உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/76

விக்கிமூலம் இலிருந்து


76அப்பா! மின்சார சக்தி வீட்டுக்குள் வருமிடத்தில் பியூஸ் (Fuse) என்று ஒன்று வைத்திருக்கிறார்கள், அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மின்சார சக்தி மெல்லிய செம்புக் கம்பி வழியாக வந்து மின்சார விளக்கிலுள்ள மெல்லிய கம்பி வழியாக ஓடுகிறது. அப்பொழுது விளக்கிலுள்ள கம்பி அதிகச் சூடாகி ஒளி விடுகிறது. நமக்கு வெளிச்சம் கிடைக்கிறது.

விளக்கிலுள்ள கம்பியை டங்ஸ்டன் என்னும் உலோகத்தால் செய்கிறார்கள். அந்த உலோகம் எளிதில் இளகுவதில்லை.அதனால் தான் அது அதிகச் சூடேறினாலும் இளகாமல் ஒளி தந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அதிகமான மின்சார சக்தி செம்புக் கம்பி வழியாகச் செல்லுமானால் அப்பொழுது நெருப்பு உண்டாகி விடும். அதைத் தடுக்கும் பொருட்டே "பியூஸ்” என்பதை வைத்திருக்கிறார்கள். அது எளிதில் இளகக் கூடிய கலப்பு உலோகத்தால் செய்யப்படுகிறது. அதிகமான மின்சாரம் வருமானால் அது இளகிவிடும். மின்சார சக்தி வீட்டுக்குள் போக முடியாமல் போகும். நெருப்பு அபாயம் உண்டாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/76&oldid=1538221" இலிருந்து மீள்விக்கப்பட்டது