உள்ளடக்கத்துக்குச் செல்

உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/கற்பிக்க உதவும்

விக்கிமூலம் இலிருந்து

8. கற்பிக்க உதவும் முறைகள்
(METHODS OF TEACHING PHYSICAL ACTIVITIES)

முறையின் நிறை

ஒரு பாடத்தைக் கற்பிக்கிற போது, ஏதாவது ஒரு . கற்பிக்கும் முறையைப் பயன்படுத்த வேண்டும்.

சிறப்பாகக் கற்பிக்க, திட்டவட்டமான, தீர்மானமான முறை ஒன்றைக் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், கற்பிக்கும் முயற்சிகள் வீணாகிப் போய்விடும்.

சரியான கற்பிக்கும் முறையைக் கைக் கொண்டு விட்டால், அது கற்கும் செயலைக் கனிவாக்கிவிடும். ஆசிரியரின் அறிய முயற்சியும் பலனளிக்கும். முழுப்பாடத் திட்டத்தையும் முடித்து வைக்கும் நேரம் தந்து, நினைவை நிறைவேற்றி வைக்கும் சரியான பாடத்திட்டம், முறையாக நடக்கவும், மாணவர்களை உற்சாகப்படுத்தவும், செய்து மலர்ச்சியை ஏற்படுத்தும்.

இந்த அடிப்படையைக் கொண்டே, ஆய்வறிஞர்கள் முயற்சி பல மேற்கொண்டு, கற்பிக்கும் முறைகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர்.

ஆகவே, பாடத்திட்டத்திற்கேற்ப; மாணவர்களுக் கேற்ப, முகிழ்த்து வரும் சூழ்நிலைகளுக்கேற்ப, கற்பிக்கும் முறையை மாற்றிக் கொள்ளலாம். மாறி மாறிக் கற்பிக்கும் முறைகளைக் கடைப்பிடிக்க, கீழே கொடுத்திருக்கும் தலைப்புகளை அறிந்து பின்பற்ற வேண்டும்.

உடற்கல்வியில் சில முக்கியமான கற்பிக்கும் முறைகள்.

1. வாய் மொழி விளக்க முறை

(Oral method)

எந்தவித செயலையும் செய்து காட்டாமல், வெறுமனே வாய்விளக்கத்துடன், பாடத்தை நடத்துதல். விளக்கத்திற்குப் பிறகு, மாணவர்களை செய்யுமாறு தூண்டுதல்,

உடற்கல்வித்துறைக்கு இது பொருத்தமான முறையல்ல. உடற்கல்வி என்பது செய்து கொண்டே கற்கின்ற கல்வியாகும்.

என்றாலும் விளக்க முறை என்பதில், அன்றாட அறிவுச் செய்திகளை, விளக்கமாக, தெளிவாகக் கூறுதல்: எளிய சொற்களில், இனிமையாக, புரியும்படி, கேட்க மகிழ்ச்சி உண்டாகும்படி பேசுதல்; தெரிந்ததிலிருந்து தெரியாத கருத்துக்களைக் கூறுதல் போன்றவையும் அடங்கும்.

2. கலந்துரையாடல் முறை

(Discussion method)

ஆசிரியர் மாணவர், பாடப் பொருள் பற்றிப் பேசி, கலந்துரையாடிக் கற்றுக் கொள்கிறமுறை.

இதுவும் வாய்மொழி விளக்கமுறையைச் சார்ந்தது தான்.

மாணவர்கள் தங்கள் சந்தேகத்தைக் கேட்கவும், ஆசிரியர் தீர்த்து வைக்கவும் கூடிய சந்தர்ப்பத்தை, இந்த கற்பிக்கும் முறை கொடுத்து உதவுகிறது.

இந்த முறையில் செயல் வாய்ப்பு இல்லையென்றாலும், மாணவர்களை உற்சாகமாகப் பங்கு பெற உதவுகிறது. சுய வெளிப்பாட்டுக்கு உற்சாகம் அளிக்கிறது.

