தங்கராசு வடக்கேயிருந்து வந்திருக்கிறான் என்று அறிந்ததும் அநேகர் அவனைப் பார்த்துப்போவதற்காக வந்தார்கள். அவனும் சொந்தக்காரர்கள், பெரியவர்களை அவரவர் வீட்டில் போய் பார்த்துவிட்டு வந்தான்.
யார் வந்து பேசினாலும், அல்லது எவரோடு அவன் பேசினாலும் பேச்சோடு, பேச்சாக முத்துமாலை விஷயமும் தலை தூக்கிவிடும். அவனைப்பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொன்றைச் சொன்னார்கள். எப்படியிருந்தாலும், முத்துமாலை அந்த ஊராரின் பேச்சுக்கு முக்கியமான ஒரு பொருளாக வளர்ந்திருந்ததை தங்கராசு புரிந்து கொண்டான்.
—அவன் நல்லவன்தான். குடிதான் அவனைக் கெடுத்துப் போட்டுது.
—குடிக்காத நேரங்களிலே முத்துமாலை ரொம்ப ஒழுங்காக நடந்து கொள்வான்.
—குடித்தாலும்தான் என்ன! தப்புத் தண்டாவுக்கு போகமாட்டான்.
—குடித்துவிட்டு ராத்திரி நேரங்களிலே கூச்சல் போட்டுக்கிட்டுத் திரிகிறான் என்கிறதைத் தவிர, அவனாலே மற்றபடி எந்தவிதமான தொந்தரவும் கிடையாது.
ஆரம்பத்திலே கொஞ்சம் ஒவராப் போனான். அரிவாளை வச்சுக்கிட்டு எல்லாரையும் மிரட்டினான். தன்னைப் பத்தி பயங்கரமான ஒரு அபிப்பிராயம் உண்டாக்குதற்-