அறிவுக் கனிகள்/சுவர்க்கம்
180. அன்பும் அறமும் எவ்வளவு, சுவர்க்கமும் அவ்வளவே.
-பார்க்கர்
181.சுவர்க்கத்தின் ஆசை ஒருவனைச் சுவர்க்க மயமாய் ஆக்கிவிடும்.
ஷேக்ஸ்பியர்
182.அறம் விரும்பு; அதுவே வீடு.
மில்டன்
183.மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம்.
பேக்கன்
184.நான் சுவர்க்கத்தில் இருக்கவேண்டுமானால், முதலில் சுவர்க்கம் என்னிடம் காணப்பட வேண்டும்.
ஸ்டான்போர்டு
185.ஆன்மாவுக்கு விமோசனம் சுவர்க்கத்திலேயே என்று நடப்பவன் விமோசனம் பெறுவதில்லை.
ஆனால், அன்பு நெறியில் நிற்பவனை ஆண்டவன் தானே தன் சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்வான்.
வான் டைக்
186.சுவர்க்கத்துக்கு வெகு தூரத்தில் உள்ளது பூமி. பூமிக்கு வெகு சமீபத்தில் உள்ளது சுவர்க்கம்.
ஹேர்
187.வாழ்வில் கற்க வேண்டிய கடின பாடங்களில் ஒன்றுண்டு. அதைப் பெரும்பாலோர் கற்பதில்லை. இங்கேயே நம்மைக் சூழ்ந்தே சுவர்க்கம் உளது என்பதே அந்தப் பாடம்.
ஜான் பரோஸ்
188. அறநெறி பற்றிப் பேசுவதன்று, அறநெறியில் நடப்பதுவே கவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும்.
எம். ஹென்றி
189.உயிரோடு இருக்கும்பொழுது தன் இதயத்தை சுவர்க்கத்துக்கு அனுப்பாதவன், உயிர் போனபின் சுவர்க்கத்துக்குப் போக முடியாது.
பிஷப் வில்ஸன்
190.எப்பொழுதும் நியாயம் வழங்கும் வள்ளல்கள், எப்பொழுதும் வண்மை உடைய நீதிமான்கள், இவர்கள் முன்கூட்டி அறிவியாமலே கடவுள் சன்னிதானத்துக்குப் போகலாம்.
பழமொழி
191.சுவர்க்கத்தை நன்கு போற்ற வேண்டுமானால் பதினைந்து நிமிஷமாவது நரக அனுபவம் தேவை.
கார்ல்டன்