உள்ளடக்கத்துக்குச் செல்

திருமுருகாற்றுப்படை - பொழிப்புரை/திருவாவினன்குடி

விக்கிமூலம் இலிருந்து

3. திருவாவினன்குடி

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் 130
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை 135
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனிஇல் காட்சி முனிவர் முற்புகப்
புகைமுகந்து அன்ன மாசில் தூஉடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் 140

நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்நரம்பு உளர
நோய்இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்

பொன்உரை கடுக்கும் திதலையர் இன்நகைப்

145

பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்

மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று
அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுக்திறற்

பாம்புபடப்புடைக்கும்பல்வரிக் கொடுஞ்சிறைப்

150

புள் அணி நீள்கொடிச் செல்வனும் வெள்ஏறு

வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்

155

வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து

ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்

நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய

160

உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்

புலர்புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி

நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப்

165

பகலில் தோன்றும் இகலில் காட்சி

நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு

வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்

170

தீஎழுந் தன்ன திறவினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கின்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்

தாவில் கொள்கை மடங்தையொடு சின்னாள்

175

ஆவி னன்குடி அசைதலும் உரியன், அதாஅன்று.