தந்தையும் மகளும்/166
166அப்பா! பூனையின் கண்கள் பளபளவென்று மின்னுகிறதே, அதற்குக் காரணம் என்ன?
ஆம், அம்மா! அதோடு பூனையின் கண்கள் சாதாரண மின்சார வெளிச்சத்தில் ஒரு நிறமாகவும் நீலமான மெர்க்குரி விளக்கு வெளிச்சத்தில் ஒரு நிறமாகவும் மின்னுவதைப் பார்த்திருக்கிறாயா?
அம்மா! பூனையின் கண்ணின் உட்புறத்தில் ரணுக்கள் படலம் என்று ஒன்று ‘டேப்பட்டம். என்று ஆங்கி வெளியிலுள்ள ஒளி பூனையின் க லத்தில் பட்டுத் திரும்பி வருவதால்தான் பூனையின் கண்கள் பளபளவென்று மின்னுகின்றன.
அந்தப் படலம் சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஆகிய பல நிறங்களுடையதாக இருப்பதால் வேறுவேறு விதமான ஒளி அதில் பட்டால் அது வேறுவேறு நிறத்துடன் ஜ்வலிக்கிறது; பார்க்க அழகாக இருக்கிறது.
அம்மா! இம்மாதிரி ஒளியானது அந்தப் படலத்தில் பட்டுத் திரும்புவதும் பூனைக்கு மங்கலான வெளிச்சத்தில் கூட நன்றாகக் கண் தெரியும்படிச் செய்கிறது.