த 72 கொத்தளங்கள் என்ற செய்தி வியப்பைத்தருகிறது. மெக்காலே கல்வித் திட்டத்திற்கு முன்னதாகவே 'கலெக்டர் பள்ளி', 'தாசில்தார் பள்ளி' என அமைப்புகள் நிறுவப்பட்டதும் ஈரோடு மாவட்டத்தில் என அறியும்போது வியப்பு எல்லை மீறுகிறது.
இப்பகுதியைச் சார்ந்த வரலாற்று நாயகர்கள் அனைவரும், காலிங்கராயன், தீரன் சின்னமலை முதல் தந்தை பெரியார் வரை இந்நூலில் கம்பீரமாக வலம் வருகிறார்கள்.
பழங்காலத் தொல்லுயிரி எச்சங்களிலிருந்து, தற்காலப் பொறியியல் கல்லூரிகள் வரை விவரங்கள் அனைத்தும் அடங்கிய இத்தகவல் களஞ்சியம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இம்மாவட்டத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் என உறுதியாய் நம்புகிறேன்.
நூலாசிரியர்க்கு என் வாழ்த்துக்கள்,
ஈரோடு, அன்புடன்,
07.06.2007. த. உதயச்சந்திரன்
முன்னுரை
பண்டைய வரலாறு நமக்குப் பாடமாக அமைந்து இக்கால வாழ்வைச் செம்மைப்படுத்தி எதிர்கால நல்வாழ்விற்கு வழிகாட்டக் கூடியது. முன்னோர் வரலாற்றை அறியாத மக்கள் எதிர்கால மக்களுக்கு வழிகாட்டும் வண்ணம் வரலாற்றைப் படைக்க முடியாது. முன்னோர் நடந்த பாதை தெரிந்தால்தான் நாம் சரியான பாதையில் நடக்க முடியும். எனவே ஒரு நாட்டின் வரலாறு தொகுக்கப்படுவது இன்றியமையாதது.
ஒரு நாட்டின் வரலாற்றில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் உரிய தனிப்பட்ட சிறப்புச் செய்திகள் முழுமையாக இடம்பெறுவது இயலாது. பொதுச் செய்திகளே இடம் பெற வாய்ப்புள்ளது. எனவே வட்டார வரலாறுகள், உள்ளூர் வரலாறுகள் தொகுக்கப்படுதல் மிகவும் அவசியமானதாகும். இம்முயற்சியில் உழைக்க ஆய்வாளர்கள் பலர் அண்மையில் முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செயலாகும். வட்டார வரலாற்றின் முக்கியத்துவம் கருதி புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தினர் அண்மையில் நாடு தழுவிய ஒரு பயிலரங்கம் நடத்தினர்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு ஆவணக் காப்பகம் மாவட்டம்தோறும் 'விவரச் சுவடி' (District Gezetteer) வெளியிட்டுள்ளனர். வெளிவந்த நாட்டு வரலாற்று நூல் செய்திகளும், பல்வேறு அரசுத் துறைகள் அளிந்த செய்திகளும் மட்டுமே அவற்றில் அடங்கியுள்ளது. அவை ஆங்கிலத்திலேயே உள்ளன. இரண்டொரு மாவட்டத்திற்கு மட்டுமே தமிழ்ப்பதிப்பு வெளிவந்துள்ளது. புதிய மாவட்டங்கள் பல ஏற்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விவரச் சுவடிகள் தொகுக்கும் பணிகள் வேகமாக நடைபெறவில்லை.
பயண எழுத்தாளர் 'சோமலெ' தொகுத்தளித்த மாவட்ட வரலாறுகள் மிகச் சிறப்புடையவை. ஆனால் அரசின் திட்டங்கள், அதன் வளர்ச்சி இவைகளுடன் அவர் பயணத்தில் கண்டு, கேட்ட நிகழ்வுகள் மட்டுமே அவற்றில் இடம் பெற்றிருந்தன. சென்னை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட மாவட்ட வரலாறுகளில் சுவையான பல்வேறு செய்திகள் சிறந்த முறையில் தொகுக்கப்பட்டிருந்தாலும் அவை மிகச்சுருக்கமாகவும் துணுக்குச் செய்திகளின் இணைப்பாகவே இருந்தன. இவ்விரண்டு வரிசைகளிலும் தொல்லியல், ஆவணங்கள், இலக்கியச் செய்திகள் போதுமான அளவு இடம் பெறவில்லை.
