அறிவுக் கனிகள்/தனிமை
Jump to navigation
Jump to search
20. தனிமை
403.உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருபொழுதும் தன்னித்தவ ராகார்.
ஸ்ர்பிலிப் ஸிட்னி
404.கொள்கை உறுதியாயிருப்பின் தனிமையாயிருப்பது தனிமையாகாது.
அனர்பாஷ்
405.தன்னந் தனியாய் நிற்பவனைவிட அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது. இப்ஸன்
406.உயர்ந்த எண்ணங்களின் தோழமை உடையோர் ஒருநாளும் தனிமை காண்பதிலர்.
பிலிப்
407.தனிமையாயிருக்கச் சக்தி இல்லாததினாலேயே சகல துன்பங்களும் விளைகின்றன.
லா புரூயர்
408.தனிமையாய் வாழ ஏன் நாம் அஞ்ச வேண்டும்? நாம் தன்னந் தனியாய் இறக்கத்தானே சர்வேச்வரனுடைய திருவுள்ளம்?
கெபிள்
409.தர்ம நெறி தவறியவரே தனியாயிருப்பவர்.
டைடெரெட்
410.எந்தக் காலத்திலும் அறிஞர்கள் ஏழைகளினும் அதிகமான எளிய வாழ்க்கையே வாழ்ந்துளர்.
தோரோ
411.உலகத்தில் வெகு சிலரே தனியாக வாழத் தகுதியுடையவர். அவர்களுக்கு உலகத்தின் மாயையை அறியப் போதுமான லெளகிக ஞானமும், சகல மாயையையும் வெறுத்துத் தள்ளப்போதுமான அறவொழுக்கமும் இருக்கவேண்டும்.
கெளலி