உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு/கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில் வெளிநாட்டு வாணிகம்

விக்கிமூலம் இலிருந்து
4. கி.மு. இரண்டாம்

ஆயிரத்தாண்டில்

வெளிநாட்டு வாணிகம்.

வெளிநாட்டு வாணிக வளர்ச்சி

சீனர், யவனர் போலும், இந்தியரல்லாத இனத்தவர் பாரதப்போரில், போரிட்ட படைப்பிரிவுகளுக்குக் கொடுத்ததை மகாபாரதம் குறிப்பிடுகிறது. (CINAS fought in the Contingent of Bhagadatra of prajotisa. Magabharata. 5:18; 584:5 18:321) மகாபாரத காலத்தில், வட இந்திய அரசர்களுக்கும் இந்தியாவுக்கு வெளியிலிருந்த அரசர்களுக்குமிடையில், அரசியல் உறவுகள் இருந்தன என்பதைக் குறிப்பாக உணர்த்தும் இந்த அறிவிப்பில் பொருத்தமற்றது எதுவுமில்லை. இஃது உண்மையோ அல்லவோ , ஆனால் ஒருபக்கம் தென்னிந்தியா, மறுபக்கம் பாபிலோனியா, அரேபியா, ஆப்பிரிக்க நாடுகள், ஆகிய இவற்றினிடையே, வேதகாலத்தில் நிலைபெற்றிருந்த வாணிக உறவு, கி.மு. இரண்டாயிரத்தில் செழிப்புற வளர்ந்திருந்தது என்பதை உணர்த்த சில அகச்சான்றுகள் உள. வடமேற்கு ஐரோப்பா வின் வடகோடியின் பாலைநிலங்களாம் ஸ்காண்டினேவியா வைச் சார்ந்த, நெட்டையான உருவமும், நெடிய மண்டை ஓடும் கொண்ட வெள்ளை நிறத்துப் பழங்குடியினர் (Nordic Tribe) உரிய தமிழ்ப் பெயரில் கூறுவதானால், வடகோடி நெடிய முல்லை நிலத்து ஆயர் கி.மு. 2000இல் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்து, கோதான் முதல் கிழக்கு மத்திய தரைக்கடற்கரை வரையான பண்டை நிலவழி வாணிகத்தை அழித்துவிட்டு, சீனாவுக்கும் மிகப்பழைய நகரங்களுள் ஒன்றான டிராய் (Troy) நகருக்கும் இடையில் நடைபெற்று வந்த பச்சைமாணிக்கம் (Jafe - stone) வாணிகத்தைத் துண்டித்துவிட்டனர். அவர்கள் இந்திய ஆரியரோடு, இன்று நிலவும் பண்பாட்டுச் சார்பான மனித இனநூல் கொள்கைக்கு முரணாக, நான் கருதுவதற்கேற்ப, கொண்ட உறவு எதுவும் இல்லை. வடநாட்டில் இவ்வாறு ஆணையிட்டுத் தடுக்கப் பட்டுவிட்ட வணிக அலை. தெற்கு நோக்கி வீசி, இந்தியாவின், குறிப்பாகத் தென் இந்தியாவின் கடல்வழி வாணிகத்து மேல் வளர்ச்சிக்கு வழிவகுத்து விட்டது.

எகிப்து உடனான வாணிகம்

“வாணிகப் பொருளாகவும், கி.மு. 1580 - 1350இல், பதினே ழாவது அரசகுலத்து ஆட்சியில், திறைப் பொருளாகவும், தந்தம் பெறப்பட்டதற்கான எண்ணற்ற ஆவணச் சான்றுகள் உள்ளன. தந்தம் போலவே, தந்தத்தாலான நாற்காலிகள், மேசைகள், இழுப்பறைப் பெட்டிகள், உருவச்சிலைகளும் பெறப்பட்டன”. (Scoff’s periplus.page:61) இவை பல்வேறு இடங்களிலிருந்து வந்தன. அந்நாட்களில் எகிப்துக்கும், இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற வாணிகத்தில், பெரிய பொருள் சேமிப்பு இடமாக விளங்கிய, சோமாலிலேண்டைச் சேர்ந்த புன்ட் (punt) அவ்விடங்களில் ஒன்று. இச்செய்தி, பழைய காலத்தில் நிகழ்ந்தது போலவே, தந்தமும், தந்தத் தினாலான பொருள்களும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து நைல் பள்ளத்தாக்கிற்குச் சென்றதை உணர்த்துகிறது.

