உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இருபத்தொன்பதாயிரத்து தொளாயிரம் வோட்டு களில் இரண்டாவது இடம் பெற்றுத் தோற்றிருக் கிறது திராவிட முன்னேற்றக் கழகம். சென்னையிலே தோழ ர் என். சீவரத்தினம் நானூறு வோட்டுகளிலே தோற்றார் பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் எண்ணூறு வோட்டுகளில்! - விழுப்புரம் தோழர். சண்முகம் தோல்வி ஏழு நூறு வோட்டுகளில்! ஆம்பூரிலே நமது தோழர் சம்பங்கி நானூறு வோட்டுகளே குறைந்த காரணத்தால் தோற்றிருக் கிறார். இதற்கெல்லாம் என்ன காரணம் ? நம்மிடம் பணமில்லை ; கடைசி நேரத்தில் குறுக்கிடும் அத்யாவ சியமான செலவு கூடச் செய்ய முடியாது போய்விடு கிறது. ஆனாலும் ஒன்று ; குறிப்பிட்ட ஓரிடத்திற்குச் செல்ல முப்பது படிகள் என்றால், நாம் இருபத் தொன்பது படிகள் வரை சென்று விட்டோம் ஒரு படி தான் பாக்கி! அதையும் தாண்டிவிட நமக்கு உதவும், இந்தத் தேர்தலில் நாம் பெற்றிருக்கும் அனுபவம். - நாம் இந்தத் தேர்தலில் பெற்ற வோட்டுகள் சாதாரணமானவையல்ல. நமது வோட்டுகள் துல் லிய மானவை - தூய்மையானவை WOO திராவிட முன் னேற்றக் கழகத்திற்குப் போடப்பட்டவை ! ஆனால், காங்கிரசு பெற்ற வோட்டுகளிலோ, கம்யூனிஸ்டுகளின் வோட்டுகள் கலந்திருக்கின்றன ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/32&oldid=1703219" இலிருந்து மீள்விக்கப்பட்டது