பக்கம்:அன்பு மாலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அன்பு மாலை


மெளனமும் நேர் விரோதமாகத் தோன்றும். ஆனால் நிறைந்த பேச்சினாலே மெளனம் வந்து சித்திக்கும். எப்படி? மிகமிக அதிகமாக உழைத்தவன் உடம்பெல்லாம் வலியடைந்து எந்த உழைப்பும் செயலும் இல்லாமல் படுத்துறங்க முடிகிறதோ, அதுபோல, அதிகமாக இறைவனுடைய பேச்சைப் பேசுகிறவன் கடைசியிலே மெளன சாம்ராஜ்யத்திலே உலவுவான். அதனால்தான் இந்த நாட்டிலே சாது சங்கத்திலே சேர வேண்டும், ஆண்டவனுடைய புகழைப் பேச வேண்டும், ஆண்டவனுடைய கீர்த்தனத்தைக் கேட்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். தனியாகப் போய்ப் பிராணாயாமம் பண்ணி யோகம் செய்வது என்பது எல்லோருக்கும் உரிய தன்று. நம்முடைய கரசரணாதிகளை மடைமாற்றி இறைவனுடைய சம்பந்தமாக வைக்க வேண்டுமானால் அதற்குச் சாது சங்கம் முக்கியம்.

சாதுக்களோடு கூடும் பொழுது அவர்கள் போகின்ற நெறியே நமக்குப் பிரயோஜனமாக இருக்கும். ஆகையினால் விலங்கினங்களைப் போல் இந்த உலகத்தில் திரியாமல் அறிவுடைய மனிதனாக, சாது சங் கத்திலே சேர்ந்து, அவர்களுடைய பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் இந்த அவயவங்களெல்லாம் தீய நெறியிலே செல்லாமல் நல்ல நெறியிலே செல்லும்.

கொண்டி மாடானது ஒரு வட்டமான முறையிலே ஓடிப் பிறகு முளையோடு ஒன்றுபடுவது போல, நம்முடைய உள்ளமானது ஓர் ஒழுங்கு முறையிலே தியானம் செய்து, பிறகு நிச்சலனமான நிலையை அடையும். இதற்குக் குருநாதரும் சாது சங்கமும் வழி காட்டுவார்கள். (8-1-79)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/16&oldid=1460012" இலிருந்து மீள்விக்கப்பட்டது