பதினெட்டாவது அரசர்குலமாகிய தேவன் (The ban) அரசகுலத்து ஆட்சியின் போது, சிறந்த எகிப்துக் கப்பற்படைகள், புன்ட் பகுதிக்கு அனுப்பப்பெற்றன. அவை திரும்பி வரும்போது, நறுமணப் பொருள் செய்யப் பயன்படும் பிசின், கருங்காலி மரம், தந்தம், பொன், லவங்கம் மணம் கமழும் புகைதரும் பொருள்கள், கண் மை, வாலில்லாக் குரங்குகள், குரங்குகள், நாய்கள், சிறுத்தையின் தோல்கள் ஆகிய பெரும் பொருட் குவியலோடு வந்தன. “சிரியா நாட்டிலிருந்தும், அரேபியா மற்றும் கிழக்கு நாடுகளின் கருவூலங்களின் பெரும் பகுதியாம், மணம் கமழ் புகை தருவான்கள், எண்ணெய், உணவு தானியங்கள், மது, பொன், வெள்ளி, மதிப்புமிக்க கல் வகைகள் ஆண்டுதோறும் செலுத்தப்பட்டன”. பாபிலோனியாவிலிருந்து, மாணிக்கக் கல்வகைகள் வரப்பெற்றன. "கி.மு. 1798-1167 இல் இருபதாவது அரசர் குலத்தில் மூன்றாம் ரமேஸஸ் (Rameses III) என்பான் ஆட்சியன் கீழ், நாட்டின் செல்வவளம் அனைத்தும் அமோன் (Amon) என்பான் மடியில் கொட்டப்பட்டு விட்டதுபோல் காணப்பட்டது. பாபிரஸ் ஆரிஸ் என்பார், (Papyrus Haris) அமோன் என்பான் கல்லறைக்காக "பாபிரஸ் ஆரிஸ்" என்ற பெயரில், தொகுத்து இயற்றிய, தம்முடைய நன்கொடை அறக்கொடைகளின் சிறந்த ஆவணத்தில், ஆண்டுதோறும், "பொன், வெள்ளி, மணிக்கல், உயர்மெருகு ஏற்கும் பச்சநிைறக் . கனிப்பொருள், மதிப்புமிக்க மாணிக்க வகைகள், செம்பு, சிறந்த நார்மடியால் ஆன அரச உடைகள், லவங்கம் 246 நாழி" என்ற தொடர்கள் இடம் பெற்றுள்ளன. (இம் மேற்கோள்கள், திருவாளர் பிரஸ்டெட் (Breasted) என்பாரின் எகிப்தின் பழைய ஆவணங்கள் (Ancient Records of Egypt) என்பதிலிருந்து எடுக்கப்பட்டன. (Schoffs periplus. p. 121-122) மேலே காட்டிய மேற்கோள்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் பொருள்களில், கருங்காலி, பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்தே சென்றது என்பது, ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ளது. மணிக்கல் உட்பட, மதிப்புமிக்க கல்வகை கள், பிற்காலத்தில், மேற்கத்தவர்களால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது பின்னர் விளக்கப்படும்.

இவ்வாணிகம், பெரும்பாலும் 18வது அரசர் குல ஆட்சியில், செல்வ வளங்கொழித்திருந்த நாட்களில், எகிப்தோடு வாணிகத் தொடர்பு கொண்டிருந்த அனைத்து நாடுகளும், ஆமோன் அவர்களுக்கு வழிபாடு செலுத்துவான் வேண்டி வந்து, அலைமோதிய காலத்தில் தொடங்கியதாதல் வேண்டும். எகிப்தியர்களால், "லாப்பிஸ் லாஸ~லி " (Lapis-Lazwli) என அழைக்கப்படும் நீலமணிக்கல், எகிப்தியர்களால் நன்மிகப் பழங்காலத்திலிருந்தும், அஸிரியர்களால் அதனினும் பிற்பட்ட காலத்திலிருந்தும் அறியப்பட்டது 'என்கிறார் திருவாளர் குட்சைல்டு (Good Cuild) என்பார்.

