உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/179

விக்கிமூலம் இலிருந்து


179அப்பா! சிங்கம் மட்டும் பிணத்தைத் தின்னாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அப்படித்தான் மக்கள் எண்ணுகிறார்கள், அதனாலேயே சிம்மத்தைப் புலிபோல் குரூரமுடைய மிருகமன்று என்றும் பெருந்தன்மை உடைய மிருகமென்றும் கூறுகிறார்கள். ஆனால் அப்படிக் கூறுவது தவறு. சிம்மம் பசி வந்து விட்டாலும் சரி, பிரியம் உண்டாய் விட்டாலும் சரி, பிணத்தை மட்டுமன்று, அழுகிப்போன மாமிசத்தைக் கூடத் தின்னும் என்று சிம்மம் போன்ற காட்டு மிருகங்களின் பழக்க வழக்கங்தளைப் பற்றி ஆராய்ந்த பண்டிதர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்து எதையும் ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதை அறிந்து கொள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/179&oldid=1538634" இலிருந்து மீள்விக்கப்பட்டது