திருவடிப் புகழ்ச்சி
Appearance
அருட்பிரகாச வள்ளலார் பாடியருளிய திருவடிப் புகழ்ச்சி
[தொகு]- (எண்சீரடி யாசிரிய விருத்தம்)
- திருச்சிற்றம்பலம்
பாடல் 01 (வானிருக்கும்)
[தொகு]- வானிருக்கும் பிரமர்களு நாரணரும் பிறரும் மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
- தேனிருக்கு மலரணைமேற் பளிக்கறையி னூடே திருவடிசேர்த் தருள்கவெனச் செப்பிவருந் திடவும்
- நானிருக்குங் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே நல்லதிரு வருளமுத நல்கியதன் றியுமென்
- ஊனிருக்கும் குடிசையிலு முவந்துநுழைந் தெளியேன் உள்ளமெனுஞ் சிறுகுடிசை யுள்ளுநுழைந் தனையே. (01)
பாடல் 02 (படிசெய்பிரமன்)
[தொகு]- படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் முயன்றே பகலொளிசெய் நவமணிகள் பதித்தசிங்கா தனத்தே
- அடிசெய்தெழுந் தருளியெமை யாண்டருளல் வேண்டும் அரசேயென் றவரவரு மாங்காங்கே வருந்த
- வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும் மலரடிகள் சிவப்பவொரு வளமுமிலா வசுத்தத்
- குடிசைநுழைந் தனையேயென் றேசுவரே யன்பர் கூசாம லென்னுளமாங் குடிசைநுழைந் தனையே. (02)
பாடல் 03 (உள்ளபடி)
[தொகு]- உள்ளபடி யுள்ளதுவா யுலகமெலாம் புகினும் ஒருசிறிதுந் தடையிலதா யொளியதுவே மயமாய்
- வெள்ளவெளி நடுவுளதா யியற்கையிலே விளங்கும் வேதமுடி யிலக்கியமா மேடையிலே யமர்ந்த
- வள்ளன்மல ரடிசிவப்ப வந்தெனது கருத்தின் வண்ணமெலா முவந்தளித்து வயங்கியபே ரின்பங்
- கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே கொடும்புலையேன் குடிசையிலுங் குலவிநுழைந் தனையே. (03)
பாடல் 04 (தடையறியாத்)
[தொகு]- தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த் தத்துவங்க ளனைத்தினுக்குந் தாரகமா யவைக்கு
- விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே விளங்குகின்ற சத்தியமா மேடையிலே யமர்ந்த
- நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானவமு மளித்தாய்
- கொடையிதுதான் போதாதோ வென்னரசே யடியேன் குடிசையிலுங் கோணாதே குலவிநுழைந் தனையே. (04)
பாடல் 05 (இறையளவுந்)
[தொகு]- இறையளவுந் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய் இயற்கையதா யநுபவங்க ளெவைக்குமுத லிடமாய்
- மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேன் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை யமர்ந்த
- நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன் நினைத்தவெலாங் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
- குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே கொடும்புலையேன் குடிசையிலுங் குலவிநுழைந் தனையே. (05)
பாடல் 06 (உருவினதா)
[தொகு]- உருவினதாயருவினதா யுருவருவா யுணர்வாய் உள்ளதுவா யொருதன்மை யுடையபெரும் பதியாய்
- மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங் கலாந்த வரையதன்மே லருள்வெளியில் வயங்கிய மேடையிலே
- திருவுறவே யமர்ந்தருளுந் திருவடிகள் பெயர்த்தே சிறியேன்கண் ணடைந்தருளித் திருவனைத்துங் கொடுத்தாய்
- குருவேயென் னரசேயீ தமையாதோ வடியேன் குடிசையிலுங் கோணாதே குலவிநுழைந் தனையே. (06)
பாடல் 07 (மணமுளதா)
[தொகு]- மணமுளதா யொளியினதாய் மந்திரவா தரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
- வணமுளதாய் வளமுளதாய் வயங்குமொரு வெளியில் மணிமேடை யமர்ந்ததிரு வடிமலர்கள் பெயர்த்தே
- எணமுளவென் பாலடைந்தென் னெண்ணமெலா மளித்தாய் இங்கிதுதான் போதாதோ வென்னரசே ஞான
- குணமலையே யருளமுதே குருவேயென் பதியே கொடும்புலையேன் குடிசையிலுங் குலவிநுழைந் தனையே. (07)
பாடல் 08 (சிரம்பெறுவே)
[தொகு]- சிரம்பெறுவே தாகமத்தி னடிநடுவே முடியுஞ் செல்லாத நிலையதுவா யெல்லாம்வல் லதுவாய்
- பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப் பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
- தரங்குலவ வமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது சார்படைந்தென் னெண்ணமெலாந் தந்தனையென் னரசே
- குரங்குமனச்சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ கொடும்புலையேன் குடிசையிலுங் குலவிநுழைந் தனையே. (08)
பாடல் 09 (பற்றியபற்)
[தொகு]- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம் பான்மையொன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
- உற்றறிதற் கரியவொரு பெருவெளிமேல் வெளியில் ஓங்குமணி மேடையமர்ந் தோங்கியசே வடிகள்
- பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே பிறவாம லிறவாமற் பிறங்கவைத்த வரசே
- கொற்றமுளேன் றனக்கிதுதான் போதாதோ கொடியேன் குடிசையிலுங் கோணாதே குலவிநுழைந் தனையே. (09)
பாடல் 10 (கருவியொடு)
[தொகு]- கருவியொடு கரணமெலாங் கடந்துகடந் ததன்மேற் காட்சியெலாங் கடந்ததன்மேற் காணாது கடந்து
- வொருநிலையி னனுபவமே யுருவாகிப் பழுத்த உணர்ச்சியினுங் காணாம லோங்குமொரு வெளியில்
- மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள் மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினையி்ன் புறவே
- குருமணியே யென்னரசே யெனக்கிதுபோ தாதோ கொடும்புலையேன் குடிசையிலுங் குலவிநுழைந் தனையே. (10)
- திருச்சிற்றம்பலம்
வள்ளற்பெருமான் பாடியருளிய திருவடிப்புகழ்ச்சி முற்றும்
[தொகு]- பார்க்க:
- வயித்தியநாதர் பதிகம்
- அருட்பிரகாச வள்ளலார் பாடல்கள் [[]] [[]] [[]] [[]] [[]]
- [[]]
- திருவடிப் புகழ்ச்சி
- அருள்விளக்க மாலை
- ஆளுடையவடிகள் அருள்மாலை
- ஆளுடையநம்பிகள் அருள்மாலை
- ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை
- தெய்வமணிமாலை
- [[]]
- [[]]