பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தலையிலிருந்து நீக்கியதும், 'க்ளோஸ் கட் க்ராப்' பெற்றிருந்த மண்டையில் வெள்ளே மயிர் காட்சி தந்தது. அவரிடம் அசாதாரணமாக ஏதாவது இருந்ததா என்றால், அவரது கோட்டில் செருகியிருந்த சிவப்புப் பூவைத் தான் குறிப்பிட வேண்டும்.

செக்கச் சிவந்த புஷ்பம் அது. அவர்மீது பார்வை எறிகிறவர்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும் சிவப்புப் பூ. வெள்ளைத் துணி மீது சிதறிக் கிடக்கும் ரத்தம் போல - அல்லது, நன்கு வெள்ளையடித்த சுவரிலே அலட்சியமாகத் துப்பிய வெற்றலை எச்சில் மாதிரி - கண்களை உறுத்தும் தன்மை இருந்தது அதில், திடீரென்று பிரேக் போட்டால் சில பிளஷர் கார்களின் பின்புறத்திலே செக்கச் சிவந்த 'டேஞ்சர் ளைட்டு'கள் தனி வனப்புடன் பளிச்சிடுகின்றனவே, அத் தகைய ஒளிக் கவர்ச்சி மிளிர்ந்தது. அந்தப் பூவிலே. அடுக் கடுக்காய்த் தனி எழிலுடன் திகழ்ந்த அந்தப் பூவை ஒரு தரம் பார்த்தால் வைத்த கண் வாங்காது பார்த்து நிற்கும் ஆசை எழும். கூர்ந்த கவனித்தாலோ கண்களை உறுத்தும். அதை பார்க்க கூடாது என்று வெறுத்துத் திரும்பினால், மீண்டும் மீண்டும் கண்கள் அதன் மீதே தாவிச் சுழலும். ஏதோ வசிய சக்தியிருந்தது அம்மலரிலே, ரத்தம் சிக்கிப் பெருகுவது வெறுப்பு, பயம், அருவருப்பு, ஆச்சர்யம், வேடிக்கை பார்க்கும் எண்ணம் போன்ற விதவித உணர்ச்சிகளைக் கிளறி விடுவது போலவே, அந்தச் சிவப்புப் பூவும் மனித உள்ளங்களைப் பாடாய்ப் படுத்தியது. அதை ஒரு தரம் கண்டவர்கள் என்றுமே மறக்க முடியாது. ஆகையினால் அதை மிடுக்காகச் சூடியிருந்த அந்த மனிதரையும் அவர்கள் மறக்க முடியாது.

"இவர் நல்ல மனிதராகத்தான் தோன்றுகிறார். இல்லை யெனில், பொரியரிசி மாதிரிப் பத்தாயிரம் ரூபாயை அள்ளிக் கொடுக்க மனசு வருமா? என்றுதான் எல்லோரும் எண்ணினார்கள். அவர் அந்த ஊருக்கு வந்த புதிதில்