அறிவுக் கனிகள்/வஞ்சகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

25.வஞ்சகம்

149.மனிதர் பிறப்பது மெய்யராக, ஆனால் இறப்பதோ வஞ்சகராகவே.

வாவனார்கூஸ்

150.அற உடை அணிந்த மறத்தைப்போல அபாயகரமான்து கிடையாது.

பப்ளியஸ் ஸைரஸ்

161.நயனம் ஒன்று சொல்ல நாவொன்று சொல்லின், விஷயம் அறிந்தவன் நயன மொழிகளையே நம்புவான்.

எமர்ஸன்

162.சூதிற்கும் அறிவிற்கு முள்ள வேறுபாடு குரங்கிற்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடு போலாகும்.

பென்
463.வஞ்சக நடை என்பது மறம் அறத்திற்குச் செய்யும் மரியாதையே யாகும்.
ரோஷிவக்கல்டு

464.நம்மிட முள்ளதாக நாம் பாசாங்கு செய்யும் குணங்களைப் போல், நம்மிடம் உண்மையாகவேயுள்ள குணங்கள் ஒரு பொழுதும் நம்மை நகைப்பிற் கிடமாக்குவதில்லை.

ரோஷிவக்கல்டு

465.உலகில் யாரும் அறியாதபடி உலவும் தீமை வஞ்சக நடை ஒன்றே. அதை ஆண்டவன் மட்டுமே அறிவான்.

மில்ட்ன்

466.வேஷம் போட்டு வெகு காலத்துக்கு ஏமாற்ற முடியாது. உண்மை இல்லாத இடத்தில் இயற்கை தலை காட்ட முயன்று கொண்டிருக்கும். என்றேனும் ஒருநாள் வெளிப்படுத்தியேவிடும்.

பிஷப் ஹால்

467. எல்லோரிலும் யாரை எளிதாக ஏமாற்ற முடியும்? தன்னைத்தான்.

புல்வெல் லிட்டன்

468.உயர்ந்தோர் தோஷங்களாலேயே உருப்பெற்றவர் என்பர்.

ஷேக்ஸ்பியர்


469. ஏமாற்றிப் பழக ஆரம்பிக்கும்பொழுது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய பொய்களைச் சொல்லத் தெரியாமல் திண்டாடுகிறோம்!

ஸ்காட்

470.தீயொழுக்கம் நல்லொழுக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு நாம் அறியாமலே நம்மிடம் குடி புகுந்துவிடும்.

ஸெனீக்கா

471.என்ன அழகான பழம்—இதனுள்ளே அழுகல்—பொய் எவ்வளவு அழகாய் வேஷம் போட்டுக் கொள்கிறது

ஷேக்ஸ்பியர்

472.வஞ்சக நடையுள்ளவன் இயற்கையான அயோக்கியத் தனம், செயற்கையான ஏமாற்றுக்குணம் ஆகிய இரண்டு சரக்குகளைக் கொண்டு செய்து தங்க நிறம் கொடுத்த மாத்திரை யாவான்.

ஓவர்பரி