அறிவுக் கனிகள்/நூல் நிலையம்
Appearance
953. நல்ல நண்பர்க்கு அடுத்த படியில் ஸ்தானம் வகிப்பவை நல்ல நூல்களே.
கோல்ட்டன்
954.நூல்கள் இல்லாத மாளிகைகளில் வசிக்கும் தரித்திரமான தனவந்தர்க்கு இரங்குவோமாக.
பீச்சர்
955.நூல் நிலையம் என்பது மனித வாழ்வில் ஒரு ஆடம்பரமன்று. அவசியமே யாகும்.
பீச்சர்
956.நூல் நிலையம் பெரியோர் ஆன்மாக்கள் வாழும் புண்ணியஸ்தலம். அங்கே எப்பொழுதும் அறிவு மணம் கமழ்ந்து கொண்டிருக்கும்.
லாம்
957.என் நூல் நிலையம் எனக்கு ராஜ்யத்திலும் பெரியதாகும்.
ஷேக்ஸ்பியர்
958.நூல் நிலையமே இக்காலத்தில் உண்மையான சர்வகலாசாலை.
கார்லைல்