பக்கம்:அன்பு மாலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாவை

15

ஐயமின்றித் தெளிவதற்கே அவையிருந்தா லுந்தான்
அறிவதனை அறிவார்கள் மிகஅரியர் அன்றோ?
நெய்யிலுறு சுவை உண்டால் தான்தெரியும்; அதுபோல்
நீர்நேரே ராமசுரத் குமார்தன்னை அடைமின். 12

பிறங்கும் - விளங்கும்.

அடைகின்ற பொருட்கெல்லாம் குற்றங்கள் உண்டாம்:
அடையாமல் எந்நாளும் நம்பாலே இருந்து
மிடைகின்ற பொருளாகும் பரப்பிரமம் தனக்கு
வேதனையொன் றில்லை,ஒரு குறையுமில்லை என்பார்;
சடைநின்ற பெருமானும் திருமாலும் தானாய்த்
தாங்குமருள் வடிவெடுத்து ராமசுரத் குமாராய்த்
தடையில் பெருந் தயையுடனே நிற்கின்ற சாமி
தாளடைந்தார் ஐயமெல்லாம் போக்கிடுவார் கண்டீர்.13

மிடைகின்ற - நெருங்கியுள்ள.

போக்கில்லான் வரவில்லான் புணர்ப்பொன்றும் இல்லான்
புதுமையிலான் பழமையிலான் காலமெலாம் இல்லான்
தாக்கில்லான், தனியில்லான், நிற்பதுவும் இல்லான்:
சார்கின்ற பொருட்கெல்லாம் சார்வாகி நிற்பான்;
நேர்க்கெல்லாம் தயையாக நுனிக்கின்ற பார்வை
நுட்பத்தில் கண்டிடலாம் அவனுடைய சீர்த்தி;
தேக்குமருள் வடிவமதாம் ராமசுரத் குமார்தன்
திருவடியே சரணமென்றார் சாந்திநிலை அடைவார்.14

புணர்ப்பு - சேர்தல். தாக்கு - மோதுதல். நுனிக்கின்ற- கூர்ந்து நோக்குகின்ற.

வாரமையும் பெருந்தனத்து மங்கையர்கள் பாலே
மயலாகித் துயருழந்து வாழ்நாளை வீணே
சோர்வுபெற வேஇழந்து துக்கிக்கும் மாந்தர்
சுகக்கடலை அடையாமல் நிற்கின்றார் என்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/21&oldid=1303207" இலிருந்து மீள்விக்கப்பட்டது