அறிவுக் கனிகள்/மூட நம்பிக்கை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

17. மூட நம்பிக்கை

381.மூட நம்பிக்கை மனித அமைப்பிலேயே ஓர் அம்சம். அதை ஓட்டிவிட்டோம் என்று மனோராஜ்யம் செய்யும்பொழுது அது நம் மனத்தில் ஒரு மூலையில் பதுங்கியிருக்கும். தனக்கு அபாயம் வராது என்ற நிலைமையில் திடீரென்று வெளியேறும்.

கதே
382.மூட நம்பிக்கை பயந்து பதுங்கும்; அதனிடம் அதர்ம நினைவே அதிகம்; கடவுளிடம் நம்பிக்கை கிடையாது; துர்த் தேவதைகளை அஞ்சி நடுங்கும்.
நியூமன்