ஆனந்த விகடன் வெளியிட்ட மாவட்ட மலர்களில் வாசகர்களைக் கவரும் வண்ணம் சுவையான செய்திகள் இடம் பெற்றிருந்தாலும் தொடர் வரலாறுகளாக அவை அமையவில்லை.
தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை மாவட்டம்தோறும் வரலாற்றுக் கருத்தரங்குகள் நடத்தினர். சில தலைப்புகளே அவற்றில் இடம்பெற்றன. ஓரிரு மாவட்டக் கருத்தரங்குக் கட்டுரைகள் மட்டுமே நூல் வடிவம் பெற்றன. அவற்றிலும் வரலாறு முழுமையாக இல்லை.
தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை பல மாவட்டங்களுக்குத் தொல்லியல் கையேடுகள் வெளியிட்டுள்ளனர். சிறந்த அம்முயற்சியில் பிற வரலாற்றுச் செய்திகள் அதிகம் இடம் பெறவில்லை.
மேற்கண்ட அனைத்து முயற்சிகளிலும் ஒரு மாவட்டத்தின் பன்முக மாட்சிகளைக் கூறும் முழுமையான வரலாறு வெளிப்படவில்லை. இக்குறையைப் போக்கும் வண்ணம் நவீன இலக்கிய உலகின் விடிவெள்ளியாகத் திகழும் சென்னை 'அம்ருதா' பதிப்பகத்தினர் அந்தந்த மாவட்டங்களைப் பற்றி ஓரளவு அறிந்த - புரிந்த - தெரிந்த அன்பர்களைக் கொண்டு மாவட்ட வரலாறுகள் தொகுக்க முன்வந்தனர். சில மாவட்ட அன்பர்கட்கு மாவட்ட வரலாறு எழுத வேண்டுகோளும் விடுத்தனர்.
‘ஈரோடு மாவட்ட வரலாறு' எழுதும் பணி எனக்கு அளிக்கப்பட்டது. என் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தேவையான விரிவான கள ஆய்வு மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. அதே சமயம் தருந்த ஓய்வு கிடைத்ததால்தான் ஓரளவேனும் இப்பணியை மேற்கொள்ள முடிந்தது. இந்நூல் தொகுக்கும் பணிக்கு மூலகாரணமாக இருந்தவர்கள் அம்ருதா பதிப்பகத்தினரும், அம்ருதா இதழின் சிறப்பாசிரியர் திருமதி. திலகவதி இ.கா.ப, அவர்களும் ஆவார்கள். அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலம் இராசாசுவாமி நற்பணிமன்றம் அமைத்து "வெள்ளோடு காணியாளர்கள் வரலாறு" வெளியிட்டு, காலிங்கராயன் சிலை அமைத்து இராசா சுவாமி கோயில் திருப்பணிக்கும் குல ஒற்றுமைக்கும் பாடுபட்டு வரும் தலைவர் திரு. N.T. கண்ணுசாமி அவர்களும், நற்பணி மன்ற முக்கிய உறுப்பினர்களுள் ஒருவருமான ஈரோடு கட்டிட ஒப்பந்தக்காரர் திரு. R.P. பெரியசாமி அவர்களும் இந்நூலைத் தாங்களே வெளியிட வேண்டும் என விரும்பினர். என் மக்களும் குடும்பத்தினரும் 'கொங்கு ஆய்வு மையம்' பெயரில் இந்நூல் வெளியிடுவது நல்லது என்று கூறினர்.
ஒரு நாட்டு வரலாறுக்குள்ள பல கூறுகளுடன் ஈரோடு மாவட்டத்தின் இன்றியமையாச் சிறப்புச் செய்திகள் அனைத்தும் இயன்ற வரை இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. கால வளர்ச்சிக்கு ஏற்ப சில செய்திகளில் குறை இருக்கலாம்; அல்லது விடுபட்டிருக்கலாம். அன்பர்கள் சுட்டிக் காட்டினால் அடுத்த பதிப்பில் அவை திருத்தம் பெறும்.
தகவல்கள் அளித்த துறைகள், அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. கள ஆய்விலும், தகவல் திரட்டுவதிலும் உடனிருந்து உதவியவர் செவாலியர் டாக்டர் கொங்கு என். கொளந்தசாமி அவர்கள். அவர்கட்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக.
