உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடரங்கு

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




ஆடரங்கு

— சிறுகதைத் தொகுதி —


க. நா. சுப்ரமண்யம்

கலைமகள் காரியாலயம்

சென்னை - 4

உரிமை பதிவு][விலை ரூ.1-8-0


முதற்பதிப்பு, மே, 1955





ஞானோதயா பிரஸ், 11, ஆண்டர்ஸன் தெரு, சென்னை-1.

முகவுரை


இந்தக் கதைகள்

இவை பல்வேறு சமயங்களில் பல பத்திரிகைகளில் வெளியிடுவதற்காக எழுதப்பட்ட கதைகள். ஆகவே இந்தத் தொகுதி, தற்காலத் தமிழ் இலக்கியத்திலே ஒரு மைல்கல் என்று சொல்ல விரும்பவில்லை நான். இதில் இரண்டொரு கதைகளாவது என் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் பிடிக்கும் என்கிற நம்பிக்கையிலேதான் இவற்றைத் தொகுத்து இப்போது வெளியிடுகிறேன். அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிட்ட இந்தக் கதைகளை ஆதரித்த பத்திரிகை ஆசிாியர்களுக்கும், அதிபர்களுக்கும், தொகுதியாக இவற்றை வெளியிடுகிற 'கலைமகள்' ஆசிரியருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

கதைக்கு விஷயம் என்ற வாழ்க்கையில் கண்ணில் படுவதையெல்லாம், காதால் கேட்பதையெல்லாந்தான் நான் எடுத்துக் கையாளுவது வழக்கம். அப்படிக் கையாளுகிற காரணத்தால் சில சமயம் நெருங்கிய நண்பர்களுக்குங்கூட என்னிடம் ஆயாசம் ஏற்பட்டு விடுகிறது என்பதை நான் அறிவேன். இருந்தும் இந்தக் கதாபாத்திரங்கள் ஆயாசப்பட வேண்டிய அவசியமில்லை—ஏனென்றல் சாதாரணமாகக் கதைகளில் வரும் பாத்திரங்களையும் சம்பவங்களையும் யாரும் உண்மையென்று நம்பிவிடுவது கிடையாது. அப்படி நம்புகிறவர்களுக்குங்கூட இந்தப் பாத்திரம் உண்மையில் வாழ்க்கையில் இன்னார்தான் என்று தெரிவதற்குச் சந்தர்ப்பமே வாய்க்காது—அதாவது கதாபாத்திரமே போய்ச் சொல்லிக்கொண்டாலொழிய. அது எப்படியானாலும் கதைக்கு விஷயமாக ஏற்றுக்கொள்ளுகிற சம்பவங்களையும் பாத்திரங்களையுங்கூட நான் கேலி செய்யவோ கிண்டல் செய்யவோ ஏற்கவில்லை—கதைக்கு விஷயமாக ஏற்கிறேனே தவிர வேறு அல்ல.

இந்தத் தொகுதியில் உள்ள கதைகளில் வருகிற என் நண்பர்களுக்கு இதை நான் சமர்ப்பிக்கிறேன்.

ஏப்ரல், 12, ,55, க. நா. சுப்ரமண்யம்

தாம்பரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆடரங்கு&oldid=1526971" இலிருந்து மீள்விக்கப்பட்டது