3. செயல் விளக்க முறை (Demonstration method)

ஆசிரியர் சுருக்கமாக சொல் விளக்கத்துடன், பயிற்சிகளை சொல்லியபடி செய்து காட்டுவார். ஆசிரியரின் செயல் விளக்கத்தை அறிந்து கொண்டு, மாணவர்களும் செய்து பழகுவர்.

செயல் விளக்கமுறைதான் சிறப்பான கற்பிக்கும் முறை என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

செயல்விளக்கமுறை எப்படி அமைய வேண்டும் என்று பார்ப்போம்.

செயல்விளக்கமானது சரியாகவும் தவறில்லாமலும், இருக்க வேண்டும் சொல்லிய வண்ணமே செய்து காட்ட வேண்டும்.

செயல் விளக்கம் முதலில் மெதுவாக அமைந்து, பிறகு படிப்படியாக வேகம் பெற வேண்டும்:

முக்கியமான திறன் நுணுக்கங்களை, தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கொண்டு கற்பிக்கிற போது, அவர்களும் பயன் பெறுகின்றார்கள். பார்க்கின்றவர்களுக்கும் அனுபவமும், தெளிவும் பிறக்கிறது.

4. பார்த்துச் செய்யும் முறை
(Imitation method)

இதுவும் ஒருவகையில், செயல்விளக்கம் போன்றதுதான்.

குறிப்பிட்டப் பயிற்சியானது, ஏற்கனவே மாணவர்களுக்கு தெரிந்ததாக இருந்தால்; அல்லது எளிதில் செய்யக் கூடிய பயிற்சியாக இருந்தால், ஆசிரியர் செய்யும் போழுதே, பார்த்து, மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும். ஆசிரியரைப் பின்பற்றி, பார்த்தது பார்த்தபடியே செய்யும் பக்குவம் தர, இந்த முறை இனிதாக உதவுகிறது.

பார்த்துச் செய்யும் முறை, செயல் விளக்க முறைக்கு உதவுவதாகவும் இருக்கிறது.

5. நாடக முறை
(Dramatization method)

இது ஒரு புத்துணர்வூட்டும் போதிக்கும் முறையாகும். பலவகைப்பட்ட மிருகங்கள், பறவைகள், வாகனங்கள் போன்று நடந்து காட்டுதல். பறவைகள் போல் செய்து காட்டுதல். ஊர்திகள் போல் ஊர்ந்து காட்டுதல்.

இவற்றைப் போலவேகதை விளையாட்டுக்களும், பாடி விளையாடும் விளையாட்டுக்களும் உண்டு. கதையை நடித்துக்காட்டி மாணவர்கள் விளையாடுவர்.

நாடக முறையானது, குழந்தைகளுக்கு ஏற்றது. இந்த முறை, மாணவர்களின் கற்பனைத் திறனையும்டி புனைவாற்றலையும் வளர்க்கும் வாய்ப்பளிக்கிறது.

6. விருப்ப முறை (At will Method)

இந்தப் போதனா முறையில், அவரவர் விருப்பத்திற்கேற்ப பயிற்சி செய்யும்படி, மாணவர்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படுகின்றார்கள்.

எந்தப் பயிற்சியில் அவர்களுக்கு ஈடுபாடு இருக்கிறதோ, அவற்றை தாராளமாக, தன்னிச்சையாக செய்து, தேர்ச்சி பெறுகின்றார்கள்.

இந்த முறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், மாறாத தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கிற வாய்ப்புக்களை வழங்குகிறது.

7. தாளலய பயிற்சி முறை (Set drill Method)

உடற்கல்வியில் உள்ள சிறப்பான பயிற்சி முறைகளை, தாளலய நயத்துடன் கற்பிக்கின்ற முறையாகும்.

