பக்கம்:அன்பு மாலை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

அன்பு மாலை


காலம் எண்ணிக் கவலையிலே
கவிந்து வாழும் மக்களெல்லாம்
காலை வணங்கி மனச்சாந்தி
கவினப் பெறுகின் றார்களால்;
சீலம் மிகவும் உடையபிரான்;
திருப்பேர் ராம சுரத்குமார்;
ஏல வந்தே அவனடிக்கீழ்
இறைஞ்சி வாழ்மின்;துன்பறுமே.

163


ஐந்து பொறியால் மனம்அலைந்தே
அகன்ற நிலத்தில் அவாவிரியச்
சிந்தும் வாழ்நாள் போகாமே
சிலநா ளேனும் அருள்எண்ணம்
வந்து செறிய ராமசுரத்
குமார்தன் மலர்த்தாள் வணங்கி நின்றால்
பந்தம் அறுமே; பாசவினை
பாறும்; ஈது திண்ணமரோ.

164


காயும் கனியும் உண்டுவனம்
கவின இருந்தே யோகுபயின்
றேயும் யோகர் பலரிருந்தார்
என்றால் அவர்போல் நாமிருப்பது
ஆயும் அளவோ? ஆதலினால்
அடியேன் சொல்வேன்;அருணையினில்
மேய ராம சுரத்குமார்
விளங்கு கின்றான்;சாருமினே.

165


புண்ணாய் நெஞ்சம் ஏமாந்து
போகும் மனிதர் பலருண்டே;
அண்ணாந் திருப்பார்; அவாஅறுக்கா
தனைத்தும் வேண்டும் எனச்சொல்வார்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/69&oldid=1303517" இலிருந்து மீள்விக்கப்பட்டது