பொதுவாக என் ஆய்வில் அக்கறை செலுத்தும் என் மனைவி கௌரி, மக்கள் இரா, ஜெயப்பிரகாஷ், இரா. செந்தில்குமார், இரா. ஜெயமோகன் மற்றும் குடும்பத்தினர் 'ஈரோடு மாவட்ட வரலாறு' தொகுப்பதில் பேரார்வம் காட்டினர்.
மாவட்ட வரலாறாக இருப்பதால் மாவட்ட ஆட்சியரிடம் அணிந்துரை பெற வேண்டும் என்று விரும்பினேன். தமிழியல் ஆர்வலர், நூல் நயம் தெரிந்தவர், தொல்லியல் - வரலாறு - இலக்கிய நாட்டம் உடையவர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. த. உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள். இந்நூலை மிகச்சிறந்த முறையில் அவர்கள் அறிமுகம் செய்து பாராட்டியிருப்பது பெருமையளிக்கிறது. அவை என் பணிகளை ஊக்கப்படுத்தும். கொங்கு மண்டலத்தின் பழமை துலக்கும் புதுமைப் படைப்புக்கள் வெளியிடப்பெறவேண்டும் எனப் பேரார்வம் கொண்டிருக்கும் அவர்களின் அணிந்துரை இந்நூலின் தோரண வாயிலாக அமைந்துள்ளது. அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றி உரியதாகுக.
ஈரோடு மாவட்ட மக்களும், இளைஞர்களும், மாணவர்களும், வரலாற்றில் நாட்டமுடைய தமிழக மக்களும் இந்நூலை வரவேற்று ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன்.
இந்நூலைக் குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக வடிவமைத்து அச்சிட்ட ஈரோடு காயத்ரி ஆப்செட் உரிமையாளர்கட்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக.
ஈரோடு, அன்பன்
06.07.07. செ. இராசு
பொருளடக்கம்
பக்கம்
1. | 13 |
2. | 16 |
3. | 20 |
4. தொல் பழங்காலம் 23
அ) தொல்லுயிரி எச்சங்கள்
ஆ) பழைய கற்காலமும் புதிய கற்காலமும்
இ) பெருங்கற்காலம்5. மலைகளும் காடுகளும் 32
6. மலைவாழ் பழங்குடியினர் 37
7. சங்க காலம் 42
8. இரட்டர் கங்கர் காலம் 47
9. சேரர் காலம் 49
10. கொங்குச் சோழர் காலம் 53
11. கொங்குப் பாண்டியர் காலம் 60
12. போசளர் காலம் 63
13. மதுரை சுல்தான்கள் காலம் 66
14. விசயநகர அரசுக் காலம் 69
15. உம்மத்தூர்த் தலைவர் காலம் 72
16. மதுரை நாயக்கர் காலம் 74
17. மைசூர் உடையார் காலம் 81
18. ஐதர்அலி திப்புசுல்தான் காலம் 85
19. கும்பினியாட்சிக் காலம் 90
20. | 94 |
21. விடுதலைப் போர் 97
22. சமயங்கள் 105
அ) சைவம்
ஆ) வைணவம்
இ) சமணம்
ஈ) இஸ்லாம்
உ) கிறித்துவம்23. தொல்லெழுத்து ஆவணங்கள் 129
அ) கல்வெட்டுக்களும் செப்பேடுகளும்
ஆ) ஓலைச் சுவடிகள்
இ) நாணயங்கள்24. நினைவுக் கற்கள் 137
அ) வீரர் நடுகற்கள்
ஆ) தலைப்பலிக் கற்கள்
இ) புலிப்போர் நடுகற்கள்
ஈ) சதிக்கற்கள்25. வரி - அளவு - நாணயங்கள் 139
26. கனிம வளம் 146
27. நீர்ப்பாசனத் திட்டங்கள் 151
28. வேளாண்மை 154
29. தொழில்கள் 163
30. வாணிகம் 172
31. கல்வி நிலை 183
32. தமிழ் வளர்ச்சி 188
33. | 195 |
34. | 199 |
35. | 204 |
35. | 209 |
37. | 215 |
38. | 220 |
39. | 226 |
40. | 230 |
41. | 243 |
42. | 248 |
43. | 251 |