இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
34 ஆசிய ஜோதி ஒத்த பிறப்பாரும்- நாங்களும் உங்களைப் போல, சுத்த சூனியத்தில்-நின்று தோன்றிய ஆவிகளாம் மாறி வருந்துயரால்-இன்ப வாழ்வே நமக்கு இல்லை: தேறும் அறிஞளே நீ - உண்மை தெரியக் கூறுகின்றோம். நித்திய ஆனந்தத்தை - அரசே! நீயும் அடைவதுண்டோ? சித்தத் தெளிவுடையாய்--சிறிது சிந்தனை செய்திடுவாய். அன்பு இருக்குமெனில் - அதிலும் அளவ றியவொண்ணா இன்பம் எய்திடலாம்-ஐயம் யாது மேயில்லை. கண்ட வாழ்விறுதான் - நிலையாக் காற்றின் வாழ்வேயாம்; கொண்ட தந்தியின்மேல்-எழும் குரலே போன்றதுவாம். சால வேஉசைம்-துயரால் தளர்ந்து வாடுதையா! மாலை மாலையாய்க்--எண்ணீt வடிய விடுகுதையா . 8 9 10