உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞன் படைத்தவை காலத்தை மீறின.

ஆகவே, கவிஞனே வென்றான்!

பாடலைப் படியுங்கள்:

“கடவுள் கவிஞனை இக்
காசினியில் படைத்தான்;
கவிஞன் கடவுளைத் தன்
கற்பனையிலே படைத்தான்.
கடவுள் உயர்ந்தவனாய்க்
ககனத்தே வீற்றிருந்தான்;
கவிஞன் அவனிடம் தன்
கைவரிசை காட்டவந்தான்.
கடவுள் கவிஞனுரம்
காணமிகச் சீறிட்டான்.
கவிஞனதைக் கருதாமல்
கடவுள் நிலைக் கேறிவிட்டான்.
கடவுள் வருங்கவிஞன்
காலைத் தடுத்திட்டான்;
கவிஞன் அத்தடைகளைத்தங்
கையால் எடுத்திட்டான்.
கடவுள் கவிக்கின்னல்
கணக்கின்றி மூட்டிவிட்டான்.
கவிஞன் அவற்றை வெறுங்
கனவாக்கி ஏட்டிலிட்டான்.
கவுடள் கவிவாழ்வைக்
கவியாக ஆட்டிவிட்டான்;

30