சலாமிஸ்ஸின் (Salarmis) மதகுருவாம் எபிபணியாஸ் (Epiphanias) என்பார், மோஸஸுக்கு (Moses) வழங்கிய சட்ட கட்டளைகள், நீலமணிக்கல்லில்தான் செதுக்கப்பட்டன எனக் கூறுகிறார். (Scoffs’ periplus page: 171). நார்மடி ஆடைகள் எகிப்திலேயே, அக்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன ஆதலாலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், அவற்றினும் உயர்தரம் வாய்ந்ததான, பிற்காலத்திற் போலவே அக்காலத்திலும் இந்தியா மட்டுமே தரக்கூடியதுமான பருத்தி ஆடைகளால் ஆனவையாதல் வேண்டும். ஆதலாலும், அரசர்க்கான உடைகள் இந்திய மஸ்ஸிலினால் தைக்கப்பட்டவையாம். வாலில்லாக் குரங்குகள், குரங்குகள், நாய்கள், சிறுத்தையின் தோல்கள் ஆகியவை பொருத்தமட்டில், ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், இப்பொருள்களும், இவற்றிற்கு இனமான பொருள்களும், மேலை நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டன. ஆதலின், இறக்குமதி செய்யப்பட்ட இப்பொருள்கள் அனைத்தும் இல்லையாயினும், இவற்றில் ஒரு பகுதி, இந்தியாவிலிருந்து வந்தனவாம் என்பதில் சிறிது உண்மையிருக்கிறது. லவங்கப்பட்டையைப் பொருத்தவரை கி.மு.15 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த அட்ஷே புஸ்ட் (Hatshe pust) என்ற அரசியாரின் படையெடுப்பு குறித்த, எகிப்து மொழிக் கல்வெட்டுக்கள் எகிப்துக்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டுவிட்ட, புன்ட் நாட்டின் அற்புதங்களில் ஒன்று, லவங்கப்பட்டை மரம் எனக் குறிப்பிடுகின்றன என்ப து குறிப்பிடப்படலாம். (Scoff’s periplus Page: 82). ஆனால், லவங்கப்பட்டை குறித்த வாணிகத்தின் ஏகபோக உரிமையைத் , தங்கள் கைகளிலேயே வைத்துக் கொள்வதற்காக, அதன் இந்தியப் பிறப்பை, மேற்கத்திய மக்களிடையே மறைத்துவிட்ட அராபிய வணிகர்களால், வலங்கம், இந்தியத் துறைமுகங்களிலிருந்தே, அவ்விடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. லவங்கம், மலபாரிலும், சீனாவிலும் வளர்கிறது. ஆனால், அதை மேலைநாடுகளுக்குக் கொண்டு சென்ற அராபிய வணிகர்கள் அதன் ஆப்பிரிக்கப் பிறப்புப் பொய்க் கவிதைகளைக் கட்டி வளரவிட்டனர், தெளிவற்ற தன்மையிலும் அறிவுறுத்தும் பகுதி, பிளைனி அவர்களின் எழுத்தில் உளது அவருடைய காலத்தில், மக்களின் பேராதரவு பெற்றிருந்த ஒருவகை லவங்கம் குறித்துத் தோம்னா (Thomna) வைத் தலைநகராகக் கொண்டிருந்த அராபியர்களின் அரசன், கெப்னிடே (Kefianitae) என்பான், அரசு ஆணை அல்லது . பொது ஏலம் மூலம் விற்பனையை ஒழுங்குபடுத்தும், முழுக்கட்டுப்பாட்டுரிமையை ஒரு காலத்தில் பெற்றிருந்தான் என்றும், அம்மரங்கள், ஆட்சியிலிருப்பபோரின் கொடுஞ் செயல் துணையாலோ அல்லது வெறும் எதிர்பாராச் சூழலாலோ, அறுதியிட்டுச் சொல்ல இயலா நிலையில், கொடிய காட்டு மனிதர்களால் எரிக்கப்பட்டுப் பெற்ற ஒரு பவுண்டு நிறையுள்ள அம்மரத்தின் சாறு, டெனாரி (Denari) என வழங்கும் ஆயிரம் உரோம் வெள்ளி நாணயம் வரை, சில சமயம் ஆயிரத்து ஐந்நூறு நாணயம் வரையும் விலை போயிற்று என்றும் திருவாளர் பிளைனி அவர்கள் கூறுகிறார். திருவாளர் பிளைனி அவர்கள் அளிக்கும் அகச் சான்றுகளில் சில அத்தகைய பேரழிவுக்கு, லவங்கத் தோட்டம் தீப் படித்துக் கொள்ளுமளவு தென்றல் காற்று கடுமையாக வீசுவதைக் காரணம் காட்டுகின்றன. ஈண்டு இரண்டு செய்திகளைக் குறிப்பிட வேண்டும். முதலாவதாக, அரேபிய ஆட்சியாளர் - கள், லவங்க வாணிகத்தின் மீது கொண்டிருந்த கடுமையான கட்டுப்பாடு இரண்டாவதாக லவங்கம் வழங்குவதில் ஏற்பட்டுவிட்ட தோல்விக்கு, உண்மையான காரணத்திற்குப் பதிலாக உதாரணத்திற்கு, இந்தியப் பகுதியிலிருந்து வரும் கடற்பயணத்தின்போது அனுபவித்த, பேரழிவு விளைவித்து விட்ட கொடுங்காற்று போலும் உண்மையான காரணத்திற்குப் பதிலாக, உள்நாட்டுக் காரணம் கற்பித்து, வாதிடும் தவறான விளக்கம். லவங்கம் கிடைக்கக் கூடிய உண்மையான வழிமூலத்தை, இடத்தை வெளியிடாமல், இது போலும் உண்மைக் காரணத்தை மேல் நாட்டு வணிகர்களுக்குக் கொடுக்க இயலாது. செல்வச் சீமானிகளால் பெரிதும் விரும்பப்படும் ஒரு நறுமணப் பொருளுக்கு வழக்கமான விலையைக் காட்டிலும், அதிக விலையைக் கொடுக்கக், கிரேக்கர்களைத் தூண்டும் குறிக்கோளுக்காகவே, அப்பொருள் கிடைப்பதில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்தி விட்டு, அத்தட்டுப்பாட்டிற்குப் பொய்யான, ஆனால் அதே நிலையில் நம்பத்தகுந்ததான விளக்கத்தைத் தருவதில் அரேபியர்கள் வல்லவர் என்பதை உண்மையில் நம்பலாம், மேற்கு இந்தியா அல்லது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வாணிக மையங்களுக்கு வழக்கமாக வந்து செல்லும் அரேபிய வணிகர்களுக்காக, வங்காளம், கொரமண்டலம், மலபார், வடமேற்குப் பகுதிகளைச் சார்ந்த இந்தியர்கள், பெரும் பாலான அப்பொருள்களைச் சீனாவிலிருந்தும், இந்தியா விலிருந்தும் கப்பல்களில் கொண்டு வந்திருக்க வேண்டும்” (Warmington Commerce betweeen the Roman Empire and India, Page: 192-193) கிரேக்க, இலத்தீன் மொழி எழுத்தாளர்கள், லவங்கம் முதலாம் பொருள்களின் மூலம் குறித்து எழுதிய . குறிப்புகளை, அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதையும், கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டைச் சேர்ந்த எகிப்தியர்கள், சீன, இந்திய லவங்கத்தை ஏடன், சோமாலி கடற்கரைகளில், இந்தியக் கப்பல்களிலிருந்து பெற்றுக் கொண்டனராதலின், எகிப்தியர் நம்பியது போலவும், கிரேக்க வணிகர், பிற்காலத்தே எண்ணியது போலவும், லவங்கம் - புண்ட் நாட்டின் அதிசயப் பொருள்களுள் ஒன்றாகாது . என்பதையும் இது தெளிவாக்கி விட்டது.

