ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை[தொகு]

திருவருட்பிரகாச வள்ளலார் அருளியது[தொகு]

(திருவருட்பா- நான்காந் திருமுறை)


(எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)


(திருச்சிற்றம்பலம்)


பாடல் 01 (உலகியலுணர்)[தொகு]

உலகிய லுணர்வோ ரணுத்துணை யேனு முற்றிலாச் சிறியவோர் பருவத்
திலகிய வெனக்கு ளிருந்தரு ணெறியி லேற்றவுந் தரமிலா மையினான்
விலகுறுங் காலத் தடிக்கடி யேற விடுத்துப்பின் விலகுறா தளித்தாய்
திலகநற் காழி ஞானசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.


பாடல் 02 (உயிரனுபவ)[தொகு]

உயிரனு பவமுற் றிடிலத னிடத்தே யோங்கரு ளனுபவ முறுமச்
செயிரி னல்லனு பவத்திலே சுத்த சிவவனு பவமுறு மென்றாய்
பயிலுமூ வாண்டிற் சிவைதரு ஞானப் பான்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான பந்தனென் றோங்குசற் குருவே.


பாடல் 03 (தத்துவநிலை)[தொகு]

தத்துவ நிலைகடனித்தனி யேறித் தனிப்பர நாதமாந் தலத்தே
ஒத்ததன் மயமா நின்னைநீ யின்றி யுற்றிட லுயிரனு பவமென்
றித்துணை வெளியி னென்னையென் னிடத்தே யிருந்தவா றளித்தனை யன்றோ
சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே யெனதுசற் குருவே.


பாடல் 04 (தனிப்பரநாத)[தொகு]

தனிப்பர நாத வெளியின்மே னினது தன்மயந் தன்மய மாக்கிச்
பனிப்பிலா தென்று முள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி
இனிப்புற வொன்று மியம்புறா வியல்பா யிருந்ததே யருளனு பவமென்
றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்த மென்னுமென் சற்குரு மணியே.







பார்க்க
அருட்பிரகாச வள்ளலார் பாடல்கள்
வயித்தியநாதர் பதிகம்
திருவடிப் புகழ்ச்சி
வள்ளலார் பாடல்கள் - தெரிவுசெய்யப்பட்டவை
ஆளுடையவடிகள் அருள்மாலை
ஆளுடைய அரசுகள் அருள்மாலை
ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை [[]]