அறிவுக் கனிகள்/நரகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

9. நரகம்


192. நரகத்திற்குச் செல்ல மனிதர் எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கின்றனர்! - அதில் நேர்பாதி போதுமே சுவர்க்கத்திற்குச் செல்ல - அதை நல்வழியில் எடுத்துக் கொள்ளும் துணிவுமட்டுமே தேவை.

பென் ஜான்ஸன்

193.நரகம் என்பது வேறெங்குமில்லை. நன்றாய் ஆராய்ந்தால், அது பாவமே யாகும். கடவுளினின்று பிரிந்திருப்பதே நரகம்.

பாஸ்ட்

194.நரகம் என்பது யாது? காலங் கடந்து கண்ட உண்மை; பருவம் கடந்து செய்த கடமை.

எட்வார்ட்ஸ்

195. நரகத்திற்குள்ள வழி எளிது, கண்களை மூடிக்கொண்டே போகலாம்.

பியன்

196.நான் நரகம் உண்டென்று நம்ப மட்டும் செய்யவில்லை. நரகம் உண்டென்று அறியவும் செய்பவன். அது மட்டுமா? நரகத்துக்கு அஞ்சி அறநெறி நிற்பவர் யாவரும் நரகத்தில் கால் வைத்துவிட்டவரே என்பதையும் அறிவேன்.

ரஸ்கின்

197.சாஸ்திரிகளும், சாவோரும் நரகத்தைப்பற்றிப் பேசட்டும். ஆனால் நரக வேதனைகள் எல்லாம் என் இதயத்திலேயே உள்ளவை.

ஷேக்ஸ்பியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/நரகம்&oldid=998429" இருந்து மீள்விக்கப்பட்டது