லெசிம், டம்பெல்ஸ், பெரும் கழிகள், குறுந்தடிகள் கொண்டு செய்யும் பயிற்சிகளுடன், வெறுங்கையுடன் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் தாளத்துடன், லயம் மாறாகத் தொடர்ந்து செய்வது இப்பயிற்சி முறையின் முக்கியத்துவமாகும்.

தாளலயத்துடன் செய்கிறபோது, மாணவர்களுக்கு இது பேரார்வத்தையும், பெரும் மனக்கிளர்ச்சியையும் பெருக்கெடுத்தோடவிடுகிறது.

8. முழுமையான முறை (Whole Method)

ஒரு பயிற்சியைப் பாகம் பாகமாகப் பிரித்துக் கற்பிக்காமல், முழுமையாகவே, அதைக் கற்பித்துக் கொடுக்கும் முறைக்கே, முழுமையான முறை என்று பெயர்.

4. பார்த்துச் செய்யும் முறை
(Imitation method)

இதுவும் ஒருவகையில், செயல்விளக்கம் போன்றதுதான்.

குறிப்பிட்டப் பயிற்சியானது, ஏற்கனவே மாணவர்களுக்கு தெரிந்ததாக இருந்தால்; அல்லது எளிதில் செய்யக் கூடிய பயிற்சியாக இருந்தால், ஆசிரியர் செய்யும் போழுதே, பார்த்து, மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும்.

ஆசிரியரைப் பின்பற்றி, பார்த்தது பார்த்தபடியே செய்யும் பக்குவம் தர, இந்த முறை இனிதாக உதவுகிறது.

பார்த்துச் செய்யும் முறை, செயல் விளக்க முறைக்கு உதவுவதாகவும் இருக்கிறது.

5. நாடக முறை
(Dramatization method)

இது ஒரு புத்துணர்வூட்டும் போதிக்கும் முறையாகும்.

பலவகைப்பட்ட மிருகங்கள், பறவைகள், வாகனங்கள் போன்று நடந்து காட்டுதல். பறவைகள் போல் செய்து காட்டுதல். ஊர்திகள் போல் ஊர்ந்து காட்டுதல்.

இவற்றைப் போலவேகதை விளையாட்டுக்களும், பாடி விளையாடும் விளையாட்டுக்களும் உண்டு. கதையை நடித்துக்காட்டி மாணவர்கள் விளையாடுவர்.

நாடக முறையானது, குழந்தைகளுக்கு ஏற்றது. இந்த முறை, மாணவர்களின் கற்பனைத் திறனையும்டி புனைவாற்றலையும் வளர்க்கும் வாய்ப்பளிக்கிறது.

முதன்மை விளையாட்டுக்களை, மற்றும் ஓடுகளப் போட்டி நிகழ்ச்சிகளைக் கற்பிக்க, இந்த முறை சிறப்பானதாகும்.

11. கட்டளை முறை (Command Method)

ஒரு செயலைச் செய்யுமாறு மாணவர்களைப் பணிக்க, இந்தக் கட்டளை முறை பயன்படுகிறது.

எந்தச் செயலை, எப்பொழுது, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை கட்டளை மூலம் ஆசிரியர் மாணவர் களுக்குக் கற்றுத் தருகிறார்.

இதற்காகப் பயன்படும் சொற்களைக் கட்டளைச் சொற்கள் என்று அழைக்கிறோம்.

இந்த கட்டளை முறை, இரண்டு வகைப்படுகிறது.

1. உணர்த்தும் கட்டளை முறை (Response Command)

2. தொடர்ந்து செய்யும் கட்டளை முறை
(Rhythmic Command)

உணர்த்தும் கட்டளை முறை என்பது, ஒரு குறிப்பிட்ட செயலின் ஒவ்வொரு நிலையையும் விளக்கி, திருத்தி, நுட்பமாகச் செய்ய வைக்கும் சிறப்புடையது.

இதையும் மூன்று கூறாகக் கற்றுத்தரக் கூடும்.