புண்ட் நாட்டிலிருந்து எகிப்துக்கு வழங்கப்பட்டனவாக, மேலே குறிப்பிடப்பட்ட கீழ்நாட்டு அரும்பொருள்களுள், எண்ணெய், தானியங்கள் ஆகியவை இடம் பெற்றிருப் பதைக் கண்டோம். அவற்றுள், எண்ணெய் பிற்பட்ட காலத்தில், இந்தியாவிலிருந்து, காலம் தவறாமல் முறையாக இறக்குமதி செய்யப்பட்டதாகப், பெரிபுளுஸ் மூலம் நாம் தெரிந்து கொண்ட நல்லெண்ணெய் ஆகும். திருநெய்யாட்டு என்பது, அரசர்களும் மதகுருக்களும் மேற்கொண்ட ஒரு விழா. நறுமணத் தைலம் காய்ச்சுவதற்கும் எண்ணெய் தேவைப் பட்டது. நறுமணத் தைலம் செய்யப்படும் தொழிற்சாலைகள், எகிப்திலும் சிரியாவிலும் இருந்தன. தானியங்கள் என்பதில் அரிசி, பெரும் சோளம், சோணை - மூடிய தினை ஆகியன பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். அட்ஸேபுஷ்ட் (Hatshe pust) அரசியாரின் படையெடுப்பும், புண்ட் நாட்டிலிருந்து கருங்காலியைக் கொண்டு வந்தது. இந்தியப் பண்டங்கள் இந்தியா விலிருந்து காலம் தவறாமல் முறையாக எடுத்துச் செல்லப் பட்ட இடம் புண்ட் நாடாகவே, அரசியார், மலபார் காடுகளில் வளர்ந்த நேர்த்தி வாய்ந்த கருங்காலியைப் பெற்றுக் கொண் டதற்குப் பெரிய வாய்ப்பு இருந்தது. (Scoff’s periplus. page:153) பாலஸ்தீனத்துடனான வாணிகம்

கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டு முடிவதற்குச் சிறிது முன்னர், எபிரேயர்கள், எகிப்தில் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுப் பாலஸ்தீனத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டனர். அவர்களோடு சென்ற இனிய மணப்பொருள்கள், புனிதத் தன்மை வாய்ந்தனவாக மதிக்கப்பட்டன. இஸ்ரேல் அரசின் தோற்றத்தில் வளம் கொழிக்கும் வாணிகம் முக்கியத்துவம் வாயந்ததாகிவிட்டது. ஆகவே அரேபிய வாணிகர்களால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட லவங்கம், எபிரேய மத குருக்களின் புனித திருநெய்யாட்டு எண்ணெய்யின் சலவைப் பொருள்களுள் ஒன்றாகிவிட்டது என்பதை அறிகிறோம். (Exod.xx) நீலமணிக்கல்லும் இந்தியாவிலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டது என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டுளது. இந்தியாவிலிருந்து எகிப்து பெற்ற அனைத்துப் பண்டங்களும், பாலஸ்தீனத்திலும் இறக்குமதி செய்யப்பட்டன எனச் சிரமமின்றி முடிவு செய்து கொள்ளலாம்.

சீனாவுடனான வாணிகம்

சீன லவங்கம், இந்தியக் கப்பற்பயணம் மூலம் அரேபியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைகளுக்கு வழி கண்டது என்றால், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில், வாணிகப் போக்குவரவு இருந்திருக்க வேண்டும். இவ்வாணிகம் குறித்த எழுத்து மூல ஆவணங்கள் சில அழியாமல் உள்ளன. யுதிஸ்டிரர் பெற்ற திறைப்பொருள்களுள் சீனாவிலிருந்து வந்த பட்டையும், குறிப்பிடுகிறது, மகாபாரதம். (சீன கமுத்பவன் அவுர்னம் - மகாபாரதம் - 2:51:1843) சீன நாட்டு வரலாற்றுப் பதிவேடுகள், கிறிஸ்தவ ஆண்டுத் தொடக்கத்திற்கு முன்னர், ஏறத்தாழ, கி.மு. 12 ஆம் நூற்றாண்டு போலும் அத்துணைப் பழங்காலத்தில், மலாக்காவோடு கொண்டிருந்த கடற்பயணத்தைக் குறிப்பிடுகின்றன. (Scoff's Periplus Page: 246). அதிலிருந்து மலேயா, இவ்வாணிகத்தின் பொருள் களஞ்சியமாக இருந்து வந்துளது. தமிழ்நாட்டில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒரு பொருளாம் வெற்றிலை, தமிழர்களால் வரையறையின்றித் தின்னப்படுகிறது என்றாலும், ஆதியில் அஃது ஓர் உள்நாட்டுப் பொருளன்று. தமிழில், அதற்குப் பொருத்தமான, இயல்பான இயற்பெயர் இல்லை. அவிக்காமல் உண்ணக்கூடிய ஒரே இலையாக அது இருப்பதால், வெற்றிலை, அதாவது, வெறும் இலை எனச் செயற்கையாலான ஒரு பெயரினாலேயே, “அது குறிக்கப்படுகிறது. தமிழ் இலக்கணத்தில் பெயர்கள், இடுகுறிப் பெயர், காரணப் பெயர் எனப் பிரித்து வழங்குவதில் காணலாம். பயன் குறித்த ஆய்வுக்கு என்னுடைய ஆரியத்துக்கு முந்திய தமிழ் நாகரீகம் (Pre-Aryan Tamil Culture - page : 13-16) என்ற நூலைக் காண்க). பிற இந்திய மொழிகளிலும், பெரும்பாலும் மலேயா விலிருந்து வந்த அதன் நுழைவு கருதி, அப்பெயர் இடப்பட்டது என்பதைக் காட்டும் வகையில், அது, இலை என்றே அழைக்கப்படுகிறது. (வெற்றிலை உண்ணும் வழக்கத்திற்கான சில பழங்குறிப்புகள், கி.பி. 5 அல்லது 6ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் காணப்படு கின்றன. உண்டு முடித்த கணவனுக்குக் கண்ணகி, பாக்கோடு “கலந்த வெற்றிலை தந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. “உண்டு இனி திருந்த உயர் பேராளற்கு, அம்மென் தினாயலோடு அடைக்காய் ஈத்த” (கொலைக்களக்காதை 5455) வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புகளை வைத்துக் கொள்வதற்காக, பல மடிப்புகள் உடையனவாகத் தைக்கப். பட்ட, இன்றும் வழக்கத்தில் இருக்கும் சிறிய பை, அடைப்பை என்ற பெயரில் ஆதி காலத்திலும் பழக்கத்தில் இருந்தது. பொன்னால் செய்யப்பட்ட அடைப்பை சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுளது, “சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்” (ஊர்காண் காதை 128) அரசர் களையும், அரசர் நிகர் செல்வர்களையும், வெற்றிலை அடங்கிய பை ஏந்துவார் எனும் பொருளுடையதான, அடைப்பைக்காரர் என அழைக்கப்படும் பணியாளர் எப்போதும் சூழ்ந்து கிடப்பர். அப்பணியாளர் பாசவர் அதாவது, பச்சிலை எனும் பொருளுடையதான பாசு ஏந்துவார் என அழைக்கப்படுவர். அரசனைச் சூழ்ந்திருக்கும், எண்பேராயம் என அழைக்கப்படும் எண்மரில், அவரும் ஒருவராவர் "பாசவர், வாசவர்" - (சிலப்பதிகாரம் - இந்திர விழவூரெடுத்த காதை - 26).

