பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
திருகிப் பிழிகிற மாதிரியிலே. பேங் ?...‘இந்தப் பக்கத்திலே ரத்தக் காட்டேறி ஒண்னு அயிைறதாகக் கேள்வி. அது செய்த வேலையாகத்தானிருக்கணும். பிரேதத்தைக் கவனித்தீர்களா?  ரத்தம் செத்துப் போயி. ரத்தமேயில்லாமங் செத்துப்போன மாதிரியில்லா யிருந்தது? என்ன நான் சொல்றது?’ ...:ரத்தக் கொதிப்பெடுத்த மனிதப் பிசாசுகள்தான் அவளைப் பயன்படுத்திச் சாகடித்துச் சக்கையை வெள்ளத்திலே வீசியெறிந்திருக்கும்!"...நகை நிறையப் போட்டிருந்திருப்பா. கொள்ளைக்காரப் பயல்கள்தான் இந்தப் பக்கத்திலே நாலணா, எட்டணாவுக்குக் கூடக் கொலை பண்றாங்களே. அவங்களுக்குக் காசு தான் பெருசு மனுச உசுரு அல்பமாத்தான் படுது’. இப்படிப்

பேசுங்கள் பலரசம் தந்த வட்டாரத்தில்ரே ஒலித்தன. பிரேதப் பரிசோதனை செய்த நிபுனர்களால் எதையும் தீட்டமாகச் செய்ய முடியவில்லை. அந்தப் பெண் தானகவே செத்திருக்களாம்: கொலை செய்யப்பட்டிருப்பதும் சாத்தியமே: எப்படியோ ரத்தமிழந்து அதனால் மரணமடைந்திருக்க வுேண்டும்: இறந்து நாளைந்து தினங்களிருக்கும்:ெதண்ணிலே மூன்று தினங்கள் கிடந்திருப்பதாகத் தோன்றுகிறது. இப்படி முடிவு செய்தார்கள் அந்த அறிவாளிகள். இந்தத் தீர்ப்பு ‘ரத்தக் காட்டேறி’ க் கட்சியினருக்கு ஒரு சாட்சியாக வந்து சேர்ந்தது. ‘கேட்டீர்களா, நாங்கள் என்ன சொன்னோம் !’ என்று பெருமையடித்துக் கொண்டார்கள் அவர்கள். காட்டேறிதான இப்படி சத்தத்தை ஒரே உறிஞ்சாக உறிஞ்சித் தீர்த்துவிடும்’ என்றார்கள். இந்தச் சம்பவம் பற்றிய பரபரப்பும் ஒடுங்கிவிடத் தான் செய்தது. புதிர் விடுபடவில்லை. எதனாலோ மரணமடைந்து விட்ட ஏதோ ஒரு அநாதைப் பிரேதம் அது என்ற அபிப்பிராயம் தான் நிலைத்து நின்றது.