பிரதாப முதலியார் சரித்திரம்/என்னைக் கவர்ந்த புத்தகம்
Appearance
என்னைக் கவர்ந்த புத்தகம்
-அறிஞர் அண்ணா-
சுவை கருதி மட்டும் படிக்கும் பருவத்திலே நம்பமுடியாத நிகழ்ச்சிகள், சாதிக்க முடியாத செயல்கள் கொண்ட கதைகள் உள்ளத்தைக் கவருகின்றன. இந்த வரிசையில் மனதிலே எளிதாகவும் பதிந்துவிடும் கதைப்போக்கு கொண்டது விக்கிரமாதித்யன் கதை போன்றவைகள். . அந்தப் பருவத்தைக் கடந்த பிறகு பயன் தரும் ஏடுகளையே மனம் நாடுகிறது. பொழுது போக்குடன் பயனும் தந்து சுவையும் தந்த புத்தகங்களிலே பிரதாப முதலியார் சரித்திரத்தைக் குறிப்பிடுவேன். என் உள்ளத்தைக் கவர்ந்த ஏடுகளிலே அது ஒன்று.
தனி மனிதன் மட்டுமல்ல, உலகமே இந்த முறையிலேதான் அந்தந்தக் காலத்திற்கேற்ற நூல்களை ஏற்றுக் கொள்ளுகிறது. காலத்திற்கேற்ற முறையில் நூல்கள் மாறினாலும் இறந்த கால ஏடுகள் அனைத்தும் இறந்து விடுவதில்லை.
- [வானொலியில் அறிஞர் அண்ணா அவர்கள் “என்னைக் கவர்ந்த புத்தகங்கள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு]