காற்றில் வந்த கவிதை/மாப்பிள்ளைக் குலவை
புதுமாப்பிள்ளையைப் பார்ப்பதிலே எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே? அவரைக் கேலி செய்வதிலே குழந்தைகளுக்கு ஒரு தனி இன்பம். ஊழியர்களுக்கு வேருெரு வகையிலே இன்பம் பிறக்கிறது. மாப்பிள்ளையிடமிருந்து நல்ல இனாம் எதிர்பார்க்கலாமல்லவா?
கிராமத்திலே பெரிய பண்ணைக்காரர் மகனுக்குத் திருமணம் நடைபெறுகின்றது. எல்லோருக்கும் ஒரே உற் சாகம். பண்ணேயிலே வேலை செய்யும் பள்ளிகளுக்கு ஒரு தனிப்பட்ட சந்தோஷம். கலியாண வீட்டிலே நல்ல விருந்து. அதற்கு மேலே மாப்பிள்ளையிடமிருந்து பணம் கிடைக்கப் போகிறது. ஆகையால் அவர்கள் சிரித்த முகத்தோடு வரிசையாக நிற்கிறார்கள்.
மாப்பிள்ளை குதிரை மேலே பவனி வருகிரு.ர். பள்ளிகள் குதிரையின் முன்னுல் நின்றுகொண்டு குலவைப் பாட்டுப் பாடுகிருர்கள். அது மாப்பிள்ளையை வாழ்த்துகின்ற பாடலுமாகும். முதல் பாட்டிலே பிள்ளையாரைக் குறித்துப் பாடவேண்டு மல்லவா? பிள்ளையார்தானே விக்கினங்களையெல்லாம் நீக்குபவர்? அவரைக் குறிப்பாக முன்னல் நிறுத்திப் பள்ளிகள் கலியாணப் பெண்ணுக்கு மாப்பிள்ளை கணையாழி கொண்டு வருவதைப் பற்றிப் பேசுகிருர்கள்.
குடுகுடு மாங்காயை மடியிலே கட்டிக்
குண்டுமணிப் பிள்ளையாரை முன்னல் நிறுத்தி
ஒடுகிற தண்ணிரில் நீந்தி வருவாரா?
உடம்பெல்லாம் சந்தனம் பூசி வருவாரா?
அங்கோர் ஊருக்குப் போயும் வருவாரா?
அடையாளக் கணையாழி வாங்கி வருவாரா?
-என்தோழி பெண்டுகளே எடுங்கடி குலவைகளே
பிறகு நகைச் சுவையோடு கூடிய ஒரு பாடல் வருகிறது. மாப்பிள்ளை ஒரு பெரிய யானையாம்; யாருடைய கட்டுக்கும் அவர் அடங்கமாட்டாராம். யானையை எவ்வளவு பெரிய மரத்தில் கட்டினலும் நிற்காமல் மரத்தைத் தள்ளிக் கொண்டுபோய் விடுமாம். அப்படிப்பட்ட யானையைப் போன்ற மாப்பிள்ளை அவருடைய பண்ணையிலே வேலை செய்யும் பள்ளிகள் ஏதாவது கூறினல் அதை மீறி நடக்க மாட்டாராம். பண்ணையில் வேலை செய்கிறவர்களிடத்தில் அவருக்கு அத்தனை மரியாதை இருக்கிறது என்று பள்ளிகள் தங்கள் குலவைப் பாட்டில் கூறுகிறார்கள்.
ஆனையென்ருல் ஆனை அறுபதடி ஆனே
ஆலமரத்தில் கட்டினல் நிற்காதாம் அந்த யானை
அரசமரத்தில் கட்டினல் நிற்காதாம் அந்த யானை
புங்கமரத்தில் கட்டினல் நிற்காதாம் அந்த யானை
புளிய மரத்தில் கட்டினல் நிற்காதாம் அந்த யானை
பள்ளி விரலைக் காட்டினல் நிற்குமாம் அந்தயானை
-என்தோழி பெண்டுகளே எடுங்கடி குலவைகளே
திருமண வைபவத்திலே மற்றும் ஒர் காட்சி. பல்லக்குகள் வருகின்றன. மேலே சிவிகைகள் நிழல் செய்கின்றன. நாட்டிய மாடுகிருர்கள். நாகசுர ஒலி இன்பமாக எழுகின்றது. கோலாகலத்தோடு சிரித்த முகங்காட்டி மாப்பிள்ளை தம் அத்தை மகளான புது மணப் பெண்ணுடனேவருகிருர். இந்தக் காட்சியைப் பள்ளிகள் மற்ருெரு பாட்டிலே வருணித்துக் குலவை பாடுகிறார்கள்:
பல்லக்காம் பல்லக்காம் பொன்பதைத்த பல்லக்காம்
ஆலத்தி ஒருபுறமாம் அங்கே பல சிவிகைகளாம்
நாட்டியங்கள் ஆடிவர நாகசுரம் ஊதிவர
தேவேந்திரப் பள்ளிகளும் தேன்போலப் பாடிவர
அத்தை மகளுடனே சிரித்து முகம் கொடுத்து
நம்ம ஊர்ப் பண்ணையார் சீமையாள வாரார்கள்
-என்தோழி பெண்டுகளே எடுங்கடி குலவைகளே
இவ்வளவு சிறப்பெல்லாம் கூறிக் குலவை பாடுகின்ற பெண்களுக்கு நல்ல பரிசுகள் கிடைக்காமலா போகும்?