அ) ஆசிரியர் பகுதி பகுதியாகப் பகுதியினை விளக்கிக் கூறும் முறை. இதை (Explanation Stage) பிளக்கும் நிலை என்பர்.

ஆ) விளக்கிக் கூறிய செயலின் நிலை, மாணவர்கள் மனதில் பதியவும், புரிந்து கொள்ளவும் கூடிய வகையில் நேரம் ஒதுக்கித் தரும் நிலை. (Pause Stage)

இ) குறிப்பிட்ட செயலைச் செய்து கற்கும் நிலை. (Execution Stage)

இரண்டாவது கட்டளை முறையானது. ஒவ்வொரு நிலையிலும், நிறுத்தாமல், தொடர்ந்து, தாளலயத்துடன் பயிற்சியைச் செய்வதாகும்.

12. முன்னேற்றம் தரும் பகுதி முறை
(Progressive Part method)

ஒரு செயலுக்குப் பல நிலைகள் உண்டு என்பதை நாம் அறிவோம். இந்த முறையில் கடைப்பிடிக்க வேண்டிய யுக்தி என்னவென்றால், ஒவ்வொரு நிலையையும். ஒவ்வொன்றாகவும், தொகுத்தும் கற்பிக்கும் நுட்பமாகும்.

உதாரணமாக : ஒரு பயிற்சியில் முதல் நிலையைக் கற்றுத் தருவது, அடுத்து 2வது நிலையைக் கற்பிக்கும் முன் முதல் நிலையையும் கற்றுத் தந்து, பின் தொடர்வது. பிறகு முதல் இரண்டு நிலையையும் கற்றுத் தந்துவிட்டு மூன்றாவது நிலையைக் கற்றுத் தருவது.

இப்படியாக, படிப்படியாய் நிலைகளைத் தொடர்ந்து கற்றுத் தந்து, செயலின் முழு நிலைக்கு முன்னேற்றிக் கொண்டு வரும் முறையே இதுவாகும்.

ஓடுகளப் பயிற்சிகளுக்கும், தாளலயப் பயிற்சிகளுக்கும் இந்த முறை, சிறந்த கற்பிக்கும் பாங்காக அமைகின்றது.

13. மாட்சிமையுள்ள காட்சி முறை

மாணவர்களுக்கு உற்சாக முறையில் கற்பிக்க உதவும் முறையாக இதைக் கொள்ளலாம்.

மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று, மாணவர்களுக்குக் காட்டி, விளக்கி, தேர்ச்சி பெற்றவர்களின் நுணுக்கத்திறன், (Tactics) நுண் ஆட்சி முறை, சிறந்த அணுகு முறைகள் (Techniques) போன்றவற்றை நேர்முகமாகக் காட்டிக் கூறுகிறபோது, மாணவர்களுக்கு உற்சாகம் பெருகுவதுடன், கற்கும் திறனும் கூடிப் பெருகிக் கொள்கிறது.

இத்தகைய வாய்ப்புக்கள் இல்லாதபோது, மேற்கூறிய காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைக் காட்டி, திரும்பத் திரும்பக் காணச் செய்கிறபோது, அறிவும் விரிவாக்கம் கொள்கிறது.

சியோல் ஒலிம்பிக் பந்தயத்தில், பெண்கள் 100, 200 மீட்டர் ஓட்டங்களில் வென்று உலக சாதனை புரிந்த புளோரன்ஸ் கிரிபத் ஜாய்னர், சிறந்த ஒட்ட வீரரான பென் ஜான்சன் ஒடிப் பழகிய திரைப்படத்தைப் பார்த்துப் பார்த்து தேர்ச்சி பெற்றார் என்ற வரலாறு, இந்த மாட்சிமை மிகு கண்காட்சி முறைக்கு சிறந்த சான்றாக அமைகிறது.

நம்மவர்களும் இந்த முறையைப் பின்பற்றிப் பெரும் பயனடையலாம்.