சீனாவுடன் நடைபெற்ற தலையாய வாணிகம், தொடக்கத்தில் அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டபட்டு, கற்கண்டுத்தூள் ஆகிய இவ்விரண்டில்தான். வேறு பண்டங்களின் உருவகப்படுத்தி விரித்த பெயர்களே, தமிழில், அவற்றின் பெயர்களாயின. பட்டு எனும் சொல் தொடக்கத்தில மடித்தல் எனும் பொருளுடையதாகவே, பலமுறை மடிக்கப்பட்டு, தோள் மீது அணிந்து கொள்ளும் ஆடை, பட்டு எனப்பட்டது. சீனாவிலிருந்து வந்த ஆடையும், அவ்வாறே மடித்து அணியப்பட்டதால் அப்பெயர் அதற்கும் நீண்டு விட்டது. சீனாவிலிருந்து வந்த ஒன்று எனும் பொருளில் அது சீனம் என்று அழைக்கப்படும். வடமொழியிலிருந்து கடன் வாங்கி வழங்கப்பெறும் சர்க்கரை எனும் சொல், தொடக்கத்தில் மணல் எனும் பொருள் உடையது. கற்கண்டுத் தூள் மணல் போல் காட்சி அளிப்பதால், அப்பெயர், கற்கண்டுத் தூளுக்கும் இடப்பட்டுவிட்டது. தொடக்கத்தில் கரும்பு எனும் பொருளுடையதான அக்காரம் என்ற சொல், ஆகுபெயராக, அக்கரும்பிலிருந்து பெறப்படும் பொருள் களாம் வெல்லம் சர்க்கரைக்கும் பெயராகி விட்டது. 'சீனாவில் உற்பத்தியானது எனும் பொருளில் அது சீனி என்றும் அழைக்கப்படும். பட்டும், சர்க்கரையும், தொடக்கத்தில், நறுமணப்புகை தருபொருள்கள், சிகப்புப் பவழம் (Costus), மிளகு ஆகிய இப்பண்டங்களுக்காக மாற்றிக் கொள்ளப்பட்டன. தென் இந்தியர் சீனாவுக்கும், மேற்கு ஆசியாவுக்கும் இடையில் வணிக இடைத்தரகர்களாகவும் செயல்பட்டனர். வழக்கமான கடல்வழி, கோதன் (Khotan) வழியாகவே இருந்து வந்தது. ஆனால் அடிக்கடி நிகழ்வதுபோல், துருக்கிப் பழங்குடியினரின் திடீர்த்தாக்குதல்கள் காரணத்தால், வணிகப்பாதை, தெற்குக்கு மாறித்து, தமிழ்நாட்டுத் துறைமுகங்கள், மேற்கு ஆசியாவுக்கும், கிழக்கு ஆசியாவுக்கும் இடையிலான சந்திக்கும் இடமாகிவிட்டன,