பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20

விஷமோ, கோரக் கருவிகளோ அவள் உடலைப் பாதிக்க வில்லை. அளவுக்கு அதிகமான ரத்தம் தேவகியின் உடலிலிருந்து வெளியேறியுள்ளது. பலாத்காரமாகக் காயப்படுத்தி ரத்தம் சித்தியதாகச் சொல்வதற்கு அவள் உடலில் சாட்சியம் இல்லவே யில்லை. அவள் உடல் வெளுத்திருந்தது. ரத்தம் எப்படி வெளியேற்றப் பட்டது என்று கூற முடியவில்லை என்று அறிவித்தார்கள் பிரேதப் பரிசோதனை செய்தவர்கள். ‘நாங்கள் என்ன சொன்னோம்! ரத்தக் காட்டேறி தான் இப்படிச் செய்திருக்கும். அதற்குத்தான் இந்தச் சக்தி உண்டு என்று கொக்கரித்தது ஒரு கும்பல். அந்தப் பேச்சை யாரும் மறுக்கத் துணியவில்லை அவ்வூரிலே. நாணல் காட்டில் பதுக்கப்பட்டு ஆற்று வெள்ளத்தினால் அம்பலமான பிரேதம்: சவம் போல் எறியப்பட்டிருந்த குமாரி பவானியின் நிலை; தேவகியம்மாவின் கொலை - இம் மூன்றுக்கும் மூலவர் ஒரே நபராக, அல்லது ஒரே கோஷ்டியிராக, இருக்க வேண்டும் என்று யூகிப்பதில் அங்குள்ளவர்களுக்குச் சிரமமோ வருத்தமோ தோன்றவில்லை. அத்தகையக் கொலை சக்தி - அது தனி நபராகயிருந்தாலும், கயமைக் கும்பலாக இருந்தாலும் - எது, அதன் பாசறைனது என்ற கேள்விகள் தலைதுாக்காமலா போகும் ? இருளடைந்து கிடந்து திடீரென்று புதுப்பிக்கப்பட்ட பங்களா மீது பலரது சந்தேக நிழல் கவியத் தொடங்கியது. அந்த பங்களாவில் உயிர்ப்பு உலவத் தொடங்கியதற்குப் பிறகுதான் ரெண்டுங்கெட்டான்புரத்திலே இரண்டு உயிர்கள் ஒடுங்கி விட்டன; குமாரி பவானியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்று துரித முடிச்சுகள் போட்டு மகிழ்ந்தார்கள் அவர்கள். ‘ஊசு ஆசு’ என்று பக்கம் பார்த்துக் காதோடு காதாகப் பேசிக் கலக்கமடைந்தார்களே தவிர, தங்கள் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்ல அவர்கள் துணியவில்லே.